Wednesday, September 4, 2013

கிராமத்தில் கிரிக்கெட் எனும் – தீராத வேட்கை:


கிராமத்தில் கிரிக்கெட் எனும் – தீராத வேட்கை: 
 

 

          தாமிரபரணி கிரிக்கெட் அணி - இதுதான் ஏரல் கிரிக்கெட் அணியின் பெயர். நாலு ஃபாஸ்ட் ப்வுளர் வைத்து ஒரு சில்லி பாய்ண்ட் ஒரு ஃபார்வெட்ர் ஷார்ட் லெக், ரெண்டு ச்லிப் வைத்துதான் தூத்துக்குடி முதல் க்ரேட் லீக் மேட்சில் ஆடுவோம்.

          
டாக், ஹெவி வாட்டர், ஸ்பிக் , டிசிடபுள்யூ என பல நிர்வாக அணியினர் ஆடும் லீக்கில் கிராமத்து அணி ஏங்களது மட்டும்தான். ஒரே ஒரு உருப்படியான பேட், ஒரு காலில் மட்டும் பேட், ரெண்டு கொட்டை கவசம் மட்டும்தான் மொத்தம் எங்களிடம் இருக்கும் கருவிகள்.

      
தம்பீ தள்ளி நில்லுப்பா அடி பட்டிறபோகுதுன்னு அட்வைஸ் செய்வாங்க வைட்டன் & வைட்டில் வரும் ஜெண்டில் மேன் கிரிக்கெட்டர்கள். ஆனாலும் ஃபார்பெர்ட் ஷார்ட் லெக்கில் இருக்கும் பொன்ராஜ் இருக்கட்டும் சார்ன்னு சிரித்து கொண்டே மூன்னாடி நீன்று காட்சி பிடிப்பான். முதல் ஐந்து ஓவரில் ரெண்டு விக்கெட் கண்டிப்பாக நிச்சயம்.

            இப்படியான நெருக்கடியான ஃபீல்ட் செட்டிங்கை பெரும்பாலான கிரிக்கெட்டரகள் அந்த காலத்தில் சந்தித்து கிடையாது என்பதாலும், மிக ஸ்டைய்லாக டிஃபென்ஸ் செய்யும் போதெல்லாம், மூன்னாடி நீன்று லபக்கென பிடித்துவிடுவான் பொன்ராஜ். ஹெல்மெட் இல்லாது இவ்வளவு நெருக்கமா நீன்று விளையாடி இருப்பது ஆச்சரியா இருக்கு இப்போழுது.

             ஒரு நாள் TAC அணியினருக்கு எதிரான லீக் போட்டி, தூத்துகுடி வஉசி கல்லூரி மைதானத்தில் விளையாட்டு. ஏரலிலிருந்து ஆள்களை கிளப்பி ஒரு டெம்போ வண்டி பிடிச்சி அப்படி இப்படி வந்து சேர்ந்தோம், இந்த ஆள்களை கிளப்புவது என்பது சாதாரன விசியம்மில்லை, அணியில் விளையாடுவதில் பள்ளியில் படிப்பவர்கள் வெகு சிலரே, அதில் ஒருவன் நான். மற்றவர்கள் ஏதாவது கடையில் வேலை செய்பவர்கள். இல்லை வேலை எதுவும் இல்லாது இருப்பவர்கள், கடை வைத்திருப்வர்கள்,  விவசாயம் செய்பவர்கள், கடையில் வேலை செய்பவர்கள், என இந்த விளையாடுக்கும் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல இருக்கும் ஒவ்வரு நபரின் பின்புலமும். இந்த ஒரு நாள் அவர்களது பொறுப்பிலிருந்து விடுதலை என்பது பெரும் முயற்ச்சியின் பலனாக இருக்கும். ஏதோ எதோ பொய் சொல்லிவிட்டுதான் பெரும்பாலோர் விளையாட வருவார்கள்.  விளையாடும் விளையாட்டு கண்டிப்பாக சோறு போடாது என்று அறிந்தும் சோறு போடும் தொழிலை விட்டு வருபவர்கள் நிறைய பேர்.  அந்த அதிசயமான திராத வேட்கையே  நினைத்து பார்க்கிறேன்.

            இந்த திராத வேட்கையோடு களம் இறங்க வரும்  நாங்கள் பேட், , பந்து என எதுவும் சரியாக இருக்காது. ஒரே ஒரு உருப்படியான பேட் இருக்கும், அதை இப்போழுது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது, எந்த தைரியத்தில் இப்படி விளையாட சென்றோமென. எங்களை பார்த்த எதிர் அணியினர். தமிபிகளா வாங்க வாங்க என வரவேறார்கள். அந்த எதிர்பாராத வரவேற்ப்பை கண்டு ஹி ஹி என முறைத்தோம்.         

   தம்பிகளா இந்தாங்க பேட், இந்தாங்க பேட், இந்தாங்க வீக்கட் கீப்பர் க்ளோவ்ஸ் என எல்லா சாதனைங்களையும் கொடுத்தார்கள், தம்பி இன்னிக்கி ஞாற்று கிழமை, சீக்கிரம் மேட்ச் முடிச்சிட்டு போகனும், நீங்க பேட் மாத்ரேன் சார் என இடையில நேரத்த வீனாக்குவிங்க. டக்கு புக்குன்னு மேட்ச் முடிச்சிருனும் என்ன. என்றார்கள். ரொம்ப தாங்கஸ் சார் என்று வாங்கி வைத்து கொண்டோம்.

   முதலில் சொன்னது போல அக்ரெசிவ் ஃபில்ட், வெக பந்து, க்ளோசப் காட்சி பிடித்து ரெண்டு பேரை வீட்டுக்கு அனுப்பினோம். மறக்கவே முடியாத ஒரு விக்கெட் ஒன்று உண்டு, லெக் சைடில் க்ளான்ஸ் செய்து விட்டு பேட்டை கையில் வைத்து சிங்கிளுக்காக ஓடினார் அந்த ஜெண்டில் பேன், அது ஒரு க்ளாசிக் சிங்கிள் அதாவது நிச்சையமான ஒரு ரண் அது. ஆனால் சிவசாமி ஃபைன் லெக்கிலிருந்து மாங்காய் எறிவது போல ஸ்டெம்மை குறி பார்த்து அடித்தான். ரண் அவுட். இப்படியான  நிர்வாக அணியினர் ஜெண்டில் மேன்களாக இருப்பார்கள், நெட் ப்ராக்டிஸ் எனும் பெயரில் பந்தை அடிப்பதுதான் அவர்களுக்கு தெரிந்த ப்ராக்டிஸ், ஆனால் நாங்கள் அப்படியல்ல, திறந்த வெளியில் ஆற்று படுகையில் புல்லில் ஆடும் சிறுத்தைகள். மேலும் மைதானத்தில் பெறும் பயிற்ச்சியை விடவும் காட்டிலும் மேட்டிலும் உழைப்பதில் பெறும் பயிற்ச்சி அதிகம். மாந்தோப்பு, புளியந்தோப்பும் தெண்ணந்தோப்பு என சுற்றியவர்கள். வீரியம் சாஸ்தி.   நெட் ப்ராக்டிஸ் மட்டும் செய்து தொப்பையும் தொந்தியுமாக எங்களிடம் ரண் எடுப்பது மிக சிரமம் என உணர வைத்தோம் அன்று.  ஸ்டைய்லாக ஒடும்போதே டேரக்ட் ஹிட் முறையில் ரண் அவுட் ஆக்கி அந்த மேட்சை ஜெயித்தோம். அப்போழுதெல்லாம் ஆஸ்திரேலியா அணியினர் மட்டுமே இந்த Direct Hit செய்வார்கள். ஆனால் ஒத்த ஸ்டைம்பை குத்தி வைத்து கொண்டு மணிகனக்காக பயிற்சி எடுப்போம். எல்லாம் ஒரு வேட்க்கை தீராத அந்த வேட்கையின் வெப்பம் இன்றும் சூடாக இருக்கவே செய்கிறது.

 கடைசியில்  மேட்ச் அவர்கள் நினைத்தவாரே சீக்கிரம் முடிந்தது ஆனால் வெற்றி பெற்றது  நாங்கள். தம்பிகளா மாங்கா எறிஞ்சே ஜெயிச்சிட்டிங்க உங்களை போல வீரியம் உள்ளவர்கள்தான் இந்த விளையாட்டுக்கு தேவை என்றார். அடுத்த மாவட்ட அணிக்கு உங்களை தேர்வு செய்வோம் என என்னென்னவோ சொன்னார்கள். அதெல்லாம் காதில் வாங்க நேரம் இல்லாது, நான் கடை திறக்கனும், நான் கடைக்கு சரக்கு வாங்கணும், நான் வீட்டுக்கு வெள்ள அடிக்கனும், நான் எங்க அப்பாவுக்கு சோறு கொண்டு போகனும், நாளைக்கு சீட்டு பணத்த ரெடி பன்னனும் என வேக வேகமாக ஊரை நோக்கி திரும்பியது எங்களது அணி.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

1 comment: