Saturday, October 19, 2013

One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம் - 2

One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம் - 2

                        ”தனிமை”  இதுதான் இந்த நாவலின் அடி நாதம்நாவலில் வருகின்ற அல்மோஸ்ட் எல்லா மனிதர்களும் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதுவும் அந்த தனிமையை கழிக்க ஏதாவது ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். யோசே அர்கார்டியா வெண்டியா  இளமையிலும் சரி முதுமையிலும்  சரி தனிமையின் பிடியிலேதான் இருகிறார், அவருக்கு ரசவாதம் முலம் தங்கத்தை பெறுகச் செய்ய வேண்டும் அதானாலே தனிமையாக அதை பற்றிய ஆராச்சி செய்துக் கொடிருக்கிறார்.  கற்ணல் அர்லியோனா தங்கத்தால் ஆன மீண்களை செய்து விற்க்கிறார் அதைப் பற்றி சொல்லுகையில்  ” கற்ணல் அர்லியோனா   ஐந்து தங்க மீண்கள் செய்த பிறகு அவைகளை மீண்டும் உருக்கி அதிலிருந்து மீண்டும் மீண்களை செய்கிறார், இதையே அவர் சாகும் வரை செய்து கொண்டிருந்தார் என்கிறார்அமரந்தா ஆடைகள்  செய்கிறாள். அதை பற்றி சொல்லும் பொழுது அவள் நெய்யும் ஆடை முடிவுக்கு என்றும் வருவதே இல்லை ஒருவேளை பகலில் நெய்த்தை இரவில் பிரித்துவிடுகிறாளோ என்னவோ என்கிறார்.
       அதாவது சோகமான தனிமையில் இருப்பவர்களின் நிலையை அல்லது செயலை செம  நக்கலா எழுதிவிடுகிறார். எந்த  நேரத்திலும்  நீங்கள் இந்த நாவலை வாசிக்கும் பொழுது  உணர்ச்சி வசப்பட மாட்டிர்கள். இந்த முறை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கிறது.
               வெண்டியா குடும்பத்தினர் அனைவரும் தனிமையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். கர்ணல் அர்லியோனா ஒன்று சண்டைக்கு போகிறார் இல்லையென்றால் தனிமையில் இருக்கிறார். ரெபேக்காவின் தனிமை கொடுமையோ கொடுமை பூட்டிய வீட்டுக்குள் பல ஆண்டுகளாக இருக்கிறாள், அவளிடம் இருந்த பணம் அரசாங்க மாற்றத்தால் செல்லாக் காசாகிவிட்ட்தைக் கூட தெரியாத அளவிற்க்கு தனிமையில் இருக்கிறாள். ஆனாலும் அதை நக்கலா சொல்லிக் கொண்டு போகீறார்.

       கார்சியாவின் எழுத்தில் தெறிக்கும் நக்கல் நையாண்டி பகடி வாசிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது.  இப்படி நக்கல் அடித்தாலும் மேட்டரிலிருந்து விலகாது செல்கிறது, நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. 
      இந்த தனிமை எதனால் வருகிறது அதன் உளவியல் காரணங்கள் என்ன? என்பதை  நம்மை கவனிக்க வைக்கிறார்.

            அவர்களது தனிமைக்கு காரணம் என்ன? வெண்டியாக்களின் திமிர், அவர்களின் தீராத தேடல் வேட்கை, அவர்களிடம் இருக்கும் பிடிவாதம், சுழலை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை, சந்தோஷம் கொண்டாட்டம் போன்றவற்றை நாடாத வாழ்க்கைஇப்படியாக அடிக்கிகொண்டு சென்றாலும். கம்ரியல் கார்சியா அவர்களது மீது மட்டும் அவரது விமர்சன்ங்களை வைக்கவில்லைவெண்டியாக்கள் வாழ்ந்த அழகிய கிராமம் புதிய கண்டுபிடிப்புகளால் ஆகும் பாதிப்பு, அந்த பாதிப்பு வெண்டியாக்களின் மீது செய்யும் ஆதிக்கம், போர், சண்டைநாட்டில் அடிக்கடி மாறும் அரசாங்கம், வெளி நாட்டு கம்பேனிகளின் ஆதிக்கம், புதிய கலாச்சாரம், உறவுகளின் மரணம் என வெண்டியாக்கள் அமைத்த புதிய சூழலையும் சேர்த்தே சொல்கிறார்.  அதாவது வெண்டியாக்களும் அவர்கள் விரும்பி அமைத்த சூழலும் அவர்களை தனிமைக்கு தள்ளுகிறது, அந்த தனிமை அவர்களுக்கு அழிவை கொண்டுவருகிறது.
          மேலே சொன்னவைகள் எதுவுமே புதியதாக இல்லையன நினைத்தால், வெண்டியாக்கள் யாரு என்பது கண்டிப்பாக புரிந்துவிடும். 

             

  தனிமையின் நூறு ஆண்டுகள் –  காபிரியேல் கார்சியாவின்  மேஜிக்கல் ரியலிசம் கதை சொல்லுதல் பற்றி சொல்லியாக வேண்டும், எனென்றால் இவ்வளவு சீரியஸான விஷயத்தை இண்ட்ரெஸ்டிங்காக ஆக்கியது இந்த கதையில் வரும் நம்ப முடியாத சில தகவல்களை நம்புகிற வகையில் சொன்ன விதம்தான்

  மேலும் இந்த நாவல் ஒரு மெட்டா ஃபிக்ஷன் கூட.  இந்த இரண்டையும் பற்றி  அடுத்த பதிவுகளில் பார்ப்போம்

No comments:

Post a Comment