One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம்-1
கப்ரியேல்
கார்சியா மார்கேஸ் எழுதிய One hundred years of solitude நாவலை கேட்டேன், வாசிக்க சோம்பேறியாக இருந்ததால்
கார் ஓட்டிச் செல்லும் பொழுது ஆடியோ பதிப்பை
கேட்டு மகிழ்ந்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு நிகரான கதையென சொல்லலாம். மெட்டி ஓலி / சரவணன் மீனாட்சி போன்ற நெடுங்க கதை ஆனாலும் கார்சியாவின் மொழி பிரவாகமும், கதையை சொல்லும் முறையாலும்
இந்த நாவலை உலகின் மிகச் சிறந்த இலக்கிய பிரதிகளில் ஒன்றாக மாற்றிவிடுகிறது. மேலும்
இப்படியான சிறந்த இலக்கிய பிரதி இனிமையான வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் சுவாரஸ்யமாகவும்
இருப்பதன் ரகசியம் கப்ரியேல் கார்சியா மார்கேஸின் மேஜிக் எழுத்துக்கள் எனச் சொல்லாம்.
நாவல் முதலில் விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் சில இடங்களில் மிக மெதுவாக
செல்வது போல உணர்ந்தேன். இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள்- பரிச்சியம்
இல்லாத பெயர்களாகவும் ஒரே மாதிரியான பெயர்களாக இருப்பதால் பெருங் குளப்பம் ஏற்ப்படுகிறது நமக்கு. ஒவ்வரு முறையும் யார்டா இது, இது இவனென்றால்
அப்படினா அது யாரு, இவனுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என செம டென்சனாக்கவுசெய்கிறது.
இந்த பெயர் குழப்பத்தை நீக்க இணையங்களில்
கிடைக்கும் கதாபாத்திர பெயர் குறிப்புகள் உதவி கொண்டு வாசிக்கலாம் இன்னும் நன்றாக புரியும்.
நாவலின் பாதி பகுதியை தாண்டும் பொழுது இந்த
பெயர் குழப்பத்திலிருந்து நம்மை நாமே விடுவிக்க முடிகிறது அல்லது நமக்கு பழகிவிடுகிறது.
ஒரு நாவல் எதை பேசுகிறது எதை சொல்கிறது
என்பதுதான் எல்லோரின் முதல் கேள்வியாக இருக்கும். இந்த நாவலை பொருத்தவரையில் அது எதை
சொல்லவில்லையென்றுதான் கேட்க்க வேண்டும் எனென்றால் அந்த அளவிற்க்கு நாவலை சமுக , சரித்திர,
அரசியல், மனிதவியல், உளவியல் என பல கோணங்களில்
இந்த நாவலை அனுக முடியும். அந்த அளவிற்க்கு மேட்டர் இருக்கு. பொதுவாக இப்படி விஷயம்
அதிகமாக இருக்கும் நாவல்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்காது, அந்த சுவாரஸ்யத்தன்மையை
அவரது கதை சொல்லும் விதத்தில் கொண்டு வருகிறார் தென் அமேரிக்காவில் உள்ள கொலம்பியா
நாட்டைச் சார்ந்த மார்கேஸ்.
இந்த நாவலின்
முதல் வரியை பாருங்களேன் – Many years later, as he faced the firing squad,
Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his
father took him to discover ice.
இதைப் போல பல
வாக்கியங்கள் இந்த நாவலில் வருகிறது. முன்று காலத்தையும் ஒரே
புள்ளியில் இனைத்து எழுதும் முறை. அதாவது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிச்
சொல்லும்பொழுது. நாவலில் இனி வரப்போவதையும்
நடக்கும் செயலுக்கு முன்பாக நடந்ததையும் சொல்வது - காலத்தை
ஒரே தளத்தில் வைத்து பார்க்கும் முறை. இந்த நெடிய நீண்ட நாவலுக்கு சுவாரஸ்யம்
தருவதில் இந்த எழுத்து முறையும்
காரனம்.
இந்த நாவலில் காலம் முன்னுக்கும் பின்னுக்குமாக தயக்கமின்றி
பயனிக்கிறது, ஆனாலும் அது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. கதை ஒரே சீராக அதாவது கால ஓட்டம்
என்கிறோமே அப்படி அல்லாமல் முன்னுக்கும் பின்னுக்குமாக சென்றுக்கொண்டிருக்கும். இந்த நாவலின் மையக் கரு “ தனிமை” க்கு காலத்திற்க்கும்
இடையில் உள்ள உறவை சூட்டிக்காட்டுவதற்க்காகவே கார்சியா இவ்வாறு எழுதும் முறையை தேர்ந்தெடுத்திருக்க
வேண்டும்.
அவர் அவரது மனைவி ஊர்சுலா மற்றும் சில நன்பர்கள்
குடும்பத்தோடு யோசே தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஊரை விட்டுவிட்டு புதிய இடங்களை நோக்கி பயணம் மேற்கொள்கிறார், அவர்களது பயணத்தின் போது,
மலைகளால் சூழப்பட்டு மிக சுத்தமான ஆறு ஓடும்
இடத்தை கண்டுப்பிடிக்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு ஊரை நிர்மாணிக்கிறார். அது மிக அழகாக இருக்கிறது,
தூய்மையாகவும், ஒழுங்காகவும் இருக்கிறது, சாவே இல்லாத ஊராக இருக்கிறது. உலகின் மற்ற
பகுதியோடு எந்த தொடர்பு இன்றி இருக்கிறது. ஊரில் உள்ள எல்லா வளங்களும் அனைவருக்கும்
சம அளவில் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் அவர்களது உரிமை என்ன அதிகாரம்
என்ன என்பது தெரிந்திருக்கிறது. யாரும் யாரையும் சுரண்டல் செய்ய தேவையில்லாது இருக்கிறது.
அதற்க்கு மொகோண்டா என பெயர் இட்டு வாழ்கிறார்கள்.
இயற்க்கையாகவே துடிப்பும் தேடல் வேட்க்கை
கொண்ட யோசே அர்காடியா வெண்டியாவிற்க்கு இந்த
ஓழுங்கு வாழ்க்கை மீது சலிப்பு தட்டவே மொகோண்டோவை எப்படி உலகின் மற்ற இடத்தோடு
இனைப்பது, உலகில் கண்டுப்பிடிக்கபடும் புதிய
விஞ்சான அறிவை ஊருக்கு எப்படிக் கொண்டு வருவதை பற்றிய சிந்திக்க ஆரம்பிக்கிறார். இதுதான் கதையின் ஆரம்பம். .
உலகின் மற்ற பகுதியிலிருந்து முழுதுமாக துண்டிக்கப்பட்ட
மெகண்டோவிற்க்கு வரும் ஒரே மனிதர்கள் ஜிப்ஸி என அழைக்கப்படும் நாடோடி கும்பல். அப்படிப்பட்ட
ஒரு கும்பலின் தலைவன்தான் மில்க்கியாதேஷ். இந்த நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுப்பிடுப்புகள் அனைவரையும் வியப்பில் ஆச்சரிப்படுத்துகிறது. யோசே அர்காடியா வெண்டியாவின் தீராத தேடல்
வேட்க்கை மில்க்கியாதேஷ் கொண்டுவரும் புதிய சாதன்ங்கள் மூலம் இன்னும் வளர்கிறது. மில்க்கியாதேஷிடம் நட்பு கொள்கிறார். வெண்டியாவின் தேடல் வேட்கை மெகெண்டோவை
மற்ற உலகின் பகுதியோடு வருங்காலத்தில் இனைக்கிறது, இப்படியான இனைப்பை வெண்டியா குடும்பத்தின்
வருங்கால சந்தினரும் தொடர்ந்து முயற்ச்சிக்கிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். இப்படியாக
மெதுவாக மெக்கெண்டோவின் ஓழுங்கு கலைக்கப்படுகிறது
மனிதர்களிடம் தனிமை வந்து குடியேறிக்கொள்கிறது. எப்படி இது நடக்கிறது எனப்தை வெண்டியா
குடும்பத்தை சேர்ந்த ஏழு தலைமுறைகளின் வாழ்வு
அவர்களது ஏற்றம், வீழ்ச்சி, மரணம் , காதல் சொல்லுவதன் மூலம் சொல்கிறார். இதுதான் கதையில்
மிகச் சிறிய சுருக்கம்.
தொடரும்……….
ரெண்டு வார்த்தைகள் சொல்லிட்டு போங்க - நன்பாஸ்
ReplyDeleteஇந்த நாவலை படிக்கலாம் என்டிருந்தேன். உங்கள் கட்டுரையை படித்ததில் இது ரொம்ப அருவையாய் இருக்கும் போல் தெரிகிறது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். நன்றி
ReplyDeleteவலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete