Sunday, October 6, 2013

இண்டர்வ்யூ நினைவுகள் :

 இண்டர்வ்யூ   நினைவுகள்:

                            நினைவுகளுக்கும்    உணர்சிகளுக்கும் அதிகம் சம்பந்தம் இருப்பதாகவே இருக்கிறது. மணிக்கனக்கில் மனப்பாடம் செய்யும் பாடம் மறந்து போகிறது ஆனால் எங்கோ எப்போழுதோ நடந்த சில உண்ர்வுப்பூர்வமான  நிகழ்வு என்றும் மறக்காது இருக்கும்.   மனித மூளைக்குள் இப்படியான உணர்வுகளாலும் விருப்பு வெறுப்பும் கொண்டு முடிக்கப்படும் முடிச்சுகளாகவே நினைவுகள் இருக்கிறது என சொல்கிறார்கள். 
                         இது  TAC   லேப் டெஸ்டருக்கான இண்டர்வ்யூ. இதுதான் எனது முதல் இண்டர்வ்யூம் கூட.  லேபில் இருந்து கொண்டு குடுவை ஆட்டி இது இப்படி அது அப்படி என சொல்லும் வேலையில் எனக்கு சுத்தமா இஸ்டமே இல்லை இருந்தாலும்  எக்ஸ்பிரியன்சுக்காக போய்ட்டு வருவோன்னு போனேன். 

                   உள்ளே வழக்கம்போல நாலு பேரு, இந்த ரூமில் உள்ள சில கெமிக்கல்களை சொல்லுப்பா என்றார். நானும் சொல்லிக்கொண்டே வந்தேன், குறிப்பா வெள்ளை அடிக்கப்பட்டிருக்கும் சுவற்றி காட்டி Calcium Carbonate என சொன்னேன். ஓகே குட் என்று அடுத்த கேள்விக்கு சென்றார்.  அந்த கேள்வியும் அதற்க்கு நான் சொன்ன பதிலுக்காகவும் என்னை போட்டு பிராண்டி விட்டார். அவர் கேட்டது இதுதான். உன்னிடம் ஒரு திரவம் தருவேன், நீ அதை ஆசிடா அல்லது அல்கலியா ( காரமா) என சொல்லனும் எப்படி சொல்லுவ என்றார்?
                    நானும் எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொன்னேன், ஆனா அவரு தம்பி உன்னிடம் வேறு எதுவும் தர மாட்டோம் அந்த திரவம் மட்டும்தான் என்றார். மனதில் இதற்க்கு ஒரு பதில் ஓடிக்கிட்டே இருந்திச்சி ஆனால் சொல்ல பயமா இருந்திச்சி, எதுக்கு வம்புன்னு, நானும் தெரியலன்னு சொன்னேன், இல்லப்பா ட்ரை செய் என்றார், சொல்லு சொல்லு என  ஏதோ எனது மனதில் இருப்பதை அவர் கண்டுபிடித்தது போல சொல்லுப்பா கமான் சொல்லு என்றார் நானும் அவரது encouragementக்கு  மயங்கி - “லைட்டா டேஸ்ட் செய்து பார்ப்பேன்” என்றேன். வெரிகுட் வெரிகுட் எப்படி டேஸ்ட் வைத்து சொல்லுவாய் என்றார். நானும் வெகுளியா ஆஸிட் புளிக்கும் என்றேன். அப்படியா எப்படி என்றார் ஆமாம் சார் எலுமிச்சை - சிட்ரிக் ஆஸிட், புளியம்பழம் - டார்டாரிக் ஆஸிட் எல்லாம் புளிப்பா இருக்கும் சார் என்றேன் உற்ச்சாகமாக. மேலும் ஆஸிட் Taste Sour என படித்திருக்கிறேன் என்றேன். 


                     ஒரு அரை நிமிடம் அமைதியாக இருந்தவர், டக்கென கோபத்தில் அப்படின்னா தெரியாத திரவத்தை நீ டேஸ்ட் செய்து செத்து போவாய் நாங்க அதற்க்கு பதில் சொல்லனும் அப்படித்தானே என்றார். நான் தந்தது சைனேடாக இருந்தால் நீ காலி, அதுவே Strong sulfuric acid / nitric acid என்றால் வாயெல்லாம் வெந்து போகும். என்ன கெமிஸ்ட்ரி படிச்ச என்றார். இப்படியா எதை பார்த்தாலும் குடிச்சி பார்க்கிறது, ..... என கடி கடி என கடிக்க ஆரம்பித்துவிட்டார். அது வந்து சார்...... என முழிக்க அரம்பித்துவிட்டேன். இத ஏதிர்பாக்கவே இல்லை. ஸ்பின் பவிலிங்ல சடனா ஒரு பவுண்சர் போட்டா எப்படி இருக்கும், முஞ்சி மொகரெல்லாம் பிஞ்சி போனது போல ஒரு ஃபில். 

                      எப்பன்டா வெளியே போகலாமென நெழிய அரம்பித்தேன். சரி ஓகே நீ போகலாம் என்றார். நானும் எனது ஃபைலை எடுத்து கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னார் நீதானே தம்பி சொன்னே இந்த சுவற்றில் Calcium carbonate இருக்கு என என்றார்.

                         அஹா, ஆமா இல்ல, இது தெரியாமல்லா போச்சி என யெஸ் சார் அதை போட்டு பார்த்து Brisk Effervescence வந்தால் அது ஆஸிட் சார் என்றேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சிரித்தார், நான் ஞ ஞ என விழித்து வியர்த்து வெளியேறினேன்.

 அடுத்து
சென்னை ஸ்பிக் ஹவ்ஸில் வைத்து நடந்தது அந்த இண்டர்வ்யூ. உள்ளே செல்லுவதற்க்காக நடந்து சென்று கொண்டிருக்கும் போது எனது மனதில் இருந்ததல்லாம் ஒன்றுதான் எப்படியாவது இந்த வேலை கிடைசிடனும் அப்படியே வளைகூடாவிற்க்கு சென்றுவிடனும் என்பதுதான்.

உள்ளே நான்கு ஐந்து பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். முதலிம் படித்த கல்லூரி எனது ஊர், எனது விளையாட்டு சர்டிப்பிக்கேட் பற்றிய கேள்விகள். பூட் பாலில் எந்த பொசிஷனில் ஆடுவே, ஏன் உன்னை ரைட் விங்ல ஆட வைக்கிறாங்க போன்ற கேள்விகள். ஆரம்பமே அற்புதமாக இருந்தது.

அப்புறம் ஒருவர் கெமிஸ்ட்ரியில் உனக்கு பிடித்த பகுதி ஏது என்றார், நான் physical chemistry என்றேன். ஒ அப்படியா physical chemistryல் எது உனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். நான் யோசிக்காது கெமிக்கல் கைனட்டிக்ஸ் என்றேன். இன்று வரை எதற்க்கு அப்படி சொன்னேன் என தெரியவில்லை. கெமிக்கல் கைனடிக்ஸில் இருந்து சில கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தேன். Negative Catalystக்கு example தெரியுமா என்றார். ப்ரேக் போட்டு நின்னு போச்சி வண்டி, தெரியலியே சார் என்றேன். its ok. என உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் தொழிற்ச்சாலைகளை பற்றியும் அங்கு தயாரிக்கும் பொருள்களை பற்றி சொல்ல முடியுமா எனக் கேட்டார், நானும் DCWல் ஆரம்பித்து Heavy water வரை சொல்லி முடித்தேன். அவர் இந்த ஹெவி வாட்டர் எதுக்கு தம்பி பயன்படுத்துகிறார்கள் என்றார், நானும் அது Nuclear reactorல் ரியாக்ஸனை கட்டுப்படுத்த மாடரேட்டராக என்றேன். அப்படினா அதை Negative Catalyst என சொல்லலாமா? எனறார். 
ஆஹா ஆமாம் யெஸ்  சொல்லலாம் என்றேன். 

 இண்டர்வ்யூவில் பாடம் புகட்டிய இந்த இரு நிகழ்வுகளும் என்றும் மறக்காது இருக்கிறது. 

மிக அருமையான நேர்காணல் அது என்பது அந்த வேலை கிடைத்தனால் மட்டுமல்ல இப்படியான நிகழ்வுகளால் என சொல்லுவேன். வாழ்க்கையில் மறக்கவே மறாக்காது இந்த Negative Catalyst.
 

No comments:

Post a Comment