இங்குக் கத்தாரில் ஒரு ரியாலுக்கு 10 குப்புஸ் கிடைக்கும். இது நம்வூர் சப்பாத்தி போலச் சட்டியில் சுடப்படுதில்லை, அடுமனையில் வைத்துப் பேக் செய்வது போலச் செய்கிறார்கள். சுவை என்று எதுவும் விஷேசமாக இல்லை ஆனாலும் பசியைப் போக்கும், சத்தானதாகவும் இருக்கும்.
கடும் வெயிலிலும் காற்றிலும் உழைக்கும் மக்களின் விருப்ப உணவு, ஏழை பணக்காரன் என அனைவரின் உணவிலும் முதலிடம் பிடிக்கும்.
குப்புஸை மட்டும் தனியாகவும் சாப்பிடலாம், தேநீரில் தொட்டுச் சாப்பிடலாம், ஹம்மூஸ் எனப்படும் கொண்டை கடலைத் துவையல் வைத்துச் சாப்பிடலாம், வெறும் ஆலிவ் எண்ணையைத் தொட்டும் சாப்பிடலாம். வெறும் வெங்காயம் ரெண்டு மிளகாய் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு - அப்படியாவது பசியை போக்கனும்மில்லியா. தமிழர்கள் இதை வைத்து உப்புமா செய்கிறார்கள், சில்லி குப்புஸ் செய்கிறார்கள். எப்படியெல்லாமோ அதை நம்மூர் சுவைக்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் அது நம்மூர் மசாலாக்களோடு எடுபடுவதில்லை எனச் சொல்லுவேன். குப்புஸை ஹம்முஸோடு சாப்பிடவே எனக்குப் பிடிக்கும்.
குப்புஸை அரேபியர்கள் சாப்பிடுவதை கண்டிப்பாக இங்கே சொல்லியாக வேண்டும், இரு கைகளாலும் குப்புஸை எடுப்பார்கள், அதை இரண்டாக கிழித்து இரு துண்டாக்குவார்கள், அந்த இரு தூண்டுகளிலிருந்து ஒரு பகுதியை மட்டும் கைகளில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக அதை பிய்த்து கறியை அதை வைத்தே பிய்த்து கறியை அதோடு லாவகமாக குப்புஸூக்குள் சுற்றி வாய்க்குள் செலுத்துவார்கள்.
இப்படியாக குப்புஸ் பிய்த்து சாப்பிடும் முறை கலாச்சாரம் சார்ந்ததாகவும் இருக்கிறது, யூத /அரேபிய கலாச்சாரங்களில் இப்படியாக இரண்டாக பிய்த்து பிரிப்பது கொடுப்பது உணவை பகிர்ந்துகொள்ளுதை நினைவுப்படுத்துவதாகவும் இருக்கிறது.
குப்புஸூக்குள் சிறிது வெள்ளரிக்காய், லெட்ட்யூஸ் இலை ஹம்முஸ் வைத்துச் சாப்பிட்டால் வெஜிடபுள் சாண்ட்விஜ், அதற்க்குள் ஃபெலாஃபெல் எனப்படும் வடையை வைத்தால் பெலாபெல் சாண்ட்விஜ், அதற்க்குள் சிக்கன் வைத்தால் சவர்மா, என இந்தக் குப்புஸீக்குள் எதையாவது வைத்து அதன் சுவையை எடுத்துச் சென்று கொண்டிருப்பார்கள். ஒரு குப்புஸ் சாப்பிட்டால் போதும் கம்முன்னு வயிறு இருக்கும். அற்புதமான அரேபிய உணவு.
முதல் முதலில் குப்புஸை பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, ஆஹா இது யேசப்பா உண்ட அப்பமோ? என்றுதான், இயேசு அக்காலத்தில் உண்ட குப்புஸ் இப்போது இருக்கும் வடிவத்திலும் சுவையிலும் சிறிதாவது ஒற்றுமையோடு இருந்திருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். எனென்றால் இந்த அப்பம் -ரொட்டி இயேசுவின் சொற்களிலிலும் வாழ்விலும் இணைந்து வந்துகொண்டே இருக்கும், குறிப்பாக அவரது கடைசி இரவு போஜனம்.
”அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்துச், ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது எண்ணுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.”
அப்பத்தை பிட்டு /பிய்த்து கொடுப்பதை இயசுவின் வாழ்வோடு ஓப்பிட்டு இயேசு எப்படி தன்னை மற்றவர்களுக்காக பகிர்ந்து வழங்கி தியாகம் செய்தார் என்பதை நினைவுப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கு பிய்த்து வழங்கப்படும் அப்பம் இயேசுவாக நம்மப்படுகிறது. அது கிருஸ்தவ மத நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்குகிறது.
நானும் ஒரு பாக்கெட் ஊருக்கு வாங்கிட்டு போய் இதுதான் இயேசு உண்ட அப்பம் என கொடுத்தேன், பரவசத்தோடு உண்டார்கள் மக்கள்.
இங்க பாருங்க குப்புஸ்ல ஆரம்பித்து இயேசப்பாவிற்க்கு வந்தாச்சி.
உங்கள் குப்புஸ் அனுபங்களை பகிருங்கள் வளை கூடா நட்புகளே.
அய்யா ஒருவராவது கமெண்ட் செய்யக் கூடாதா? திட்டவாது செய்யலாமே
ReplyDeleteகுபூஸ் பற்றிய நல்ல பதிவு...நுட்பமான விஷயங்களுக்கு நன்றி ...
ReplyDeleteஉங்கள் வருகையும் உங்கள் கருத்துக்களையும் வரவேற்க்கிறேன் . நன்றிகள்
Deleteதெரிந்திராத தகவல்கள் நன்றி.துருக்கி Flate Bread பார்த்திருக்கேன் அது முற்றிலும் வேறு.
ReplyDelete// ஒரு குப்புஸ் சாப்பிட்டால் போதும் கம்முன்னு வயிறு இருக்கும்.//
அரிசி சாதம் சாப்பிட்ட மாதிரியிருக்குமாக்கும்.
குப்பூஸ் ரொட்டியை பீடா (pita) ரொட்டி என்ற பெயரில் அமெரிக்காவில் விற்கிறார்கள். யூதர்களின் பஸ்கா பண்டிகையின் போது செய்யப்படும் மேட்ஸோ - matzo -எனும் புரையூட்டாத ரொட்டிகளே (unleavened bread) இயேசு சாப்பிட்டதாக முன்பு படித்திருக்கிறேன். ஆனால் ஈஸ்டு கொண்டு செய்த பிடாவை இயேசு கிருஸ்துவுடன் தொடர்பு படுத்தி ஊராரை ஏமாற்றி இருக்கிறீர்கள்! :)
ReplyDeleteஏன் சகோ நந்தவனத்தான் இந்த குப்பூஸ் ரொட்டிக்குள்ளேயும் மைதா பிரச்சனை இருக்குமா?
Deleteஹஹா... பாயின்டை சரியாக பிடித்தீர்கள், மைதா ரொட்டிதானே இது!
Deleteநன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு. பாஸ்கா பண்டிகையில் மட்டும்தானே புளிக்காத அப்பம், மற்ற நாட்களில் இதை போல குபூஸாகத்தான் இருந்திருக்க வேண்டும். மேலும் கடைசி ராப் போசன விருந்து ( Last Supper) பாஸ்க்கா பண்டிகை விருந்து என நான் எங்கும் படிக்கவில்லை. பாஸ்க்கா பலியாக செம்மறி ஆட்டை பலி கொடுப்பார்கள், பின்னர் புளிக்காத ரொட்டியை நின்றவாறே சாப்பிடுவார்கள் என தெரியும். இந்த பாஸ்கா பலியாக செம்மறிக்கு பதில் இயேசு என கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது பாஸ்கா விருந்து இந்த இரவுக்கு அடுத்த நாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். மீண்டும் எனது நன்றிகள் - நன்பா.
Deleteகுபூஸ் பற்றிய உங்கள் பதிவு ஆடு ஜீவிதம் நாவலில் வருகிற சம்பவங்களை ஞாபகப் படுத்துகிறது. மிகக் கொடூரமான அர்பாபு கதை நாயகன் நஜீபுக்கு காட்டுகிற நாளாந்த கருணை ஒரு சில குபூஸ்கள் மாத்திரமே
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றிகள் நன்பா, நான் இன்னும் ஆடு ஜீவிதம் வாசிக்கவில்லை, நினைவுபடுத்தியதற்க்கு நன்றி
Deleteகுப்பூஸை அப்படியே சாப்பிட்டால், தடிமனாக சாப்பிட கஷ்டமாக இருக்கும். எனவே அதை இட்லியை அவிப்பது போல் அவித்தால், மிருதுவாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கிறது. இது இந்த பச்சை-மஞ்சள்-கறுப்புத் தமிழனின் கண்டுபிடிப்பு!!!
ReplyDelete//அதை இட்லியை அவிப்பது போல் அவித்தால், மிருதுவாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கிறது.//
Deleteகுப்பூஸ்சை பற்றிய நல்ல விளக்கம் கிடைச்சிட்டுது.
தோசை கல்லில் எண்ணை தடவி சுட வைப்பது சுலபமானது அல்லவா? அவனில் சுடவைப்பது இன்னமும் நன்று!
Deleteதோசைக் கல்லில் குப்பூஸை சுட்டால் அது ஒரு மாதிரியாக விறைத்துவிடுகிறது. இட்லி போல அவித்தால் நன்றாக வருமென்றுதான் நினைக்கிறேன்.
Deletethank you very much for your comments.
How to make this?? Please specify???
ReplyDeletehttp://fajishotpot.blogspot.com/2010/06/kubus-or-pita-bread.html
ReplyDeleteTry it with Hummus...
http://www.mamaslebanesekitchen.com/mezza/hummus-recipe-from-scratch/
என்ஜாய்!
எனது பதிவுகளில் இதற்க்குத்தான் இதனை பிண்ணுட்டம் வந்துள்ளது, இதை வாசிக்கும் பொழுது உண்மையிலே மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நன்றிகள், நன்றிகள் நன்றிகள்.
ReplyDeleteYour comments mean Lot to me dear fiends.
I can understand the writers mentality after releasing his writings
ReplyDelete....
ஆமாம் நன்பா, எதையாவது சொன்னல்தான் திருப்தி வருகிறது. புறக்கணிப்பு கொடுமை.
DeleteAfter first time - when ever I am going to Dubai - I use to have this - with Dhall / any other veg side dish. believe me - it tastes too good. one piece is more than enough. But, only Pakistanis are making this Good. I had with Malayali hotel also - sorry. they are the best.
ReplyDelete