Wednesday, November 13, 2013

பரதேசி பரதேசி பரதேசி:

 பரதேசி பரதேசி பரதேசி:

     நேற்று  நைட் ஷிப்ட் பார்த்துவிட்டும் தூங்கும் பொழுது ஒரு ஃபேஸ்புக்கில் பதிவாளர் பிச்சைக்காரன் ஸ்டேடஸ் ஒன்று கனவில் வந்தது, விழித்த போது அது முழுமையாக நினைவில் இல்லையென்றாலும் எப்போழுதோ நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்தியது.

     கல்லூரி கடைசி ஆண்டில் பாம்பாய்ச் சுற்றுலா சென்றோம், காரணம் பம்பாய் திரைப்படம்தான்.  இந்தப் வரி இந்த பதிவுக்கு மிக முக்கியம்.
        சோட்டா காஸ்மீர் என நினைக்கிறேன் அதற்குப் போகும் வழியில் சினிமா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் ஏக சந்தோஷம் வண்டியை நிறுத்தி சிறிது தூரம் அந்தக் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்தோம். முதலில் ஒன்றும் புரியவில்லை அதன் பிறகுதான் கண்டுபிடித்தோம் அங்கே இருப்பது அமீர் கான் மற்றும்,   நடிகை கரிஸ்மா கப்பூர் என்று ஆஹா என்ன கலர் கலர் அவ்வளவு கலர் தொடக் கூட மனம் வராது, அப்படி ஒரு தூய வெண்மை. அமீர் கான் சோகமா இருந்தார் முகத்தில் எகப்பட்ட அடிபட்டது போல ஒப்பனை.

            நாங்கள் அமைதியாக ஷூட்டிங்கைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம்,  அங்குள்ள துணை நடிகர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களோடு ஃபோட்டோ எடுத்தார்கள்  நண்பர்கள், கலர் கேமரா வைத்திருந்தாலும் ஃபோட்டோ எனக்கு மட்டும்தான் எடுக்கத் தெரியும் என்கிற பில்ட செய்திருந்தாலும் மேலும் இப்படியான  நடிகர்களிடமெல்லாம் நின்று போட்டோ எடுக்கும் செயலை மிகக் கேவலமான சீப்பான ரசனை என்கிற மண்டை வீக்கத்தாலும் நண்பர்களை அந்த நடிகர்களோடு போட்டோ  மட்டுமே எடுத்தேன், மனசுக்குள் செம நக்கலாக நகைத்துக் கொண்டே.

      அடுத்துக் க்ரீஷ்மா, அதற்கடுத்து அமீர் கான் என்று வளைத்து வளைத்து எடுத்துக்கொண்டார்கள். மக்கா என்ன எடு, எல மக்கா ப்ளிஸ் மக்கா என்னையும் அமீரையும் சேர்த்துக் க்ளோஸ்ல எடுல என்று எடுத்தது எனக்கு ரொம்ப கேவலமாக இருந்தது, இருந்தாலும் நண்பர்களுக்காக எடுத்தேன்.  நிர்மல் நீ வேனும்னா போய் நீல்லுடே நான் எடுக்கேன் என்றார்கள். சாரி மக்கா இப்படியான நடிகர்களோடு  ஃபோட்டா எடுப்பது அவர்களிடம் வழிவதை நான் ரொம்ப கேவலமாகக் கருதுகிறேன் என்று  பெருமையாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். பஸ்ஸில் ஏறியதும் எல்லோரும் திட்டினானுவ, நல்ல சான்ஸ் இது மிஸ் பண்ணிட்டா பக்கியென.

       வீட்டுக்கு வந்து இந்தக் கதைய சொன்னேன் ஃபோட்டோ டெவலெ செய்து வந்திருந்தது, அமீர் கானைக் காட்டினேன் தங்கைகள் ஆவலாகப் பார்த்தார்கள், ஆமாம் நீ எங்கே என்றாள், அஃப்ட்ரால் நடிகர்களோடு எல்லாம் ஃபோட்டோ எடுப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது, அது இந்த நிர்மலில் ஸ்டையில் கிடையாது என்றேன். இந்த மண்ட வீங்கிதனத்துக்கு ஒன்னுக்கும் கொறச்சல் கிடையாது என்று காரி துப்பாது துப்பிவிட்டுப் போனார்கள்.

   ஆனால் இப்பொழுது  நினைத்துப் பார்க்கும் பொழுது எதுற்க்கு ஒரு அற்புதமான வாய்ப்பைத் தவற விட்டிருக்கனும்னு தோனுது, மரம், மலை குப்பை தொட்டி, இரயில், பூ, கடல், அலை என எத்தனையோ விஷயங்களோடு ஃபோட்டோ எடுக்கும் நாம் அமிர் கானிடம் ஃபோட்டோ எடுத்திருக்கலாமே எனத் தோன்றுகிறது. இந்த அளவுக்கா கேவலமாக மண்டையா இருந்திருக்கிறோம் என வருத்தமாகவும் இருக்கிறது.
        இன்றும் அன்று எடுத்த சீன் நினைவில் இருக்கிறது ராஜா ஹிந்துஸ்தானி படம் சோகமாகக் கரீஸ்மா, அவள் அருகில் அவளது அப்பா, ஸ்பாட்டில் ஓலித்த பாடல்   -பரதேசி பரதேசி பரதேசி பல்தேசி பரதேசி பரதேசி பரதேசி பல்தேசி
பரதேசி பரதேசி பரதேசி பல்தேசி பரதேசி பரதேசி பரதேசி பரதேசி


   

2 comments:

  1. ஒரு கோயின்டன்ஸாக இதே படத்தின் ஷுட்டிங்கை கோவை விமான நிலையத்தில் கல்லூரி நண்பர்களுடன் பார்த்தேன். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஊட்டியில்தான் எடுக்கப்பட்டன. ஊட்டியில் அமீர்கானுக்கு சொந்தமாக ஒரு வீடும் உண்டு.
    கோவை விமான நிலையத்தில் எல்லோரும் போய் ஆட்டோகிராப் வாங்கினர் மற்றும் போட்டோ எடுத்தனர். அமீரும் கரிஷ்மாவும் தள்ளித்தள்ளி சேரில் அமர்ந்திருந்தனர். அமீர் அதில் நடித்த பையனும் விளையாடிக்கொண்டிருந்தார். காவலுக்கு நின்ற போலிஸ்காரர் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருந்தார். அவரிடம் அதற்கு கெஞ்ச வேண்டுமாம். நான் போடா வெண்ணைகளா என போகவில்லை. எனது நண்பர் கரிஷ்மாவை அருகில் பார்த்தே தீருவது என கேந்தி பிடித்து அருகில் போய்விட்டு வந்தவன், "என்னாடா இது அரையடிக்கு எதையோ பூசியிருக்கா, தோலே தெரியமாட்டீங்குது" என்றான் மிகவும் ஏமாற்றத்துடன்.

    ReplyDelete
  2. அன்புள்ள நந்தவனத்தான் - உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி.

    ReplyDelete