Eccentricity - என் வழி தனி வழி
Eccentricity அப்படிங்கிற பற்றி நல்ல உரையாடல் நடந்தது முக நூலில். இந்த Eccentricity என்பதை கிறுக்குத்தனம் / பைத்தியகாரத்தனம் என்றும் சொல்லாம். இப்படியான பைத்தியகார பழக்க வழக்கம் நம்மிடமும் இருக்கும் பொதுவா அது வெளியே தெரியாது அல்லது அதை தெரிந்து கொள்ள தவறிவிடுவோம். இந்த பைத்தியக்காரதனத்தில் ஒரே ஒரு மேட்டர் மிக முக்கியமானது, இந்த செய்கையால மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது ஆனால் அந்த செய்கை மற்றவர்களின் செய்கையை விடவும் வித்தியாசமாக இருக்கும்.
உதாரணம் மிஸ்கின் கண்ணாடி அனிவது - அவர் எதற்க்காக எப்போழுதும் கண்ணாடி அனிகீறார் என தெரியாது ஆனால் இருட்டு அறையிலும் அனிந்து இருப்பது பொதுவான பழக்கமல்ல என்று சொல்லாம். ஆனால் அவர் கண்ணாடி அனிவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அதுதான் முக்கியம்.
இதைப் போல பிரபலங்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களின் மைய விலக்கு செய்கைகளை பட்டியலிட முடிகிறதா எனப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த மைய விலக்கு செய்கைகளுக்கு இப்போழுது சமுகத்தில் எதிர்பும் கேலியும் கிண்டலும் இருந்து கொண்டே இருக்கிறது. மனிதன் பல விதமான செய்கைகளை செய்யக் கூடியவன் என்பதை மனதில் வைத்திருந்தால் இப்படியான எதிர்ப்பு இருக்காது. பலர் இதை சைக்கோதனம் என்றும் ஒரு வித நோயென்றும் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல, இதை நோயாக பார்க்கும் மனதுதான் பக்குவம் இல்லாதது என்பேன். இப்படியான காரணங்களாலே இந்த எக்ஸெண்டிக் காரர்கள் தனிமையாக இருப்பார்கள், சமுக இனைப்பில் அவர்களை இனைத்துக் கொள்ள கஸ்டப்படுவார்கள், சிலர் கூச்சப்படுவார்கள், நண்பர்களை மெயின்டேய்ன் செய்ய கடினப்படுவார்கள்.
இந்த எக்ஸென்ட்ர்க்குளின் ரசிகனாகவே எப்பொழுதும் இருந்து வந்துள்ளேன் என்று இன்று படுகீறது. 45 வயதிலும் அதி தீவிரமாக பெந்10 கார்ட்டூன் ரசிகர் ஒருவர் எனக்குத் தெரியும், டி ஷ்ர்ட் என்றால் சிகப்பு கலர் மட்டுமே போடும் நபர் ஒருவர், தூங்கும் முன் ஓப்பனை செய்து தூங்குவார் ஒரு நண்பர், இன்று வரை 10 கிமி நடந்தே வேலைக்கு செல்லும் 75 வயது தாத்தா அவருக்கு காரில் செல்லுவது பஸில் செல்லுவது பிடிக்காது முடிந்த வரை தவிர்த்துவிடுவார் சில நேரம் இரவு 12 மணிக்கெல்லம் கூட நடந்தே எங்கும் செல்லுவார், புதிய இடம் எங்கு சென்றாலும் எப்படியாவது எங்காவது அவரின் பெயரை எழுதிவிடுவார் ஒரு நண்பர். இப்படி பல பல.... மேல் மூக்கிலிருந்து உச்சி நெற்றி வரை படிப்படியான பொட்டுக்களை வச்சிருக்கும் ஒரு அக்கா, பத்து விரலிலும் மோதிரம் அனிந்திருக்கும் நணபர், இப்படி பல பல....
இறை நம்பிக்கைகள், நேர்ச்சைகள் காணிக்கைகள், சடங்குகள், முதல் முறையாக செய்ய எடுத்துக் கொள்ளும் விசித்திர தின முறைகள், சம்பளம் வாங்கியவுடம் நாம் வைத்திருக்கும் ரொட்டின், குளிக்கும் பொழுது செய்யும் அழிச்சாட்டியம், குடிக்கும் பொழுது, படுக்கையில் இருக்கும் எக்ஸ்ட்ரிம் எக்ஸெண்ட்ரிக்தனத்தை பற்றி பேச பல மனி நேரமாகும்.
சிலர ஏதாவது பொருளை சேர்த்து வைப்பார்கள் - நாம் பயணம் செய்த பஸ் மற்றும் ரெயில் டிக்கெட்டுகள், வாங்கிய பொருள்களின் ரசிதுகள், தெருவில் வினியோகிக்கும் பிட்டு நேட்டிஸ்கள், ஸ்டாப்பு, நானயங்கள், சினிமாக்கள் டிவிடி, கார்ட்டுண் கேரக்டர் டி ஸேர்ட், சாவ்டுவேர்கள், தேவையோ தேவையில்லையோ எல்லாவற்றிலும் ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்வர் சிலர், கழுத்து மறைக்கும் வரை பொத்தான்கள் போட்டு முழுக் கை அனிந்து செல்வார்கள் சிலர்.
நேரம் கிடைத்தால் Big Bang theory எனும் தொலைக்காட்சி தொடர் ரெண்டு மூணு எப்பிசோடு பாருங்கள். அதில் ஷெல்டன் கூப்பர் எனும் பிஸிஸ்ட் வருவார் - எக்ஸெண்ட்ரிக்கின் திலகம் அவர். ஸ்டார் ட்ரெக் ரசிகர், ஒரே ஸ்டையிலிலே உடை அனிவார், பேசுவது எல்லாம் அறிவியல்தான், பொம்மை ட்ரெய்ன் சேகரிப்பாளர், நாண்கு பேர் விளையாடும் செஸ் விளையாட்டை கண்டுபிடிப்பார், எப்பொழுதும் ஒரே இடத்தில் இருந்துதான் டிவி பார்ப்பார் என பல வித விதமான எக்ஸெண்ட்ரிக் பழக்க வழக்கம் கொண்டவர், இருந்தாலும் அவர்களது நண்பர்கள் அவரை அருமையாக ஹேண்டில் செய்வார்கள். You tubeல் The BigBang Theory என தேடினால் கிடைக்கும்.
க்ரியேட்டிவ் / படைப்பாளிகளும் இப்படியான மைய விலக்கு பழக்கவழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், விஞ்ஞானிகள் , கண்டுபிடிப்பாளர்கள், ஃபாஸன் டிசைனர்ஸ் என அடிக்கிக் கொண்டே போகலாம். இப்படியான பழக்கம் கொண்டவர்களால்தான் உலக சரித்திரங்கள் மாற்றி அமைக்கப்படுள்ளது, இவரகளே வாழ்வின் புதிய கோணங்களை காட்டுபவர்களாக இருக்கிறார்கள். கவிதை சொல்லிகள், இலக்கிய படைப்பாளிகள் என பலர் இப்படியான மாற்று சிந்தனை, மாற்று பழக்க வழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.
அடுத்த முறை உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத பழக்க வழக்கம் கொண்டவரை கண்டால் -ஒரு புண்ணகை ஒன்றை கொடுத்துவிடுங்கள். பாவம் அவர்கள்.
யாருக்கு தெரியும் அந்த பழக்கம் அவரகளை உயிரோடு வைத்திருக்கக் கூடும்.
வணக்கம்
ReplyDeleteஅருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..இறுதியில் கூறிய கருத்து மிக நன்றாக உள்ளது..
(அடுத்த முறை உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத பழக்க வழக்கம் கொண்டவரை கண்டால் -ஒரு புண்ணகை ஒன்றை கொடுத்துவிடுங்கள்)
தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-