Monday, December 9, 2013

படம் பார்த்து கதை சொல்லு: முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட சிறுகதை போட்டி.

படம் பார்த்து கதை சொல்லு:    

                    பிரபல பதிவர் பிச்சைகாரன் மற்றும்  ஈழத்து கவிதை சொல்லி அன்பு தோழர் றியாஸ் குரானா தலைமையில்  முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட சிறுகதை போட்டி.

பரிசு தொகை விபரம்:
முதல் பரிசு: ரு 3000
இரண்டாவது பரிசு: ரூ 2000
மூன்றாவது பரிசு: ரூ 1000
 சிறப்பு பரிசாக : மூன்று பேர்களுக்கு ரூ 150 மதிப்புள்ள புத்தகங்கள். ( இதை வழங்குபவர்  ஃபேஸ்புக் தோழர் இலக்கிய ஆர்வலர் ராமேஸ்வரம் குரு அவர்கள் - https://www.facebook.com/islandrpg.

                              உங்களால் ஒரே கதையை பல விதமாக சொல்ல முடியுமா? முடியும் என்றால் இதோ உங்களுக்கான சிறு கதைப் போட்டி.

                      உங்களுக்கு மூன்று கார்ட்டூன் படத்தின் இனைப்பு தருவோம், அதில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு கார்ட்டூனை நீங்கள் சொல்ல விரும்புகிற கட்டமைப்புகளில் 1000 வார்த்தைகளுக்குள் சிறுகதையாக எழுதி அனுப்ப வேண்டும். அதாவது கார்ட்டூனிலே கதை, கரு, களம், கதாபாத்திரம் எல்லாம் இருக்கும். உங்களின் வேலை அதை சுவாரஸ்யமான நடையில் , வித்தியாசமான விதங்களில் சொல்ல வேண்டும். அதாவது கதை சொல்லிகளுக்கான போட்டி எனவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஒன்றுக்கு மேலான விதங்களிலும் எழுதி அனுப்பலாம்.
                       
               
 எழுத்தாளரே கதை சொல்லுவது போல, கதாபாத்திரமே கதை சொல்லுவது போல, பின்னோக்கி பயனிக்கும் விதமாக, மெட்டா ஃபிக்ஸன், கவிதையாக, ப்ளாஸ் பேக் முறையில், நீங்களும் கதைக்குள் சென்றுவிடுவது போல, வட்டார வழக்கில், துண்டு துண்டாக,  சொக்கட்டான் / தாயம் ஆடுவது போல, டிக்ஸனரி போல, புதிர் போட்டி போல  என ......... பல விதங்கள் இருக்குது.  உங்கள் வார்த்தை தேர்வுகள், அது கொண்டுவரும் உணர்வுகள், நீங்கள் வாக்கியத்தை அமைக்கும் முறைகள் வைத்தும் கலக்கலாம். அதையும் இதயும் கலந்தும் கூட சிலிர்க்க வைக்கலாம்.
             சிலருக்கு நன்றாக எழுத வரும் ஆனால் கரு கிடைக்கவில்லை என்பார்கள். இதோ உங்களுக்கு நாங்கள் கரு, கதைகளம், கதை மாந்தர்கள் என எல்லாம் தந்துவிட்டோம், இனி இதை வைத்து கதைகள் புனைந்து அனுப்புங்கள்.
         நேர்த்தியான கதை சொல்லி யார்?
         கதையின் பன்முகதன்மையை வெளிக் கொண்டுவரப் போகீறவர் யார்?.
               
               உங்களின் கதை சொல்லுதல் திறன், கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் திறன்,  கதையை பன்முக தன்மையாக்குதல்,  கதைகளை சொல்ல நீங்கள் கையாளும் புதிய புதிய யுக்திகள், அதற்க்குள் நீங்கள் கொண்டுவரும் சொல்லாடல்கள்,   நீங்கள் எடுத்துக் கொள்ளும் புதுமையான உருவங்கள் உதாரணங்கள் இவைகளை வைத்து உங்களால் சுவாரஸ்யமாக கதை சொல்ல முடிகிறதென்றால்  உங்களுக்குதான் பரிசு.

இதோ உங்களுக்கன கார்ட்டூன் படங்களின் லிங்குகள்:
கார்ட்டூன் கதை 1:http://www.youtube.com/watch?v=Ziwu68WwV7Y      - Phineas and Ferb GiAnts
கார்ட்டூன் கதை 2: http://www.youtube.com/watch?v=TECPJYU_9M4 - Phineas and Ferb - "Troy Story"
கார்ட்டூன் கதை 3: http://www.youtube.com/watch?v=EWKja9Swqak  - Phineas and Ferb Hail Doofania

               உங்கள் கதை சொல்லும் திறனை பிரபல பதிவாளரும் தமிழ் இலக்கிய வாசகருமான அன்புக்கு மறு பெயரான பிச்சைகாரன் அவர்களும் ஈழத்து கவிதை சொல்லி அன்பு தோழர் றியாஸ் குரானா அவர்களும் தேர்ந்தடுப்பார்கள்.


விதிமுறைகள்:

  •   சிறந்த கதை சொல்லிகளுக்கு பரிசு அளிக்கப்படும்.
  •  கார்ட்டூனை அப்படியே மொழிபெயர்க்க கூடாது - அதை கதையாக சொல்ல வேண்டும். 
  • கதை எழுதி அனுப்பும் பொழுது  நீங்கள் தேர்ந்தெடுத்த கார்ட்டூன் கதையை தலைப்பில் குறிப்பிட வேண்டும். உதாரணம் – கார்ட்டூன் கதை 1, கார்ட்டூன் கதை 2,….. என. 
  • எழுத்தாளர்களின் விபரங்கள் நடுவர்களுக்கு தெரியபடுத்த மாட்டாது.
  • உங்கள் கதைகள்  எங்களுக்கு  31-12-2013 க்குள் வர வேண்டும். 
  • கார்ட்டூன் கதையை அப்படியே சொல்லவேண்டுமென கட்டாயம் இல்லை – அதில் சொல்லப்படும் கரு, கதைகளம் சார்ந்த உங்களது கதையாக கூட இருக்கலாம். தேவையென்றால் நீங்களும் புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தலாம், கார்ட்டூனில் சொல்லப்படும் கதையில் சிலவற்றை நீக்கவும் செய்யலாம். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. 
  • ஒரே கார்ட்டூனை ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாணியிலும் கதைகளை எழுதியும் அனுப்பலாம். அதற்க்கான சிறப்பு பரிசுகள் உண்டு.  
  • இந்த Phinease and ferb பற்றியும் அதில் வரும் பாத்திரங்களின் விபரங்களை இனையத்தில்  நீங்கள் படித்துக் கொள்ளலாம். உங்களுக்கு சந்தேகம் இருப்பின் torukkmakto@gmail.comல் தொடர்பு கொள்ளலாம். 
  • நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.  
  • போட்டியில் கலந்துகொள்ளும் கதைகள் குறித்த சிறு விமர்சனம் நடுவர்களால் முன்வைக்கப்படும்.  
  • அனுப்ப வேண்டிய முகவரி: torukkmakto@gmail.com.

 Best Wishes:

4 comments:

  1. வணக்கம்

    சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரூபன் - நன்றிகள். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. மிக நல்ல முயற்சி... இதில் கலந்து கொள்ளும் அனைத்து கதைகளுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசமானதாக இருக்கும்படியான போட்டி அறிவிப்பு... வாழ்த்துக்கள் நிர்மல்....

    ReplyDelete
  4. Hi, Is that picture above "once upon a time there" is taken in Wales, UK

    ReplyDelete