Wednesday, January 29, 2014

சாக்ரடிஸ் - டெரிடா - சாரு

எழுத்தைப் பற்றி சாக்ரடிஸ் அதை மறுத்த டெரிடா அதை எனக்கு புரிய வைத்த சாரு:

                             தமஸ் எனும் எகிப்து அரசரிடம் தூத் எனும் கடவுள் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை பற்றி விளக்கி அதன் பெருமைகளை சொல்லி அரசனிடம் தருகிறது. அந்த முறையிலே அதன் புதிய கண்டுபிடிப்பான “எழுத்தை” அறிமுகம் செய்து இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மனிதர்களை ஞானிகளாகவும் மிகுந்த நியாபக சக்தி கொண்டவர்களாகவும் மாற்றவல்லது என்கிறது. சற்று யோசித்த அரசன்,அப்படி... எனக்கு தெரியவில்லையே என்கிறான். எழுத்தை

சந்தேகிக்கிறான் அரசன்.

                       இந்த எழுத்து மனிதனின் ஞான தேடலை ஓழிக்க கூடியதாக இருப்பதாக தோன்றுகிறதே, மேலும் இந்த எழுத்து நியாபக சக்தியை பெருக்காது நினைவாற்றலை குறைக்கும் , நாம் நினைவில் வைக்கக் கூடியதை கூட நினைவில் வைக்காத சோம்பேறிதனம் வந்துவிடும், எற்கனவே தெரிந்த ஓன்றை நினைவுப்படுத்த மட்டும்தான் பயன்படும் என்கிறார். மேலும் இப்படியான எழுத்துகள் மூலம் மக்கள் அதிகம் படித்திருப்பார்கள் ஆனால் அறிவு முதிர்ச்சி இருக்காது, என்கிறார்.


               இந்த கதையை இப்போழுது ஃபேஸ்புக்கில் ஓரு நண்பர் கதை போல அன்று சொல்கிறார் சாக்ரட்டீஸ். எழுத்துக்கள் எந்த விதத்திலும் அறிவாற்றலையும் நியாபக சக்தியையும் அதிகப்படுத்த போவதில்லை என்கிறார்.

                     ஆசிரியருக்கு தெரியாதா எப்படியான உண்மையை உண்மை தேடும் மாணவனிடம் எப்பொழுது சொல்ல வேண்டுமென்று, அதனால எதையும் எழுதி வைக்காதிர்கள், எனச் சொல்லி சாகிரடிஸீம் எதையும் எழுதவில்லை. அவரது மாணவன் ப்ளேட்டோதான் அவரது பேச்சுகளை எழுதியது.

                      இந்த கதையை கட்டுடைத்து எழுத்துக்கான புதிய புரிதலை உருவாகியவர் டெரிடா எனும் அறிஞர்.


                      அதாவது எழுத்திற்க்கும் பேச்சுக்கும் உள்ள வேறுபாடு. பேச்சைவிடவும் எழுத்து ஏதோ ஒரு விதத்தில் குறையுள்ளதாக கருதும் கருத்து இது இரண்டாயிரம் வருடம் முன் உள்ள நிலை. இன்று எழுத்துக்கு அதிகம் முக்கியம் தரும் நிலையில் இருக்கிறோம். எழுத்து வ...லிமையுடையது, பேச்சு வலிமையற்றது. எழுத்து அதிகாரம், பேச்சு மொழி அதிகாரமற்றது அது காற்றோடு கலக்கும் என்பது போல. எழுத்தில் வரும் செய்தி நம்புவோம் பேசினால் நம்பவதில்லை. இதெல்லாம் Bipolar Opposition சிந்தனைகள் என்கிறார் Derrida.

          நிச்சயமற்ற தன்மை எழுத்திலும் பேச்சிலும் சரி சமமாக இருக்கிறது என்கிறார். வன்முறையும் அதிகாரமும் அப்படியே. எழுத்தும் பேச்சும் சரி சமம். அதிலிருக்கும் எல்லா குணங்களும் மொழி என்ற அவற்றின் மூலத்திற்க்கே பொருந்தும் என்வே மொழியின் வடிவங்களான எழுத்தையும் பேச்சையும் வேறூ வேறு வாக பார்ப்பது சரியல்ல என்கிறார் டெரிடா.

 

Bipolar Oppositions : புதினம் X அபுதினம், நல்லது X கெட்டது, ஹிரோ X வில்லன், ஆண் X பெண், மனிதன் X விலங்கு, மனைவி X காதலி, எழுத்து X பேச்சு, உண்மை X பொய், ஏழை X பணக்காரன், ஆண்டான் X அடிமை, முதலாளி X தொழிலாளி, காதல் X காமம், ஆரியன் X திராவிடன், இந்தி X தமிழ் ., கவிதை X உரை நடை, கருப்பன் X வெள்ளையன்......................... இவைகளை எதிர் எதிராக பார்க்காமல் நம்மால் சிந்திக்கவே முடியாது என்கிறார்கள்.

இப்படியான எதிர் இரட்டைதன்மைகளுக்குள் ஏற்ற தாழ்வும் இருப்பதை கானலாம். அதாவது ஒன்றை காட்டிலும் மற்றொன்று உயர்ந்தாகவும் தாழ்ந்தாகவும் இருப்பதாக நினைத்துக் கொளவது. அது காலம் தொட்டு மக்களால் ஏற்படித்திக் கொண்டதும் ஏற்றுக் கொண்டதும் ஆகும்.

இப்படியான சிந்தனைகள் ஆழமாக நமது மனதுக்குள் விதைக்கப்பட்டு அதையே நம்பவும் செய்கிறோம். மேற்க்கு நாட்டின் எல்லா சிந்தனைவாதிகளும் மார்க்ஸியம் உட்பட இதே சிந்தனையில் வந்ததுதான் என்கிறார்கள்.


ஆனால் உற்று நோக்கினால் அவைகள் எதிர் அல்ல எனவும் சொல்கிறார்கள்.

இந்த பைனரி ஆப்போஸிட்டுகள் வடிவத்தை வைத்து சிந்திக்காது, மேட்ரிக்ஸ்க்குள் நுழையாது சித்திப்பதும் பேசுவதும் கடினம் ஆனால் இவ்வாறாக மைனரி ஆப்போஸிட்டுகள சிந்தனைகள தாண்டிய எந்த கலை படைப்பும் உச்சம் தொடும்.

இதை அருமையாக சாரு அங்காடித்தெரு பட விமர்சனத்தில் சொலிருப்பார். Give the devil its due share என்பதையும் சொல்லிருப்பார்.

பணக்காரன் என்றால் கெட்டவன், எழை என்றால் நல்லவன் போன்ற பைனரி ஆப்போஸிட்டுகளை வைத்து படம் எடுக்கும் மத்திய தர இயக்குனர்களை அடையாளம் காடிருப்பார்.

சாருவின் எழுத்துகள் யாவுமே புதினம் X அபுதினம் , ஓழுக்கம் X ஓழுங்கீனம் என்கிற பிரிவை உடைக்க கூடியது. எது புதினம் எது அபுதினம் என பிரித்துப் பார்க்க முடியாததாக இருக்கிறதாகவே நான் நினைக்கிறேன்.

எந்த படைப்பானுலும் சரி இந்த பைனரிகளை கண்டுபிடித்து அதைப் பற்றி சிந்திப்பதும் அதை விவாதமாக்குவதன் மூலம் ஏற்றுக் கொண்ட ஏற்ற தாழ்வுகளை கழைந்து புதிய செய்தியாகவும் சிந்தனையாகவும் மலர வாய்ப்பு உள்ளது என்கிறார் டெரிடா.

   இப்படியான சிந்தனைகளை டெரிடா De construction என சொல்கிறார்.



deconstruction மூலம் புதிய சிந்தனைi வாய்ப்பும், புதிய கொள்கைகளும் வர வாய்ப்பு உண்டு. eternal interplay க்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment