கடவுள் மனிதனை சோதிக்கிறாரா?
கடவுள் சோதிக்கிறான் சோதிக்கிறான்னு சொல்றோமே, இந்த கடவுளுக்கு ஏன் இந்த வேலைன்னு நினைப்பேன். எப்படி என்றாலும் சோதனையில் தோற்றுவிடுவான் மனிதன். தோற்க்க போகிற மனிதனை மீண்டும் மீண்டும் சோதிப்பது எவ்வளவு சலிப்பான வேலையாக இருக்கும். இந்த சலிப்பான வேலையை கண்டிப்பா ஒரு மனுசனும் செய்ய மாட்டான் அதான் கடவுள் செய்றாருன்னு நி்னைச்சிகிட்டேன்.
அப்புறம் இந்த சோதனையே உன்னை மெருகெற்றதான் உன்னை வளர்த்துக் கொள்ளதான் என்ற காரணமும் இருக்கு.
ரிசண்டா சர்ச்ல பாதிரியார் கீழ்கானும் வசனத்தை சொன்னதும். ஆஹா இது கரக்ட்டா இருக்கேன்னு மனம் துள்ளியது.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதின பொதுவான நிருபம் - அதிகாரம் 1.
13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
அவன் ஆட்டுகிறான் நாமெல்லாம் ஆடுகிறோம் என்கீறதெல்லாம் என்னால் நம்பவே முடியாமல் இருக்கிறது.
ஆனாலும்....
சொந்தமா சூனியம் வச்சிகிட்டு நான் என்ன செய்தேன் அவன்தான் செஞ்சான்னு பழி போடவும் அப்படியான பழியை பொறுமையாக ஏற்றுக் கொள்ள ஒரு ஆள் நமக்கு தேவைதானே.
நம்ம இயலாமையை யாரிடமாவது கொடுத்துவிட்டு நாம ரிலாக்ஸ் ஆகிற கிக்கே தனி.
பலவீனமான மனிதனின் செயலால் அவனுக்கு வரும் துன்பங்களில் இருந்து ஆறுதல் கடவுளை தவிர வேறு யார் தருவார்.
இப்படி நமது குற்றங்களை ஷேர் செய்ய இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்பது உண்மையோ உண்மை. Man will feel Lonely and deserted.
No comments:
Post a Comment