Friday, February 28, 2014

தோல் கடையும் - சவ்வு கறியும்

 தோல் கடையும் - சவ்வு கறியும்:




 
      கருவாடு உப்பு கண்டம் போல இன்னோரு டெலிகஸி சவ்வு.  இதைப் பற்றி சொல்லும் முன் சின்ன சொந்த கதை
      எங்க குடும்ப தொழில் ஆடு மற்றும் மாட்டு தோல் வியாபாரம்.  ஏரல் அருகில் தோல் கடை என்பது  பத்து வருடங்களுக்கு முன் வரை அந்த பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சையமான இடமாக இருந்தது. காரணம் அந்த பகுதியில் வரும் நாற்றம். எந்த புதியவரும் எங்கிருந்து இந்த நாற்றம் வருகிறது என்ற கேள்விக்கு சின்ன பிள்ளை கூட தோல் கடையை நோக்கி விரல் காட்டிவிடும். ரோட்டு ஓரத்தில் இருந்த இந்த கடை சின்ன இடம்தான். 
        
கசாப் கடை, ஓட்டல், அம்மன் கோவில் கடா வெட்டு, கல்யாணம் என எங்கு ஆடு வெட்டினாலும் தோலை விலை கொடுத்து வாங்கி இங்கு கொண்டு வந்துவிடுவார்கள். சில சின்ன வியாபாரிகள் கடைக்கு கொண்டு விற்க்கவும் செய்வார்கள். , தென் மாவட்டங்களில் கசாப் செய்யப்படும் கிட்டத்தட்ட எல்லா ஆடுகள் மற்றும் மாடுகளில் தோல்களை இங்கு வந்த பின்தான் திண்டுக்கல் டேனரிக்கு செல்லும் காலமும் இருந்தது.  டேனரியில்தான் தோல்லிருந்த முடி நீக்கி அதை பொருள்களாக மாற்றும் இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். தோல் கடையில் ஆடு மாடுகளின் தோலை வாங்கி அதை உப்பு போட்டு பத படித்தி , தரம் பிரித்து  நல்ல விலை கிடைக்கும் பொழுது டேனரிக்கு விற்ப்பார்கள்.
 
                      
 தோல் சீக்கிரம் அழுகும் அதனால் அதை சிரத்தையாக உப்பு போட்டு பதப்படத்த வேண்டும். ரொம்ப நாட்கள் வைத்திருக்க முடியாது. அழுகும் சமாசாரம். அதுவும் ஒரு முறை உப்பு போட்டுவிட்டு அக்காட என இருக்க முடியாது. பழைய உப்பை எடுத்துவிட்டு புது உப்பு போட வேண்டும். எப்படிதான் பதப்படித்தினாலும் நாற்றம் இருக்கத்தான் செய்யும்.   மேற்க்கும் கிழக்குமாக செல்லும் அந்த குறுகிய ரோட்டு ஓரத்தில்தான் தோல் கடை இருந்தது. கிராமங்களிலிருந்து பொருள்களை ஏரலுக்கு எடுத்து வரும் மாட்டு வண்டிகள் எல்லாம் இந்த ரோட்டில் சென்றால்தான் ஏரலுக்கு போகமுடியும்.  சுவாரஸ்யமான மேட்டர் என்னவென்றால் ரோட்டில் செல்லும் மாட்டு வண்டிதான். வண்டி மாடுகள் இந்த தோல் கடை அருகில் வந்தவுடன் அப்படியே படுத்துவிடும். அதை தாண்டி போகவே போகாது. வண்டிகாரன் கெஞ்சியும் அடித்தும் தர தரவென இழுத்தும் கொண்டு செல்வார்கள். ஆடுகள் ஒன்னும் பிரச்சனையில்லாமல் கடத்துவிடும் அந்த சிறிய தூரத்தை வண்டி மாடுகளால் தாண்ட இயலாதது ஆச்சரியமாக இருக்கும்.  புதிய வீடு கட்டி முதல் முதலில் பசுவை கொண்டு செல்லும் சூட்சும் இதுதான் என நினைக்கிறேன். வண்டி மாட்டுக்கே இம்மூட்டு இருந்தால் பசுவின் நுகர்வு திறன் எவ்வளவு இருக்கும். ஆதிகாலத்தில் குகைக்குள் பசுவை விட்டு பார்த்திருப்பார்களோ? நம்க்கே தெரியாத கெட்ட வாய்வுகளிடமிருந்து  மனிதர்களை காப்பாற்றிருக்கும் மாடுகள்.          
 
                            சரி  மேட்டருக்கு வருகிறேன்.  ஆட்டிலிருந்து தோலை உறிக்கும் பொழுது ஆட்டின் தோலுக்கும் சதைக்கும் இடையில் இருக்கும் சவ்வும் சேர்ந்து வந்துவிடும். ஆட்டின் தோலை சதையோடு இனைக்கும் டிஸ்யூ இந்த சவ்வு.  இந்த தோலோடு வரும் சவ்வு டேனரிக்கு செல்லக் கூடாது மேலும் சவ்வு இருந்தால் தோலின் மீது உப்பு சரியாக சேராது, தோல் கெட்டுவிடும். எனவே இந்த சவ்வை அறுத்து எடுக்க வேண்டும். மிக கவனமாக செய்ய வேண்டிய வேலை. தோலின் மீது கத்தி பட்டு சேதம் செய்திட கூடாது. காசு போச்சி, சரியாக தோலோடு தோலாக இருக்கும் இந்த சவ்வை அறுத்து எடுக்க வேண்டும். அப்படி எடுத்த சவ்வு ஒரு டெலிகஸி. ஆச்சரியமாக சுவை. சரியாக கறீ வைத்தால் சூப்பராக இருக்கும். 
 
            எங்க பாட்டி முருங்கக்காய் போட்டு சவ்வு கொழம்பு வைப்பார்கள்,  ம்ம்ம்ம் செமையாக இருக்கும் சுவை. மேலும் சவ்வை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கிய கடாயில் போட்டு பொறித்து சாப்பிடலாம். பெரும்பாலும் இந்த சவ்வு ஒரு வகை கொழுப்பு எனவே அதை பொறிப்பதற்க்கு அதன் எண்ணையே போதும்.   ஆனால் செம கொலஸ்ட்ரால்.  தோல் வியாபாரம் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த அவர்களுக்கு மட்டும் கிடைக்கும் சாப்பாட்டு ஐட்டம் சவ்வு. எங்க குடும்பத்தினரின் பெரும் தொப்பக்கு இந்த சவ்வு கறீயும் காரணம். மாலை காப்பி கூட்டுக்கு சவ்வு பொறிச்சி சாப்பிட்டா தொப்பை எப்படி குறையும். :)  
                    கோழி கறி , ஆட்டுக் கறி எல்லாம் கோவில் திருவிழாவுக்கும் பொங்கலுக்கும் மட்டும்தான், கோழி முட்டை எல்லாம் பண்க்காரர்களால் மட்டுமே சாப்பிட முடியும் என இருந்த அந்த காலத்தில் சவ்வு கறிக்கு மிக பெரிய மரியாதை எங்கள் ஊரில் உண்டு.  எல்லோராலும் கோழியும் ஆட்டுக் கறியும் வாரம் வாரம் சாப்பிட முடியாத நிலையில், தோலில் உப்பு தேய்க்கும் வேலை செய்கிறவர்களுக்கு இது இலவசமாக கிடைத்துவிடும். குடும்பத்தின் புரத சத்தும் கொழுப்பு சத்தும் எளிதாக கிடைக்க செய்தது எங்கள் ஊர் தோல் கடை.
 
      தோல் கடையும் அதன் நாற்றமும் சவ்வு கறியும் அதன் வாசமும் என்றும் நினைவில் நிற்கிறது.

5 comments:

  1. ஜவ்வு பொறிச்சு சாப்பிடனும்னு ஆசை வந்திருச்சு நிர்மல். சிறுவயதில் வீட்டில் எப்போதாவது நாங்களே ஆடு வளர்த்து கிறிஸ்துமஸ் ஈஸ்டருக்கு வெட்டுவோம், அப்போ சாப்பிட்டது. நீங்கள் சொன்னும் எனக்கு தோல் கடை வாசம் ஞாபகம் வந்திருச்சு. சிவகாசியில் முன்பு நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு தோல் கடை இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். இப்பல்லாம் சவ்வு கறியோட சென்றுவிடுகிறது, அதுவும் சேர்ந்து கறியோட எடை கூடுமெல்லவா அதனால்.

      Delete
  2. நான் விருதுநகர் எனது தந்தை தோல் வியாபாரி ஆட்டுத்தோல் மாட்டுத்தோல் என்று எல்லா தோல்களையும் வாங்குவார் நீங்கள் எந்த ஊர் உங்கள் பெயர்

    ReplyDelete
  3. How is iron ore a conductor?
    When is iron ore a copper ore? trekz titanium pairing Copper ore is the simplest type titanium ion color of powerbook g4 titanium copper titanium tv alternative ore in the world. When is iron ore a ffxiv titanium nugget copper ore a

    ReplyDelete