Friday, April 18, 2014

சாதியைப் பற்றிய convenience/ அனுகூலம் தியரி


சாதியைப் பற்றிய convenience /அனுகூலம் தியரி:  
 
          இதை படிக்கும் முன் இதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கவும். எனக்கு சாதி முறைகள் பிடிக்காது, சாதி பார்ப்பவன் நான் அல்ல, நான் சொல்லுவது சிலருக்கு முட்டாள்தனமாக தோன்றும் என்பதை நான் அறிவேன், சொல்லப் போகும் விஷயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கலாமன ஒரு யூகமே.
 
            முக்கியமா - அய்ய்ய்ய் சாதியைப் பற்றி பேசுவதே எனக்கு அருவருப்பை தருகிறது என சீன் போடாமல் யோசித்துப் பாருங்கள். 
     
             
 
               சாதி அதன் கட்டமைப்புகள் அதன் ஏதிர்ப்பு அழிப்பு ஓழிப்பு எல்லாம் தோற்று போன நிலையில் இதை எழுதுகிறேன். சாதி என்றால் என்ன என்பதைப் பற்றி மதங்கள், வேற்று நாட்டவர்கள், முற்ப்போக்கு சிந்தனைவாதிகள், மார்க்சியம் போன்ற கோணங்களில் பல பார்வைகள் இருக்கின்றன, எல்லாம் மிகுந்த ஆராச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டது சொல்லப்பட்டது. ஆனாலும் இந்திய சாதியின்  நுனியைக் கூட ஓடுக்க முடியவில்லை என்பது எனது கருத்து. இச் சூழலில் இவர்கள் எடுத்து வைத்த  , நமக்கு சொல்லித் தந்த கருத்துகளை சந்தேகப் பட வேண்டியுள்ளது.
 
  சாதி வேலை அடிப்படையில் பிரிக்கப்பட்டது என வருனாஸ்ரமம் என்கிறது, முற்போக்கு வாதிகள் ஆண்டான் அடிமை என்கிறார்கள், மார்க்ஸியம் பொருளாதார ஏற்ற தாழ்வே சாதியின் அடி வேர் என்கிறார்கள். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை, ஆனால் சந்தேகப்படுகிறேன். சாதி என்பது இதையெல்லாம் தாண்டிய ஓன்றாக நான் பார்க்கிறேன்.

சாதி எப்படி உருவானது என்பதைப் பற்றி பல வித தியரிகள் இருக்கிறது. இதோ எனது convenience தியரி.

                     இந்திய துனை கண்டத்தை நோக்கி பலர் பல்வேறு காலங்களில் வந்துள்ளனர். இந்தியாவை அடைய வேண்டும் என்கிற ஆவலுடனும் சிலர் வேற வழியில்லாமலும் பலர் சொந்த இடத்தில் பருப்பு வேகாதாதாலும் இன்னும் பல காரணங்களுடன் வந்துள்ளனர...
         புதுசா வந்தால் பெரும்பாலும் சண்டை நடக்கும் வெட்டு குத்து நடக்கும் பெரும்பாலும் அது வளங்களை பகிர்வதில்தான் சச்சரவு நடக்கும், ஆனால் வளம் கொண்ட இந்தியாவில் அந்த சண்டைக்கு தேவையே இல்லை. அப்படி என்ன வளம் என்றால்? நீங்க வளை கூடாவில் வாழ்ந்தால் தெரியும்், பைபிளை படித்தால் புரியும். ஒரு சந்ததி பலுகி பெருக படும் பாடு பெரும்பாடு. சுட்டரிக்கும் வெயில், ஆறு, குளம், மலை போன்றவைகள் இல்லாத பூமி, இருக்கும் வளங்களை கட்டுப்படுத்தவும் அதை பாதுகாக்கவும்தான் எவ்வளவு சண்டைகள் கொலைகள்.

சரி அப்படியே வளங்கள் இருந்தால் ரெத்தத்தை சுண்ட வைக்கும் குளிர், மூன்று ஆடைகள் குறைந்தது தேவை, வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றை சாதாரணமாக எடுக்க முடியாது. கொஞ்சம் நம்ம இமாலய மலைக்கு அந்தபக்கம் பார்த்தால் புரியும்.

என்னய்யா வள வள ந்னு போய்கிட்டே இருக்கு. சரி மேட்டருக்கு வருவோம் இப்படியான எந்த பிரச்சனைகளும் இல்லாத நாடு இந்தியாவில் பல்வேறு மனிதர்கள் பல் வேறு கால கட்டத்தில் உள்ளே வந்துள்ளனர். வந்தவர்களை ஏற்கனவே இருந்தவர்கள் கம்பளம் விரிச்சி வரவேற்க்க வில்லை அது போல அடிச்சி துரத்தவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இது எப்படி என்றால். இந்தியாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து துரத்தி விடப்பட்டவர்களாக இருக்கனும் என்பது எனது கனிப்பு.

அவனவன் வந்து அவனுக்கு தெரிஞ்ச முறைகளில் வாழ்ந்திருக்கான். இப்படி வாழ்வதில் இருக்கும் வசதி அலாதியானது. யாரையும் சொரண்டாம அவன் அவனுக்கு தெரிஞ்ச மாதிரி வாழ்வது. அப்படி அவர்களுக்கு தெரிஞ்ச முறைகளே அவர்களது அடையாளம் ஆக்கப்படிருக்கும். பெரும்பாலும் அடையாளங்களை மற்றவர்களே கொடுத்திருப்பார்கள், பின்னர் அதை அதற்க்குரியவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இந்த அடையாளம் என்பது அவர்கள் செய்கிற வேலையாக இருக்கலாம், சாப்பிடும் முறைகளாக இருக்கலாம், அறிவு திறனாக இருக்கலாம். இப்படி இருப்பது co Existenceக்கு ரொம்ப முக்கியம். அதுதான் பின்னர் சாதியாக மாறியிருக்கும். சாதி என்கிற அமைப்பில் இருக்கும் வசதி / நண்மைகள் பல பல அதை உணர்ந்துதான் இந்த convenience தியரியை உருவாக்கியிருக்கிறேன்.

நான் மேலே சொன்ன காலம் இலக்கியம் இலக்கணம் மொழி மதம் போன்ற கட்டமைப்புகளுக்கு முன்.
 
   சாதியாக இருப்பதில் இருக்கும் லாபம் அதிகம் அதில் இருக்கும் கன்வினியன்ஸ் /  அனுகூலம் அதிகம்.  இப்படியாகதான் சாதி தோன்றிருக்கும் என்ற கோனத்தில் சிந்தித்து பார்த்தால் சாதி ஏன் இன்றும் மேல் சாதியென சொல்கிறோமே அது முதல் அடிமட்ட சாதி என்கிறோமே அது வரை விஷ செடியாக பரவி கிடக்கிறது என்பது புரியும்.
 
 சாதி என்பதை சுரண்டும் கருவிகளாக ஆக்கியுள்ளனர் இந்து மதத்தில் என்கிறார்கள்,  இருக்கலாம் ஏதோ முறைபடுத்தபடாமல் இருந்த அனுகூலன் தரக் கூடியதை முறைபடுத்துதல் மட்டுமே வர்னாஸ்ரம் என்பேன். சாதி வர்னாஸ்ரமம் வருவதற்க்கு முன்பே இருந்திருக்க வேண்டும்.
 
    அது ஒரு குழுவை அடையாளபடுத்துகிறது, ஒரு இன குழுவாக ஓற்றுமையாக பாதுகாப்பாக வாழ வைக்கிறது, ஏதோ ஒரு விஷயத்திலாவது மற்றவர்களை காட்டிலும் நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது, நமக்கென ஒரு கூட்டத்தை தருகிறது, உதவிகளை தைரியமாக உரிமையோடு கேட்க்க கொடுக்க வைக்கிறது, ஒரு வித ரெத்த பந்தத்தை கொடுக்கிறது. இப்படியான அனுகூலன் அதிகம்... முக்கியமாக அடையாளம் தருகிறது.
 
    இதெல்லாம் இல்லை என்பவர்கள் அவர்கள் அவர்கள் சாதியை கிண்டல் அடித்து பாருங்கள். முடிகிறதா என சோதித்து பாருங்கள். முடிகிறதென்றால். குட் -  நீங்க சாதியை விட்டுவிட்டிர்கள் என அர்த்தம்.

2 comments:

  1. பதிவு சிந்திக்க வைக்கிறது நண்பா

    ReplyDelete
  2. ம்ம் அப்டீ பார்தா....அந்தந்த இனக்குழுக்களில்...சூத்திரன்.சத்திரியன்,வைசியன்,அந்தணன்...(அடிமைகள்,பாதுகாவலமன்,வியாபாரி.படித்தவன்)..என இருந்திருக்குமே....பிறகெப்படீ.......இந்த நால் வகை வகையறாககள் தனித் தனியே..ஆனார்கள்..

    ReplyDelete