Monday, June 2, 2014

உலக கால்பந்து கோப்பை – கிக் கொடுக்கும் கிக்

 
  உலக கால்பந்து கோப்பை –  கிக் கொடுக்கும் கிக்

              பந்தை லாவகமாக காலால் நிறுத்தி, சட்டென எதிரே வரும் வீரரை அங்கும் இங்குமென போக்குக் காட்டி, அந்த காலா, இந்த காலா என எதிராளியை குழப்பி, அவனைத் தாண்டி பந்தை கடத்தி, தலை நிமிர்ந்து நம் அணிக்காரன் எங்கு இருக்கிறான் எனப் பார்த்து, ஸ்டைய்லா பாஸ் கொடுத்துவிட்டு, நம்மை ஓட்டி வரும் அடுத்த அணி வீரனிடமிருந்து சரக்கென நம்மை விடுவித்து நமக்கும் நம் சக வீரனுக்கும் மட்டுமே தெரிந்த கோணத்தில் ஓடி, மீண்டும் பந்தைப் பெற்றுக்கொண்டு பந்தைக் கால்களுக்குள் கட்டுப்படுத்தி, கோல் கீப்பரை நோக்கி ஓடும் அந்த நிலையில் உள்ள வெறித்தனமும் சிரத்தையும் ஒரு வித பரவசமென்றால்.

கோல் கீப்பரின் இடதுபக்கமா, வல பக்கமா, மெதுவாகவா, வேகமாகவா, தாழ்வாகவா, உயரவா போன்ற சிந்தனைக்கெல்லாம் நேரம் இல்லாமல், காலில் இருக்கும் பந்தாகும் தருணம் அதற்கு அடுத்து வருவது.. பந்தை கோல் மீது அடிக்க கால் பந்தின் மீது படும் அந்த அரைக்கண நேரம்.

இயக்கம் எல்லாம் பந்தாகிய கணம், நினைவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தருணம் , அதன் விளைவுகள் மட்டும்தான் நினைவில் நிற்கும்.

சடக்கென கத்தியை அடுத்தவன் கழுத்தில் வைத்து இறக்குவது போலதான் அது.

எப்படி அடித்தோம், எப்படி கோல் கீப்பர் இடது பக்கம் எதிர்பார்க்கிறான் அதனால் வலது பக்கம் அடிக்க வேண்டும் போன்ற எந்த சிந்தனை உணர்வின்றியேதான் நடந்து முடியும்.

அது உச்சக்கட்ட அனுபவம் போல, அதன் முன், அதன் பின் இந்த இரண்டு மட்டுமே நினைவில் நிற்கும். ஒரு உன்மத்த நிலை அது. மரித்து உயிர்த்தெழுதல் போலவும் கூட,

நாம் காணாமல் போகும் நேரம் அது.
 
 அதுக்குதான் கிக்குன்னு பெயர் வச்சிருக்காங்க போல.

1 comment:

  1. நல்ல ஆரம்பம்... நிறைய எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete