Monday, June 2, 2014

உலக கால்பந்து கோப்பை – ஸ்டையிலு ஸ்டையிலுதான்


உலக கால்பந்து கோப்பை – ஸ்டையிலு ஸ்டையிலுதான்
 
 






பந்தை சக வீரர்களுக்குள் பாஸ் செய்வதில் பல முறைகள் உள்ளது, தரை வழி மார்கமாக நெடுந்தொலைவு பாஸ், தரை வழி நெடுந்தொலைவு பாஸ், சிறு தூரத்துக்குள் பாஸ், நம் அணி திசையை நோக்கிய பாஸ்இதற்க்கு மைனஸ் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டு அணியினரும் ஒவ்வொரு விதமாக விளையாடுவார்கள். ஜெர்மானி, இங்கிலாந்து நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய அணிகள் நெடுந்தொலைவு பாஸ் கொடுத்து விளையாடுவார்கள். அதிலும் ஆகாயம் வழியாக பாஸ் கொடுப்பதில் கை தேர்ந்தவர்கள். இந்த முறையில் விளையாட சரியான கணிப்பு, வலிமை, கட்டுக்கோப்பு, ஓழுங்கு வேண்டும். இங்கிருந்து அங்கு, அங்கு இருந்து இங்கு இப்படி பாய்ண்டு டூ பாய்ண்ட் முறை ஐரோப்பிய முறை. மிக நேர்த்தியான கட்டிட ப்ளூ ப்ரிண்ட் போல, அளவும் கோடுகளும் வடிவமாக கச்சிதமாக இருக்கும். ராணுவ அணிவகுப்பு போல இருக்கும் இது.

தென் அமேரிக்கா, ஸ்பெயின் போன்ற அணிகள் தரை வழியாக சிறு தொலைவு பாஸ்களை செய்து விளையாடுவார்கள். அதுவும் ப்ரேஸில் அணி குட்டி குட்டி பாஸ்களாக கொடுத்து கொடுத்து முன்னேறுவார்கள், சில நேரம் கோல் கீப்பருக்கு கூட பந்தை பாஸ் செய்வார்கள். தங்கள் பக்கம் கோல் போஸ்ட் அருகில் இருந்து பந்தை வெளியேற்ற எல்lலோரும் முரட்டுதனமாக பந்தை எங்காவது அடிப்பது வழக்கம், ஆனால் ப்ரேஸில் அப்பொழுதும், அவர்களின் குட்டி க்யூட் பாஸ்களை விடுவதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கும்.

இப்படியான பாஸ்களை ப்ரேஸில் அணியினர் கொடுத்து விளையாடுவதை பார்க்கும் பொழுது பிரம்மாதமாக இருக்கும். புல்லரிக்கும்பரவசப்படுத்தும், அவர்கள் மீது காதல் வரும். இது முன்னால் சொன்ன பாய்ண்டு டூ பாய்ண்ட் மாதிரி இல்லாமல், அங்கு இங்கும் இங்கும் அங்கும் மீண்டும் அங்கும் இங்குமாக இருக்கும். இந்த முறையில் ஒரு குமச்சல் இருக்கும், கிறுக்கல் ஓவியம் போல வளைந்து நெளிந்து போகும், உயிரோட்டமாகவும் கொண்ட்டாட்டமாகவும் இருக்கும் நாட்டியம் போலவும், இசை போல இருக்கும்

தொடரும்...

1 comment:

  1. எனக்கு கால்பந்தே தெரியாது. ஆனால் பள்ளியில் ஒரு ஈர்ப்பு உண்டு. அப்போதெல்லாம் பின்னால் இருக்கும் தன்னுடைய அணி வீரனுக்கே பாஸ் செய்வதை மைனஸ் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அது வேறு இது வேறா ?

    இன்னமும் நிறைய பதிவிடுங்கள். அறிய வசதியாக இருக்கும் ;)

    ReplyDelete