Wednesday, June 4, 2014

உலகக் கோப்பை கொண்டாட்டம் (3) : வியர்வையை பொருட்படுத்தாத ”அந்த” உணர்வு


உலகக் கோப்பை கொண்டாட்டம் (4) :  வியர்வையை பொருட்படுத்தாத  ”அந்த” உணர்வு


  அக்குள் வியர்வை நாற்றம் போக அடிங்க இந்த செண்டை, உங்கள் வியர்வை நாற்றம் போக போடுங்க இந்த பவுடரை போன்ற விளம்பரங்களை பார்த்திருக்கிறோம். வியர்வைகள் வழியும் உழைப்பாளிகளை தினம் தினம் தெருவில் பார்க்கிறோம். வெயிலில் வியர்வையோடு நடந்து வந்தால் முதலில் சொல்லுவது எப்பா என்ன வியர்வை என்றுதான் முதலில் சலித்துக் கொள்வோம்.

       பொதுவாக வியர்வைக்கு சிறு நீருக்கு கொடுக்கும் மரியாதையை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும், அவ்வளவுதான்.  செக்ஸில் அதை கண்டுகொள்வதில்லை, வியர்வை இல்லாத புணர்வு காற்றோடு புணர்வது போலதானே, உடல்களின் ஸ்பரிசம் வியர்வைகளால் இன்னும் இன்னும் கூட்டுதே. வியர்வை அன்பின் சின்னமாக இருப்பது செக்ஸில் மட்டுமே.
    


 இதெல்லாம் சொல்லுவதற்க்கான பதிவல்ல இது.

 இப்படியான வியர்வையில் தொப்பலாக நனைந்த சட்டைகளை ஒருவருக்கு மாற்றிக் கொள்வதை பார்த்திருக்கிறிர்களா. பார்க்கவில்லையென்றால் இந்த உலக கோப்பை காலபந்து போட்டியை பாருங்கள். ஒவ்வரு விளையாட்டு முடிந்ததும், எதிர் அணி வீரர்கள் ஒருவருக்கு ஓருவர் தங்கள் சட்டைகளை மாற்றிக் கொள்வார்கள். இது ஒரு நினைவு சின்னம் போல.வைத்துக்கொள்வார்கள்.

  பெரும்பாலும் எதிர் அணியில் அவர்களுக்கு பிடித்த வீரரின் சட்டையை கேட்டு மாற்றிக் கொள்வார்கள். வியர்வையால்  ஊறிப்போன அந்த சட்டையை மாற்றிக் கொள்வதன் மூலம் விளையாட்டு மனபாண்மையை காட்டிக் கொள்கிறார்கள், சில நிமிடம் வரை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுருப்பார்கள், முட்டி மோதி கொண்டிருப்பார்கள், அதில் ஒருவர் வெற்றி பெற்றிருப்பார் ஒருவர் தோல்வி அடைந்திருப்பார் ஆனாலும் விளையாட்டு முடிந்த பின் எல்லோரும் சமமே. அதன் பின் போட்டி போட ஏதுவும் இல்லை. இதுதான் விளையாட்டு மனப்பான்மை. அப்படியான மகத்துவமான உணர்வை வெளிக்காட்ட இப்படியாக செய்கிறார்கள்.. பல வருடங்களாக இருந்துவருகிறது இந்த வழக்கம், ஏனோ கால்பந்தில் மட்டுமே இருக்கிறது. எப்பொழுதோ ஏற்பட்ட இப்படியான பழக்கம் இப்பொழுது ஒரு வழக்கமாக மாறிவிட்டது எனலாம்.

    சிலர் வாங்கிய சட்டைகளை துவைப்பது கூட கிடையாதாம், அந்த அளவிற்க்கு  நினைவாக வைத்திருக்கிறார்கள்.

 அது சரி பெண்கள் கால்பந்து விளையாட்டு போட்டியின் முடிவில் இபபடியாக மைதானத்திலே சட்டையை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வார்களா என நீங்கள் கேட்க்கும் கேள்வி கேட்கிறது. சில நேரம்  நடக்கும். 
 


     எதிர்ப்பு, பகை, போட்டி, போன்றவற்றை மட்டும் தாண்டியது விளையாட்டு உணர்வு அல்ல வியர்வையை கூட கடந்தது - வியர்வைகளை பொருட்படுத்தாத உணர்வு.

1 comment:

  1. என்ன... லேடீஸ் புட்பால் பத்தியும் போட்டோ போட்டிருக்கலாம்... ப்ச்...

    ReplyDelete