Friday, June 6, 2014

உலக கோப்பை கொண்டாட்டம் : தன்னமெச்சான் வெளியே போ!!!


உலக கோப்பை கொண்டாட்டம் :  தன்னமெச்சான் வெளியே போ!!!

        உண்மையிலே கால்பந்தில் கஸ்டமானது என்னவென்று கேட்டால் அது பந்தை மற்றவர்களுக்கு பாஸ் கொடுப்பதுதான். பொதுவாகவே ஆண்களுக்கு தங்கள் பொறுப்புகளை பகிர பிடிக்காது, அம்மூட்டு ஈகோ அதுவும் சிறந்த விளையாட்டு விரர்களுக்கு அது டன் கணக்கில் இருக்கும்.  நம்மிடம் இருக்கும் பந்தை எதிராளியை ஏமாற்ற நம் அணியை சேர்ந்த இன்னோருவரிடம் பந்தை சரியான திசையில் தள்ளி விட்டு மீண்டும் பந்தை பெருவதற்க்கேற்ற இடத்தை நோக்கி ஓடுவதுதான் பாஸிங் தி பால். ஆனால் என்ன காரணமோ தெரியாது நம்மளால் பாஸ் செய்ய முடியாது, பந்து கிடைத்தவுடன் கோலை நோக்கியே எகிறும் மனசும் கால்களும். கறி துண்டு கெடச்ச நாய் போல

  பந்து கிடைச்சதும் நின்னு  நிதானாமாக சக வீரனுக்கு பந்தை கொடுத்து வாங்குவது என்பது ஆண்களுக்கு முடிவதே இல்லை. 

 குறிக்கோளை நிறவேற்றுவதில் குறி குறியா இருப்பானுக.
 

    

 ஒரு அணியின் பயிற்சியாளர்க்கு இந்த வீரர்களை ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து விளையாட வைப்பதுதான் மிகச் சவாலான காரியம். சக வீரர்களுக்குள் பரஸ்பர நட்பு, நம்பிக்கை முக்கியம். டீம் ஜெச்சாதான் உனக்கு மரியாதைங்கிறதை சொல்லிக் கொடுப்பது பயிறசியாளருக்கு முக்கிய பணியாகும்.


    இப்படி பாஸ் கொடுக்காமல் விளையாடும் வீரர்களுக்கு எங்க ஊரில் வைக்கும் பெயர் தன்னமெச்சான். இவன் சரியான தன்ன மெச்சாண்டா என்பார்கள். இந்த தன்னமெச்சானுகளுக்கு கால்பந்தில் இடமே கிடையாது, பெரும்பாலும் வெளியேதான் இருப்பார்கள்.  தன் திறமையை மட்டும் காட்ட நினைக்கும் வீரருக்கு சக வீரனிடம் மதிப்பும் மரியாதையும் கம்மியாகவே இருக்கும். இதையெல்லாம் தாண்டிதான் ஃபிலியே, மரடோனோ, ரோனோல்டா, ரிவால்டி, டேவிட் பெங்கம் , கிறிஸ்தியானோ ரோனோல்டா, ரோனாடின்ஹோ, ரோனி, மெஸ்ஸி .....போன்றவர்கள் தங்கள் தனி தன்மையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.

No comments:

Post a Comment