Tuesday, June 10, 2014

கால் பந்து கொண்டாட்டம் : டிக்கி டாக்கா:

கால் பந்து கொண்டாட்டம் : டிக்கி டாக்கா:
 



 
கால்பந்து ஆடுவதில் பல முறைகள் உண்டு, எந்த முறையும் இல்லாமல் ஆட்டு மந்தை போல அந்த பக்கத்துக்கும் இந்த பக்கத்துக்கும் ஓடுவதுதான் பலருக்கு தெரிந்த முறை, நமக்கு தெரியாத முறை ஒன்று இந்த டிக்கி ...டாக்கா முறை.

இந்த டிக்கி டாக்கா முறையில் பந்தை சிறு சிறு தொலைவில் துரிதமாக பாஸ் செய்து கொண்டே இருப்பார்கள். பந்தை தங்கள் வசம் முடிந்தவரை வைத்துக் கொள்வார்கள். கோல் அடிக்கும் முயற்சி எதுவும் இல்லாதது போல வெறு பாஸ்களை செய்து கொண்டே இருப்பார்கள். இந்த டிக்கி டாக்கா முறை விளையாட மிகச் சிறந்த குழு மனப்பான்மையும் பொறுமையும் தேவை.


இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமென்றால் இந்த முறையில் விளையாட ஒரே அணியை சார்ந்தவர்கள் மூன்று மூன்று பேர்கள் அடங்கிய சிறு குழுவாக இயங்குவார்கள். பந்து ஒரு வீரரிடம் வந்ததும் இன்னும் இரண்டு பேர் அவர் அருகில் முக்கோன வடிவத்தில் வந்து நின்று கொள்வார்கள், இப்படியான முக்கோன வடிவத்தால் பந்தை எடுக்க வரும் அடுத்த அனி வீரரை எளிதாக எமாற்றி ஒருவருக்கு ஒருவர் பாஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி எமாற்றி ஏமாற்றி அடுத்த அணியினரின் கோல் பகுதிக்கு வந்தது ஒரு துரித அட்டாக் செய்து பந்தை கோலை நோக்கி அடிப்பார்கள். இதுதான் டிக்கி டாக்கா.
 

இந்த டிக்கி டாக்கா முறையை அதாவது இப்படியாக முக்கோன முறையில் நின்று பந்தை கடத்துவது எல்லா நாட்டு அணியினரும் கடைபிடித்தாலும் முழுக்க முழுக்க டிக்கி டாக்கா ஆட்டத்தை ஆடுபவர்கள் ஸ்பெயின் நாட்டினர் என சொல்லலாம்.


இந்த டிக்கி டாக்கா ஆட்ட முறை ஒரு போரிங் ஆட்டம் என்கிற கருத்தும் உண்டு, கோல் போடாமல் சவ்வு மிட்டாய் போல இழுக்கும் முறை இது என்பவர்களும் உண்டு. ஆனால் இதை பார்க்க நல்லாவே இருக்கும். குட்டி குட்டி பாஸ்கள், அதிலிருக்கும் முக்கோன முறையை எப்படி வெவ்வேரு கட்டங்களில் எப்படி பேணுகிறார்கள் என்பது உண்மையிலே ஆச்சரியமாக இருக்கும். எந்த அளவுக்கு ஒருவருக்கு ஒருவர் புரிதல் இருக்கிறதென வியக்க வைக்கும்.

இந்த டிக்கி டக்காவை முதலில் பார்ப்பவர்களுக்கு குழப்பமாக இருக்கும் - ஆனால் அந்த குழப்பத்துக்குள் ஒரு அழகிய முறை இருக்கிறது என்பது அதை புரிந்து பார்த்தால் மட்டுமே புரியும். இந்தியாவை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகதானே இருக்கும் ஆனால் நமக்குள் இருக்கும் குட்டி குட்டி முறைகள் இருப்பதை அறிந்தவர்கள் பார்த்தால்தானே புரியும் அது போல.

நான் சொன்னதை வைத்து கீழ் கானும் வீடியோவை பாருங்கள் அருமையாக இருக்கும். ஸ்பெயின் போர்ட்சுகல் போன்ற நாடுகள் இந்த முறையில் ஆடுவதை இந்த உலக கோப்பையில் கான தவற வேண்டாம்.

டிக்கி..... டாக்கா.....

http://www.youtube.com/watch?v=lGuaQ1khn2k

1 comment: