உலகக் கோப்பை கொண்டாட்டம்:
சாம்பா! சாம்பா! சாம்பா! துடிப்பான ஆட்டம்:
இங்கு எழுதுவது இந்த விளையாட்டு முறையின்
மேனுவல் கிடையாது, அப்படி எழுதக் கூடிய திறனும் தகுதியும் மேதமையும் எனக்கு கிடையாது.
தமிழில் மேதமைகளே எழுத்தாளர்களாகவும் படைப்பாளிகளாகவும் பார்க்கப் படுகிறார்கள். அந்த
இடத்தின் அருகில் கூட என்னால் வர முடியாது, இது முழுக்க முழுக்க ரசனையை கொண்டு எழுதுவது. எங்காவது மேதமை தெரிந்தால் சாரி.....
உலகில் கால்பந்தை
விளையாட பல முறைகள் இருந்தாலும்
அனைவரையும் மெய் சிலிர்க்கவும் பரவசபடுத்தி
உச்சநிலை சந்தோஷத்தை அளிக்க கூடிய முறை
இந்த சாம்பா. இதை எப்படியான முறையென
வகுக்க முடியாத நிலை என்றே
செல்லலாம். இதில் டிக்கி டாக்கா
போல வடிவங்களோ, இப்படிதான் விளையாட வேண்டு என்பது
போல புத்தக குறிப்புகளோ கிடையாது.
இந்த விளையாட்டு
முறையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் முதலிம் சாம்பா என்கிற அதிரடி மேள தாள ஆட்டமுறையைப்
பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நம்வூர் உறுமி
மேளம், நையாண்டி மேளம், பறை எல்லாத்தையும்
சேர்த்து போட்டு குத்து குத்துன்னு குத்தினா எப்பிடி இருக்கும் அதுதான் சாம்பா எனும்
மேளம், அதுக்கு பெண்கள் ஆடும் ஆட்டம் அப்படியே நம்வூர் கரகாட்டம். கொஞ்சம் ட்ரெஸ் கம்மி
குட்டி பாவாடைக்கு பதில் குட்டி ஜட்டி, ரவிக்கைக்கு பதில் வெறும் பிரா அவ்வளவுதான்.
நம்மவூரில் தலையில் கரகம் அங்கு வண்ண அலங்காரம். கரகாட்டமும் நம்ம கபடி ஆட்டமும் கிட்டதட்ட
ஒரே தாளத்தோடு இருக்கும், அதே போலதாங்க இந்த சாம்பா மேளம் – பெண்களின் ஆட்டம் – ப்ரேசில்
அணியின் கால்பந்து. எல்லாம் ஒரே ரிதமால் ஆனது. உள்ளுக்குள் இருக்கும் துடிப்பு ஒன்னுதான்.
அல்டிமேட் கொண்ட்டாடம்.
// உலகிலே சாம்பா நடனத்தை இவ்வளவு எளிதாக எந்த நாட்டு மக்களுக்கு புரிய வைக்க முடியாதுன்னு நினைக்கிறேன்,
அவ்வளவு ஓற்றுமை.
இந்த
சாம்பா முறை விளையாட்டு முழுக்க முழுக்க களத்தில் அந்த தருணத்தில் உருவாகும் தந்திர
முறைகளை கொண்டது. அடுத்த என்ன நடக்க போகிறது என்பதை பார்வையாளர் மட்டுமல்ல விளையாட்டு
வீரர்களுக்கும் தெரியாது. துரிதமான துடிப்பான ஆட்டமாக இருக்கும். அதே அளவு கவர்சியும் அழகும் உள்ளதாகவும் இருக்கும். அழகா விளையாடினால் அது கலைக்கு ஒப்பானது எனலாம்.
கலவி கொள்வது
எப்படி என்று ப்ரோனோகிராபியில் பார்த்து செய்வதற்க்கும் காதலில் ததும்பி காமத்தில்
மூழ்கி கவிதையாக பிதற்றி தன் நிலை மறந்து இருக்கும் இருவர் செய்யும் கலவிக்கும் வித்தியாசம்
உண்டல்லவா அது போல. முதலில் சொன்னது மெக்கானிக்கல் அடுத்து சொன்னது மேஜிகல் அதுபோல
சாம்பா ஒரு மேஜிகல்.
போர் செய்யும் பொழுது
எடுக்கப்படும் முன் ஏற்பாடுகள் துல்லியமாக வகுக்கப்பட்ட திட்டம் போன்று மீண்டும்
மீண்டும் பயிற்சி செய்து விளையாட்டுவது
ஒருவிதம். உதாரணம் A பந்தை Bக்கு அனுப்பனும், அவர் அதை Cக்கு அனுப்பனும் இவர்
எப்படியாவது பெனால்டி பகுதிக்கு சென்று ஃப்ரி கிக் வாங்க வேண்டும், பின்னர் ஃபிரி கிக்
செபஸலிஸ்ட் D வந்து அதை கோலாக்கிவிடுவார். இப்படி ப்ளான் செய்து விளையாட்டு முறையும்
உண்டு. இது கிட்டதட்ட செஸ் போல கால்பந்தை விளையாடுவது. இந்த முறையில் க்ரியேடிவிட்டி
இருக்காது, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்த முறைகளை முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
இதை Tactical முறை என்றும் சொல்லலாம். மிகவும் முறைபடுத்தப்பட்ட விளையாட்டு, ராணுவ
அணிவகுப்பு போல, பெரும்பாலான ஐரோப்பிய அணிகள்
இப்படியாக விளையாடுவார்கள். பார்க்கும் நமக்கு மிகவும் அலுப்பை தரும்.
இ்தற்க்கு நேர் எதிராக மிக குறைந்த பட்ச ப்ளானிங், அதிக பட்ச திறனை கொண்டு விளையாடும் முறை சாம்பா முறை. சாம்பா முறை ப்ரேசில் நாட்டினர் விளையாடும் முறை என சொல்லுவார்கள். ஆனால் இந்த முறையில் விளையாடும் பல அணிகள் உண்டு. இதில் விளையாடும் வீரர்கள் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள். பந்தை கடத்துவது, எதிர் அணிகளை ஏமாற்றி கொண்டு போவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆட்டம் மிக இயற்கையான துடிப்பான விளையாட்டாக இருக்கும். அடுத்த அணி வீரரை எமாற்ற பாஸீங் மட்டுமல்லாது தங்கள் தனி திறனோடு கட் செய்வார்கள். பயிற்சியில் செய்த முறைகளை மட்டுமல்லாமல் அந்த சூழலுக்கு ஏற்ப்ப ஒருவருக்கு ஒருவர் விளையாடுவதை மாற்றி அமைத்து விளையாடுவார்கள். இவர்கள் கோல் போடும் முறையை எளிதில் தீர்மானிக்க முடியாது எனென்றால் எந்த முறைகளும் அற்றது. தீடிரன தூரமாக இருந்து அடிப்பார்கள், சில நேரம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்வார்கள், சில நேரம் ஸோலோவாக தனியாக யாரிடமும் பந்தை கொடுக்காமல் கடத்திச் செல்வார்கள். வீரர்களின் தனி திறமையை காட்ட அனுமதி அளிக்கும் விளையாடு முறை. Element Of Surprise இருந்து கொண்டே இருக்கும். சில நேரம் பொய்ங் எனவும் ஆகிவிடும்.
A
Game with Creativity and rhythm
is Samba. Ultimate Hedonistic in Nature. இப்படியான ஆட்டத்தை Joga bonito என்கிறார்கள் – மிக அழகான விளையாட்டு என்று
பொருள். உண்மையிலே ப்ரேசில் விளையாடும் விளையாட்டு அழகான விளையாட்டுதான்.
குறிப்பு: இப்பொழுது
ப்ரேஸில் கூட சாம்பா முறையில் மட்டும் விளையாடுவதில்லை, அவர்களும் சில திட்டமிட்ட அட்டாக்
முறைகளும் தடுக்கும் முறைகளையும் கையாள்கிறார்கள். இல்லையென்றால் கட்டுக்கோப்பான ஐரோப்பிய
அணிகளுக்கும் மின்னல் வேக ஆப்ரிக்க அணிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாது.
சாம்பாவை விளக்கிய விதம் அருமை...கூடுதல் போன்சாக ஐரோப்பிய அணிகளின் ஸ்டைலையும் சொன்னது அருமை..
ReplyDeleteசாம்பாவுக்கான மியூசிக் கொடுத்தால் போட்டுவிட்டு ஆட்டம் போட வசதியாக இருக்கும்.
ReplyDeleteஅருமை நிர்மல். எப்போதும் கிரிக்கெட் பின்னால் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இப்பதிவு ஒரு ஹைலைட்.
ReplyDeleteJOGA BONITO