Friday, December 26, 2014

என்னை என்னால் மன்னிக்க முடிவதில்லை

Love will thaw a frozen heart: ஃப்ரோசன்னு ஒரு படம். அதில் வரும் நாயகி சின்ன வயதில் ஒரு தவறு செய்துவிடுவாள், அதனால் எப்பொழுது பயத்திலே இருந்து இன்னும் பல தவறுகளை செய்வாள். பின்னர் உன்மையான அன்பை உணர்ந்து சரியாவாள். இப்படி ஏதாவது தவறுதல் சிலருக்கு வாழ் நாள் முழுக்க உறுத்திக் கொண்டே இருக்கும்.
பின் வருவது கவிதை அல்ல, இதன் பெயர் RAT என வைத்துக் கொள்ளலாமா - Random or Racing thoughts on focused subject. Like Rap this is RAT. this is my terminology.
லெட் அஸ் ராட்.
.........................................................................

I am seeing the best minds of my friends destroyed by madness and guilt. -- Howl!!!
மற்றவர்களை எளிதாக மன்னிக்கும் அளவிற்கும், என்னை மற்றவர்கள் மன்னிக்கும் அளவிற்கும் என்னை என்னால் மன்னிக்க முடிவதில்லை.
எளிய மனமும் அறியா மனமும் இருந்திருந்தால், அறிவும், சுய உணர்வும் ஏறாமல் இருந்திருந்தால், என்னை மற்றவர்களை விட ஒரு படி எப்பொழுது உயர்த்தி பிடிக்காமல் இருந்திருந்தால், என்னை எனக்காக மட்டும் அல்லாமல் மற்றவர்கள் பாராட்டுக்காக நேசிக்காமல் இருந்திருந்தால்.
மற்றவர்களை எளிதாக மன்னிக்கும் அளவிற்கும், என்னை மற்றவர்கள் மன்னிக்கும் அளவிற்கும் என்னை என்னால் மன்னிக்க முடிந்திருக்கலாமோ?


சுய மன்னிப்பு என்ற ஒன்றின் சாத்தியம் தெரியவில்லையா? புரியவில்லையா ? நம்பவில்லையா ? சாமி , பூதம் நம்பிக்கை இல்லையோ? விரதம், காணிக்கை, அலகு, நேர்சை பிடிக்கவில்லையோ? இது வரை மன்னித்து பழகவில்லையா? புண்ணோடு வாழ்வதில் சுகம் கண்டேனா? என் வேதனை ,என் கோபம் ,என் வெறுப்பு என சுடு சொற்களை என் குணமாக்கி கொண்டு நம்புகிறேனா? என் அன்பிற்குரியவர்கள் வைத்திருந்த என் பிம்பம் உடைந்து போனதா? என் மேல் அவர்கள் வைத்திருந்த எதிர்ப்பார்ப்பு பொய்த்துவிட்டதா? மற்றவர்களை பழிவாங்குவதை விட என்னை நானே பழிவாங்கிக் கொள்வது எளிதாக இருக்கிறதா?
இதுவே என் விதியென நம்பிருக்கிறேனோ?
மற்றவர்களை எளிதாக மன்னிக்கும் அளவிற்கும், என்னை மற்றவர்கள் மன்னிக்கும் அளவிற்கும் என்னை என்னால் மன்னிக்க முடிவதில்லையோ?


அட ச்சீ நானும் ஒரு சாதாரண பிறவி தான் என முதலில் நம்பியிருக்க வேண்டும், நம்ப வைத்திருக்க வேண்டும். எனக்கும் சறுக்கும், என் உறவுகளுக்கும் சறுக்கும் என் காதலுக்கும் சறுக்கும் என புரிந்து வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் சகஜமென நம்பியிருக்க வேண்டும். புரிந்திருக்கவேண்டும்.

மற்றவர்களை எளிதாக மன்னிக்கும் அளவிற்கும், என்னை மற்றவர்கள் மன்னிக்கும் அளவிற்கும் என்னை என்னால் மன்னிக்க முடிந்திருக்கும்.


மற்றவனை மன்னிக்க நான் போதும். என்னை நானே மன்னிக்க நீ வேண்டும். மன்னிப்பதென்பது மறப்பது அல்லவே! அது என் குற்ற உணர்வை தாண்டுவது. அதை தாண்டி வர நீ வேண்டுமே! 
என் மீது பரிதாபம் பட்டுவிடாதே அடிபட்ட பறவையாக்கிவிடாதே ப்ளீஸ் உன் கருணை கண்கள் எனக்கு வேண்டாம்.
ஏலி ஏலி லாமா சபக்தானி!!!!!!!
ரணத்தை வெல்லும் வரை காத்திரு. எனக்காக கொஞ்சம் விழித்திரு. என் தழும்புகளுக்கு வெற்றி முத்தமிடு. என் தழும்புகளை வெற்றியின் சின்னமாக்கு. காதலென்றும் அன்பென்றும் பிதற்றிய பிதற்றலுக்கு அர்த்தம் சொல்ல

நீ என்னோடு இருப்பின்

மற்றவர்களை எளிதாக மன்னிக்கும் அளவிற்கும், என்னை மற்றவர்கள் மன்னிக்கும் அளவிற்கும் மேலாக என்னை என்னால் மன்னிக்க கண்டிப்பாக முடியும்.

1 comment:

  1. RAT நடை கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது...

    ReplyDelete