Sunday, February 27, 2011

ஜோடி – a story by Mrinzo Nirmal

ஜோடி – a story by Mrinzo Nirmal

அன்புள்ள பிச்சைக்காரன் அவர்களுக்கு ..

என் நண்பன் மிருகங்கள் எப்படி ஜோடியை தேர்வு செய்கின்றன என்று எனக்கு அனுப்பிய மெயிலில் , தவறுதலா இந்த கதையை பேஸ்ட் செய்துவிட்டேன். மன்னிக்கவும்.

தயவு செய்து கதையை நீக்கிவிட்டு தெளிவான பதிவாக வெளியிடவும்.

Cheers!!!!!

- Mrinzo


அன்புள்ள Mrinzo

கதையை வாசித்துபார்த்தேன் எனக்கு என்னவோ அதில் ஒரு சம்பந்தம் இருப்பதாக பட்டது மேலும் அப்படி நீக்கும் பொறுப்பை வாசகரிடம் விட்டுவிடுவதென முடிவு செய்துவிட்டேன் .

நன்றி

பிச்சைக்காரன்

*******************************************************************


ஒரு பெண் மயில், ஆண் மயிலின் தோகைஅழகு மற்றும் அளவை கணித்துத்தான் தனது ஜோடியை தேர்வு செய்கிறது . நான் எங்கள் ஊரில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அப்படி இப்படி என்று கல்லுரி முடித்து திருமணம் ஆகி இப்போது நன்றாய் வாழ்ந்து வருகிறேன். இந்த வாழ்க்கை நான் கடினப்பட்டு படித்து சம்பாதித்தது

, எனது திருமணம் காதல் திருமணம், ஆம் எங்கள் ஊரில் இன்று வரை பேசப்பட்டு வரும் காதல் காதல் கதை எங்களது. கல்லூரியில் படிக்கும்போது என்னோடு படித்தவள் என் மனைவி அழகுக்கும் அன்புக்கும் இலக்கணம், படிப்பில் சூரன் நான் ஆனால் ஏழ்மையில் வாழ்பவன், என் மனைவி அதாவது என் காதலி எங்கள் ஊரில் மிக பெரிய செல்வந்தரின் ஒரே மகள், ஊரில் பாதி அவர்களது. அதுவும் ஒரே மகள்.Uca crenulata என்ற ஒரு நண்டு வகையில் பெண் நண்டு நூற்றுக்கும் அதிகமான ஆண் நண்டின் வளையை பார்த்து அதில் தனக்கு பிடித்த வளைக்கு சொந்தமான ஆண் நண்டை தனது ஜோடியாக்குமாம். படித்து வாழ்க்கையில் வெற்றிபெறுவதுதன் ஒரே குறிக்கோள் என்று இருந்த என்க்கு கவிதை சொல்லி தந்தாள், இருவரும் ஒருவர் ஒருவரை மிகவும் நேசித்தோம், ஒன்றாய் வாழ திட்டம் வகுத்தோம், கனவில் மிதந்தோம். அவளது குரல் மிகவும் இனிமையாக இருக்கும். எங்கள் காதலை புனிதம் போல போற்றி வளர்த்தோம்

அதில் நாங்கள் இருவரும் சிறகடித்து பறந்தோம். கிராமத்தில் ஒய்வு நேரம் அதிகமா அல்லது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுதிகிறர்களா என்று தெரியவில்லை எந்த ஒரு சிறு தகவலும் கூட எல்லாருக்கும் தெரிந்துவிடும், யாரு வீட்ல என்ன குழம்பு, யாரு என்ன நகை வாங்குனா போன்றவை உட்பட. இப்படிப்பட்ட கிராமத்தில் எங்கள் காதலும் ஊருக்கு தெரியவர, என் காதலியின் பணக்கார அப்பா எங்களை ஊரை விட்டு துரத்தி விட, எனது குடும்பத்தோடு பக்கத்துக்கு ஊருக்கு குடி புகுந்தோம்.

காதலின் குறுக்கே பணக்கார முதலைகள், ஏழையின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் மிருகங்கள். அவள் அப்பாவிற்கு அவரது சாதியும் அவரது பணமும்தான் முக்கியம். மனதை பறிகொடுத்த நாங்கள் நடை பிணமாய் ஆனோம். நான் கற்ற கல்வியும் அவளின் தைரியமும் எங்களை ஊரை விட்டு ஓட செய்தது. சராசரி வருமானத்தோடு ஒரு வேலை ஒன்றை பார்த்து வாழ்கையை துவங்கினோம் இல்லை தொடர்ந்தோம். எங்கள் குழந்தையை பார்க்க வந்த என் மனைவியின் சொந்தம் எங்களை ஏற்றுகொண்டது. காதல் என்றும் வெற்றிபெறும் அது என்றும் அழிவதில்லை என்பதை முழுமனதோடு நம்பும் எங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

காதல் எனபது வாழ்ந்து காட்டுவது என்பதற்கு என் கதையை விட வேறு எந்த உதாரணம் வேண்டும். கவிதையில் துவங்கிய எங்கள் காதல், வெற்றி கவிதையாய் தொடர்கின்றது. எங்கள் காதல் புனிதமானது, அது என்றும் அழியாதது, காதல் வெற்றிபெற அந்த உண்மையான காதல் கண்டிப்பா உதவி பண்ணும். துருவத்தில் வாழும் ஒரு வகை மான் இனத்தில் ஆண் மான்களிடம் பயங்கர சண்டையில் எது வெற்றி பெறுகிறதோ அந்த ஆண் மானைதான் ஒரு பெண் மான் தனது ஜோடியாக தேர்வுசெய்யுமாம். எல்லோருடைய காதலும் எங்களை போல வெற்றி அடைவதில்லை எனது நண்பன் ஒருவன் கூட காதல் திருமணம்தான், அவன் காதலித்து ஒரு சலவை தொழிலாளி மகளை, அழகி அவள். இவளை காதலிக்க அந்த ஊரில் மட்டும் அல்ல பக்கத்துக்கு ஊரில் இருந்து கூட போட்டி இருந்தது, இந்த காதல் தகராறில் என் நண்பனை ஒருவன் ஆள் வைத்து அடிக்க கை கால் கட்டோடு 3 மாதம் மருத்துவமனையில் இருந்தான், அந்த தகராறில் என் நண்பனை அடிக்க வந்தவனின் மூன்று விரல்களை வெட்டி விட்டான், அவளவு வெறி காதல் மேல்.

இந்த சம்பவம்தான் அவனை அவளது காதலியிடம் சேர்த்தது. இப்போது இருவரும் வீட்டை விட்டு ஓடி வாழ்கிறார்கள், குழந்தை பிறந்தும் இருவர் விட்டிலும் அவர்களை ஏற்கவில்லை.

நண்பா Mrinzo , மிருகங்கள் தங்கள் சந்ததி நன்றாய் இருக்குவேண்டும் என்கிற Instinct கொண்டுதான் செயல்படுவது போல எனக்கு தெரிகிறது, அதில் நம்மளை போல காதல் என்று எல்லாம் இல்லை , உன்னோட முதல் கதையை படித்தபோதே அது புரிந்துவிட்டது உனக்கு காதல் என்றால் என்ன என்று தெரியவில்லை தயவு செய்து இந்த விலங்குகளின் ஜோடி சேர்தலைதான் நாம் காதல் என்று சொல்லுகிறோம் என்று எழுதிவிடாதே. – பிச்சைக்காரன்

இதற்கும் என் நண்பன் கொஞ்சம் வசதியானவன். அவன் அப்பா. எல்லா சொத்தையும் மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டாராம், அதனால் எனது நண்பனுக்கும் அவன் வீட்டோடு சேர எந்த விருப்பம் இல்லையாம். இப்படி சொத்துக்காக உறவுகளை வெறுக்க வைக்கும் அளவிற்கு தள்ளியது அந்த காதல்தான். அப்படியென்றால் அவனது காதல் தோல்வி என்று தான் சொல்லுவேன். உறவுகளோடு வாழ்ந்து காட்டுவதுதான் காதல். எனது காதல் கதையை சொல்லும்போது எல்லாம் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் காதல் கதையும் சேர்ந்துவிடுகிறது.

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்........... ஹலோ எவ்வளவு ஆனாலும் சரி அந்த இடத்தை முடிச்சிடுங்க, மாமா ஆசைப்பட்ட இடம், சரி அப்புறம் பார்போம், செல் போனை துண்டித்தான். அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இப்போ நான் தான் எங்க மாமா விவசாயம், மில், ரியல் எஸ்டேட்... போன்றவற்றை நிர்வாகம் செய்கிறேன்.

காதல் வாழ்க

No comments:

Post a Comment