Tuesday, June 12, 2012

பொன் முடி –கேரளா ஒரு பயண அனுபவம்:


பொன் முடி –கேரளா ஒரு பயண அனுபவம்:
          ஊருக்கு வரும்போதெல்லாம் எங்காவது போட்டோ எடுக்க போவது வழக்கம், இதுக்கு நாங்க வச்சிக்கிட்ட பெயர் ஃபோட்டோகிராபிக் டுர், இந்த தடவை கேரளாவில் உள்ள  பொன் முடி எனும் இடத்துக்கு போகலாம்னு முடிவு செஞ்சோம், எப்படி போவது திரு நெல்வேலியில் உள்ள பல ட்ரவல்ஸ்கிட்ட கேட்டும் யாருக்கும் இந்த இடம் தெரியல. கடசியா உதவியது குகுள் மேப், அத பார்த்து குத்துமதிப்பா டிரைவரிடம் சொல்லி  கிளம்பினோம்.
     திருநெல்வேலி – தென்காசி – ஆரியங்காவு – தென்ம்லை – பொன் முடி. 120 கிமீ தூரம், நல்ல ரோடு, சுகமான பயணம்.

      பார்க்க அனுபவிக்கன்னு எந்த எடமும் இங்கு இல்லை இங்கு அருமையான Weather ( தமிழ்ல அடிச்சிட்டு சிரிச்சிட்டேன்), பச்சை மலைகள், கம்மியான கூட்டம், அமைதியான் சூழல், மாசுபடாத காற்று. ஒரு நாள் தங்கிட்டு வந்தோம்.

     ஒரே ஒரு KTDC ஹோட்டல் மட்டும்தன் இங்கு இருக்கு, இண்டெர் நெட் கிடையாது, BSNL மட்டும் சிக்னல் இருக்கும், வேறு எந்த ஒரு கடையும் கிடையாது, தற்சமையம் ISRO இங்கு ஒரு அருக்காட்சியம் கட்டிக்கொண்டுருக்கிறார்களாம்,  22 ஹெர் பின் வளைவுளை கடந்து, இண்டர்நெட்டில் முன்பதிவு செய்த ருமில் தங்கினோம்.
    சரி அங்க என்ன இருக்கு, ஒன்னுமில்லை அதாவது விசேசமா ஒன்னுமில்லை, காலாற் நடந்து பச்சை நிற மலை குன்றூகளில் ஏறலாம், இயற்க்கை காட்ச்சிகளை ரசிக்கலாம், நன்பர்களொடு அந்த் சுழலில் உட்கார்ந்து பேசலாம், தியானம் பண்ணலாம், எப்படி ரசிக்கனும் என்கிறதை யாரோ முடிவு பண்ணுவதவிட, நாம்தான் அதை திர்மானிக்கனும் ( Post modernism , இது இந்த கட்டுரையில் நான் ரொம்ப பெருமையா ஃபில்ய இடம்).

      25 டிகிரி வெப்பம், மிதமான காற்று நல்ல விய்வு கொண்ட தங்கும் விடுதி என ஒரு ரம்மியமான சுழல். விதவிதம்மா ஃபோட்டக்கள் எடுத்தோம், அவரவர் கற்றுக்கொண்ட புதிய யுத்திகளை பறிமாறிக்கொண்டோம், கற்றவை, பார்த்தவைகளை பற்றி பேசி ரசித்தோம்.

  Action இல்லாது ஒரு பயணமா, போடுங்க ஒரு ட்ரக்கிங், காட்டுக்குள் ஒரு 6 கிலோ மீட்டர் உள்ளே  நடந்து போனோம், அட்டை கடி, யானை விட்ட, அதிலும் ஒரு மாசம் முந்தியது, ஒரு வாரம் முந்தியது என பல வகைகள், மான் புளுக்கை, கரடி நகக்கிரல், 4 எட்டுக்கால் பூச்சி, 3 வண்ணத்து பூச்சி, போன்ற பார்க்க முடியாத பலவற்றை பார்த்தோம். என்னதான் இருந்தாலும் காட்டுக்குள் போயிட்டோம்னு ஒரு திருப்தி. இந்த காட்டு ட்ரெக்கினால் என்ன பயன்ன்னு கேட்டேன், நமக்கும் அட்ட கடிச்சிருக்குன்னு நாம இனிம சொல்லிகலாம்னு ஒரு பாசிட்டிவ் அட்டியூடோடு ஒரு பதில் வந்திச்சி  நம்ம கூட்டத்தில் ஒருத்தனிடம்மிருந்து ( அந்த கம்பேனி HR  நல்ல விதச்சிருக்காங்க), காட்டுக்குள்ள போவதுக்கு முன் சொல்லிவச்ச மோட்டா அரிசி மீண் குழ்ம்பு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரும் வழியில் உள்ள மீன் முட்டி நீர் விழ்ச்சிய பார்க்கமுடியாமல் வீடு திரும்பினோம்.  ( நாலு மனிக்கு மேல நீர் விழ்ச்சி க்ளோசாம், நாங்களலா காலை நாலு மணிக்கு குற்றாலத்தில் குளிப்போம்).











7 comments:

  1. படங்கள் அருமை சகோ. ஒரு சிறியத் திருத்தம் .. பொன்முடி என்பது தான் சரி. கேரளத்தில் இருந்தாலும் அது தமிழ் பெயரே ஆகும்.. பொண்முடி தவறாகும். பொன் முடி என்பதே சரி .. மலையாளத்திலும் '' ன் '' என்று தான் வந்துள்ளது ... !!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமையான பதிவும் படங்களும்.
    அருவிக்கு 4 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லையா? என்ன கொடுமை. குற்றாலத்தில் நான் இத்தனை வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே பகல் வேளையில் குளித்தாய் நினைவு. வெகுகாலமாக நானும் தென்மலை, பொன்முடி செல்ல வேண்டும் என்ற அவாவில் இருக்கிறேன். சீக்கிரம் கைகூடுமென நம்புகிறேன். நீங்கள் ஊருக்கு சென்று திரும்பிய அடுத்த வாரம் நான் சென்று இருந்தேன். தாமிரபரணி குளியல், பரோட்டா, பதநீர், செட்டியாத்து கோவில் சாப்பாடு என நிம்மதியாய் 3 நாட்கள் :) அடுத்த முறை செல்லும்போது கும்பாருட்டி அருவி(ஆரியங்காவுக்கு வெகு அருகில்), மாஞ்சோலை(மணிமுத்தாறு அருவிக்கு மேல் உள்ள மலைபகுதி) சென்று பாருங்கள். நம்ம ஊர் தானா என்று வியக்கும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.

    ReplyDelete
  4. இக்பால் செல்வன் thank you very much for your visit and your feed back. I corrected the post.

    Thank you

    ReplyDelete
  5. Muthukumaran we used to go to பால் அருவி near Aryakaavu when I was in Spic, we used to go by Bike. Fantastic place.

    Last year we went to Manjoli for photgraphic tour, I like that place.

    ReplyDelete
  6. மக்கா நிர்மல், படங்கள், பயண செய்திகள் அருமை. பொன் முடிக்கு 1990 களில் இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் சென்றுள்ளேன். பயகரமான அனுபவம். இன்னும் KTDC ஹோட்டல் மட்டும்தான் இருக்கிறதா?. குடும்பத்தோடு சென்றாயா??

    ReplyDelete