Sunday, December 2, 2012

Life Of Pi - வாசிப்பு அனுபவ பகிர்வு


Life Of Pi - வாசிப்பு அனுபவ பகிர்வு:                 Man Booker Prize பெற்ற நாவலான Life Of Pi யை தழுவி எடுக்கப்பட்ட படம்.  பாண்டிச்சேரிதான் இந்த நாவலின் கதை களம். Pi - 22/7 an Irrational and mystical number, if some one interested in story of the number Pi, they can correlate with story of the Novel. . 

And so it goes with God

                                                                         The Life Of Pi படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனாலும் நாவல் வாசிப்பு அற்ப்புதமான அனுபவத்தை தந்தது. நாவலின் முதலில் பாண்டிச்சேரியில் வசிக்கும் Piscine Molitor எனும் 16 வயது சிறுவனின்  ஆன்மிக தேடல் சொல்லப்படும்,  Piscine Molitor என்ற பெயர் பிடிக்காததால் அதை பை (Pi 22/7) என வைத்துக்கொள்வான். அவன் ஒரே நேரத்தில் கிறுஸ்துவனாகவும், இந்துவாகவும், முஸ்லிமாகவும் வாழ ஆசைப்படுவான், அந்த மதங்களின் கதைகளை பற்றி வியப்பும் ஆச்சரியமும் அவனுக்குள் இருக்கும். இந்த கதைகள் எல்லாம் எதற்க்கு? எது உண்மை? எது பொய்? இவற்றின் தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு அவனுக்கு விடை தெரியவருகிறது நாவலின் முடிவில். 227 ( Pi) நாட்கள் கடலில் பயனத்தை அவன் எப்படி உயிர் பிழைத்தான் என்பதை இரு கதைகளாக சொல்லுவான் ”பை”. 
                                                       
                                                            பாண்டிச்சேரியில் Zoo நடத்திவரும் பையின் தந்தை சூழ்நிலை காரணமாக, கணடாவிற்க்கு சென்று வாழ தீர்மாணிக்கிறார், Zooவில் இருக்கும் எல்லா மிருகங்களையும் அப்படியே கப்பலில் ஏற்றி அந்த கப்பலிலேயே அவரது குடும்பமும் செல்கிறது. நடு கடலில் கப்பல் முழ்கிவிட 227 நாட்க்கள் கழித்து பை மட்டும் கரை சேர்கிறான். அவன் அவனது Castaway அனுபவங்கள்தான் “The Life Of Pi" கதை.

                                                     அவனது கடல் பயனத்தை இரு கதைகளாக சொல்கிறான்.  முதல் கதையில் கப்பல் முழ்கிய பிறகு  ஒரு ஓரங்குட்டன், வரிக்குதிரை, கழுதைபுலி, ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி மற்றும் பை ஆகியோர் ஒரு படகில் பயனிக்கும் சூழல் உருவாகிவிடுவதாகவும், இந்த மிருகங்களோடு எப்படி அவன் பயனிக்கிறான் என்பது முதல் கதை,   அறிவியல் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட விடையமாக சாகசகங்கள் நிறைந்த கதையாக இருக்கும், இதை அறிவியல் சிந்தனை கொண்ட இன்ஸூரன்ஸ் அதிகாரிகள் நம்ம மறுப்பார்கள், மிருங்கள் இல்லாத கதை வேண்டும் என அவர்கள் கேட்க்க அவன் இரண்டாவது கதையை சொல்லுவான், அதில் கப்பல் முழ்கிய பிறகு எஞ்சியவர்கள் அவனோட அம்மா, கண் தெரியாத ஒரு பிரஞ்ச்காரன், ஒரு சமையல்காரன், ஒரு தைவான் மாலுமி ஆகியோர் என சொல்லுவான் பின் அவர்களோடு எப்படி பயனித்தான் என்று சொல்லுவான். 
                                           
                                                        ,  முதல் கதையில் ஓரங்குட்டனையும் , வரிகுதிரையையும் கழுதை புலி சாப்பிடும், கழுதை புலியை ரிச்சர்ட் பார்க்கர் என்னும் புலி சாப்பிடும், புலியும் பையும் ஒரு படகில் 227 நாட்க்கள் ஓன்றாய் இருந்து மெட்ஸிக்கோவில் கரை சேர்வார்கள், புலி காட்டிற்க்கு ஓடி விடும். . அடுத்த கதையிலும் அப்படியே சக மாலுமி / சமையல்காரன் சேர்ந்து பிரஞ்ச்காரனை கொன்று சாப்பிடுவார்கள், பிறகு சமையல்காரன் அந்த மாலுமியையும் , பையின் அம்மாவையும் கொன்று சாப்பிடுவான், இறுதியில் பை அந்த சமையல்காரனை கொன்று சாப்பிடுவான்.  

 முதலாவது கதை நம்ம முடியாததும் சாகசமாகவும் இருக்கும், இரண்டாவது கதை கொடுரமாக இருக்கும்.

                                         இந்த இரு கதைகளையும் சொல்லிவிட்டு அவனுக்கும் இன்சூரன்ஸ் அதிகாரிகளோடு நடக்கும் உரையாடல்தான் அந்த நாவலின் கரு.
இதுதான் அந்த உரையாடல்
“You can’t prove which story is true and which is not. You must take my word for it.”
“I guess so.”
“In both stories the ship sinks, my entire family dies, and I suffer.”
“Yes, that’s true.”
So tell me, since it makes no factual difference to you and you can’t prove the question either way, which story do you prefer? Which is the better story, the story with animals or the story without animals?”
Mr. Okamoto: “That’s an interesting question…”
Mr. Chiba: “The story with animals.”
Mr. Okamoto: [translation] “Yes. [/translation] The story with animals is the better story.”
Pi Patel: “Thank you. And so it goes with God.” 
 and he Cries..........................

                                                  சாதாரான / சராசரி மனிதனின் இறுத்தலின் முக்கியமான தேவையான Belief / Hopeக்கு இடம் கொடுக்காத அறிவியல் முறை சிந்தனையை, முற்ப்போக்கு / நாத்திக வாழ்க்கை முறையை மறு பரிசிலனை செய்யும் பின் நவினத்துவ சிந்தனை முயற்ச்சி இந்த நாவல்.  

                                                இந்த கதை மேஜிக்கல் ரியலிசம் ( Magical Realism) எனும் முறையில் எழுதப்பட்டது அதாவது சாதாரன மனிதர்கள் அசாதாரன வாழ்க்கை அல்லது புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட சூழலோடு வாழ்வது போல அதே சமயம் எதார்த்தமாகவும் எழுதுவது. இது புராண கதை சொல்லுதல் முறை மாதிரி இருந்தாலும் சற்று மாறுதல் உடையது.


2 comments: