Monday, December 10, 2012

கார்மேன் எங்கு இருக்கிறாள்? chicken Soup for the Soul என்கிற புத்தகத்திலிருந்து ஒரு கதை



கார்மேன் எங்கு இருக்கிறாள்?:
 சிக்கன் சூப் ஃபார் தி ஸோல் புக்கில் இருந்த ஒரு கதை
                   என் பெயர் ஆஸ்லி , எனது வயது பத்து, அறிமுகம் இல்லாதவர்களோடு அறிமுகம் ஆகி, அவர்களிடம் லிஃப்ட் கேட்டு அவர்களின் காரில் பயனம் செய்து அமேரிக்காவின் 50 மாநிலங்களையும் சுற்றி வந்த அனுபவ கதையை டிவில் பார்த்தேன். அதை போல எனக்கும் செல்ல ஆசைதான், சூழ்நிலை காரணமாக முடியவில்லை.
                   இந்த கடித்ததோடு இருக்கும் இந்த கரடி பொம்மையின் பெயர் கார்மன், அவளை எனக்கு மிகவும் பிடிக்கும், நான் கேன்சர் சர்ஜரிக்காக ஆஸ்பத்திரியில் இருக்கும்போது பரிசாக கிடைத்தது. கார்மனுக்கு அமேரிக்காவின் ஐம்பது மாநிலங்களையும் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்க்கு உங்களின் உதவி தேவை.  அவளை உங்கள் பயணத்தோடு எடுத்து செல்லுங்கள், புதிய நபர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைங்கள், அவள் எங்கு சென்றால், எந்த இடங்களில் தங்கினாள், நீங்கள் யார், அவளோடு உங்களின் அனுபங்களை பற்றீ இந்த பையில் இருக்கும் நோட்டில் விபரமாக எழுதவும், இவளை செபடம்பர் மாதம் திரும்பி எனக்கு அனுப்பிவிடுங்கள், அதற்க்கான செலவு தொகையாக ஐந்து டாலரும் இந்த பையில் வைத்துருக்கிறேன், எனது முகவரியையும் எழுதியிருக்கிறேன்.
 இப்படிக்கி உங்களின் புதிய நன்பர்கள்
         ஆஸ்லி & கார்மேன்.
         எனது மகள் கேன்சர் சிகிச்சைக்கு பிறகு மிகவும் தைரியம் இல்லாதவளாகவும், புதிய நபர்களையும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயக்கம் கொண்டவாளாக மாறி விட்டாள்.  இந்த உலகின் அற்ப்புதங்களை ருசிக்க தயங்கும் எனது மகளின் பொறுட்டு அவளுக்கு பிடித்தமான கார்மேன் கரடி பொம்மையை அமேரிக்க மாநிலங்களை சுற்றி பார்க்க வைக்கலாமென முடிவு செய்தோம். அவளது கரடி பொம்மை, ஒரு நோட்டு, மேலே கண்ட கடிதம், ஐந்து டாலர் காசு இவற்றை ஒரு பையில் போட்டு, ஒரு ட்ரக் ட்ரைவரிடம் கொடுத்தோம். ஆஸ்லிக்கு தானே இந்த பயனத்தை மேற்கொள்வது போன்ற சந்தோசத்தில் இருந்தாள். அந்த நாள் முதல் எப்போது கார்மேன் ஏங்கு இருப்பாள் யாரோடு இருப்பாள் போன்ற கணவும் நினைப்புதான்.  
               எனக்கு கூட எங்கே கார்மென் திரும்ப வராமல் ஆஸ்லியின் கனவும், ஆசையும் உடைந்துவிடுமோ என்கிற பயம் தொற்றி கொண்டது. மக்கள் மீதும் இந்த உலகின் மீதும் நம்பிக்கையும் இந்த உலகை எதிர்கொள்ள தேவையான தைரியத்தையும் கார்மேனின் பயனம் தரும் என்கிற எனது நம்பிக்கை சரிதானா, எனகூட சந்தேகம் வந்துவிட்டது.

      ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 24ஆன் திகதி கார்மேன் வீட்டுக்கு வந்தாள். அவளின் பையில் ஏராளாமான பரிசு பொருள்களும், அவள் பயனம் செய்த விபரமும், அவளை பயனத்தோடு இனைத்தவர்களின் விபரமும், பல ஃபோட்டோக்களும் இருந்தன. இந்த ஐந்து மாதங்களில் கார்மேன் 16 மாநிலங்களுக்கு பயணம் செய்திருந்தாள். ஆஸ்லி,  கார்மேனின் பயனத்திற்க்கு உதவிய நபர்களுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினாள், சிலர் அவளுக்கு நன்பர்களாகவும் ஆனார்கள். கார்மேனின் இந்த பயணக்கதை எங்கள் ஊரில் பரவ எங்கள் ஊரின் நூறு பேர்களின் மத்தியில் அந்த பயணக்கதயை பகிர்ந்தாள் தைரியமாகவும், சந்தோஸமாகவும்.

     இந்த உலகத்தில் அற்புதஙகள் நிகழும் என்கிற சிந்தனை திறனையும், மனிதர்களின் அன்பின் மீது நம்பிக்கையும், தைரியத்தையும் எனக்கும் ஆஸ்லிக்கிம் இந்த குட்டி கரடி பொம்மை தந்தது என்பது ஆச்சரியமானதாகவே இருக்கிறது இனறு வரை. 

1 comment:

  1. மனித நேயத்திற்கு என்றுமே அழிவில்லை என்பதை உணர்த்தும் அற்புதக்கதை :-)

    ReplyDelete