1. இந்தியாகிரி #1: Dilute and pollute: எந்த ஒரு புதிய விசியமென்றாலும் அதை தேவைக்கு அதிகமா யோசித்து, அதில் புளிச்சி போன சொந்த சரக்கை சேர்த்து விசியத்தின் வீச்சை காணாமல் ஆக்கிவிட்டால், புதிசை நேசிக்கிறேன்னு சொல்லிகிட்டு பழசையே தொடரலாம். இது இந்தியாகிரி #1.
2. இந்தியாகிரி#2 Delay and let it decay. : ஜவ்வு மிட்டாயே பிரச்சனையாகும் அளவுக்கு ஜவ்வா இழுக்கனும், பிறகு என்ன! பிரச்சனையை அனுகுவதிலே பிரச்சனையாக்கிவிட்டால்! முதல் பிரச்சனையை மறந்துருவோம். இது இந்தியாகிரி #2.
3. இந்தியாகிரி #3: Say yes and do No : முடிவு எடுப்பதற்க்கு முன் சரி, சரி, ஆமாம், ஆமாம், முடிவு எடுத்த பின்பு அப்படியா? எப்படிப்பா? அது எப்படி இப்படி? ன்னு சொன்னால் முடிவும் எடுத்தாச்சி அத பின்பற்றாமலும் இருந்தாச்சி. இது இந்தியாகிரி #3.
4. இந்தியாகிரி #4 Over use and Never use : புதிய திட்டம் சட்டம் எதுனாலும் சரி அமைதியா ஏற்றுக்குவோம். தேவை இல்லாத நேரங்களிலும், இடங்களிலும் கடைபிடிப்போம், கடைபிடிக்க வைப்போம். அப்புறம் அதுவே கஸ்டமா இருக்குன்னு எங்கேயும் கடைபிடிக்க மாட்டோம். சட்டத்த பின்பற்றவும் செஞ்சாச்சி அப்படி அதை மண்ணுல போட்டு முடவும் செஞ்சாச்சி. இது இந்தியாகிரி #4.
5. இந்தியாகிரி #5 Raise and Raze: மக்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு எதிராளியை ஏத்திவிடனும், காசு, புகழ்னு அள்ளிவிடனும். அப்புறம் மக்களே அவனை நிராகரிச்சிடுவாங்க. உதவியும் பன்னியாச்சி எந்த ஒரு மாறுதலும் வர விடாமலும் செஞ்சாச்சி. இது இந்தியாகிரி #5.
6.
இந்தியாகிரி #6 இந்த சாமி சொன்னதல்லாம் நம்மள மாதிரி சாதாரன ஆள்கள்
பின்பற்ற முடியாதுன்னு சொல்லி சாமி கும்பிட்டுவிட்டு சடங்கை நிறவேற்றிவிடலாம். புதியதை
ஆதரிச்சாச்சி எந்த மாற்றமும் ஏற்ப்படாது தடுத்தாச்சி. இது இந்தியாகிரி #6.
7.
இந்தியாகிரி #7 Magnify to Nullify இந்த பிரச்சனைக்கு காரணங்கள்
. தெரியல, நான், இவன்,. அவன், இது, அவை, இவை
,அது, அதுவும் இதுவும், அவைகளும் இவைகளும். ”தீர்வு கண்டுபிடிக்க உதவியாச்சி கண்டுபிடிச்சி சரி செய்ய
சிரமம் கொடுத்தாச்சி” இது இந்தியாகிரி #7.
8.
இந்தியாகிரி#8 Talking about problem till talking
become a new problem பிரச்சனையை பற்றி பேசி பேசி பேசி பேசி இன்னும் நிறைய பேசி அந்த
பேச்சிருந்தே புதிய பிரச்சனையை உருவாக்கி அதை பற்றி பேசி பேசி இன்னும் நிறைய பேசி..…..
அப்புறம் என்ன! பிரச்சனைகளை பேசியாச்சி பிரச்சனைக்கு தீர்வும் இல்லாமல் ஆக்கியாச்சி.
இது இந்தியாகிரி #8.
9.
இந்தியாகிரி#9 Blame to win: நானில்ல, அவனான்னு தெரியல, இவனான்னும் தெரியல, இவன்தான்,
இல்லை… இல்லை.. அவன்தான், சாரி சரியா தெரியல. யாருமே இல்லை. சாரி தெரியல. கண்டுபிடிக்க
முயன்றாச்சி கண்டுபிடிக்காமல் விட்டாச்சி. இது இந்தியாகிரி #9.
10. இந்தியாகிரி
#10 Confuse to refuse அது இல்லயே? இது இருக்கு
சார், இது இல்லயே? அது இருக்கு சார், அதுவும் இதுவும் இல்லயே? அதுவும் இதுவும் இருக்கு
சார், இதுவும் அதுவும் இல்லயே? இதுவும் அதுவும் இருக்கு சார்? அதுவும் இதுவும் இன்னோரு
அதுவும் இதுவும் இல்லயே? ஆமாம் சார். அப்ப போயிட்டு அந்த அதுவும் இதுவும் இன்னோரு அதுவும்
இதுவும் கொண்டுவாங்க. ”வேலையில கண்டிப்பா இருந்தாச்சி வேலையும் செய்யாமல் இருந்தாச்சி.”
இது இந்தியாகிரி #10.
அருமை... குறிப்பாக முதல் பாயிண்ட் அருமை.... எழுத்துப்பிழைகளை கொஞ்சம் சரி செய்து இருக்கலாம்...
ReplyDelete