Sunday, January 13, 2013

எழுத்துக்களின் அதிகாரம் – மெட்டா ஃபிக்ஸன்


எழுத்துக்களின் அதிகாரம் – மெட்டா ஃபிக்ஸன்:
                                 
                       Reading is Believing, வாசிப்பதை நாம் நம்புவர்களாகவும், நம்புவதற்க்காக வாசிப்பவர்களாகவும் இருக்கிறோம். வாசித்தல் என்பதை கலை படைப்புகளை அறிதல் என்றும் அர்த்தம் கொள்க. எழுத்து பேச்சுக்கு முந்தியது என்றாலும் அதில் இருக்கும் கறார் தன்மை அதிகம். எழுத்து மனிதனின் அதிகார சின்னமே. ஆதிகாலம் கொண்டு முக்கியப்படுத்தலுக்கும் உடன்படிக்கைகள் கடைபிடித்தலுக்குமே எழுத்துகளை பயண்படுத்திருக்க வேண்டும். என்று வாய் வழி கலை படைப்புகளை எழுத்து வடிவில் உருவாக்க பட்டதோ அன்று, எழுத்தின் அதிகாரம் அப் படைப்புகளுக்கும் வந்திருக்க வேண்டும். அது கொண்டுள்ள அதிகாரத்தின் விளைவுகளின் ஒன்று அதை நாம் நம்புவது, எழுத்துக்களை நம்ப பழக்கபட்டுருக்கிறோம், இப் பழக்கம் ஒரு காலத்தில் நாம் உயிர் வாழ்தலை நிருனையம் செய்திருக்கும். அதிகாரத்தின் சின்னமான எழுத்தைக்கொண்டே அந்த அதிகாரங்களை கழைய முற்ப்படுதல் இன்று எழுத்து கலையின் புதிய பரினாமமெனலாம். என்னதான் புதினம் என்று சொன்னாலும் அப் புதினஎழுத்துக்கள் நம்மை அதிகாரமே செய்கிறது. வாசகன் எழுத்தின் அதிகாரங்களிடமிருந்து தப்பிக்க மீண்டும் எழுத்திற்குள்ளே விழுகிறான். இந்த vicious circle பயணத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்லுதல் வாசகனுக்கு சவாலே! Its really hard to read just for reading pleasure, authors' help is a must.

                      எழுத்தின் அதிகாரத்தின் பிடியில் இருந்து  தப்பிப்பது எப்படி வாசகனுக்கு சவாலோ, அதை விடவும் பன் மடங்கு சவால் படைப்பாளிக்கும் இருக்கிறது, எழுத்தை கொண்டு எழுத்தை கடப்பது எப்படி?, அதிகாரத்தின் மையமான எழுத்தாளன் எப்படி அந்த அதிகாரத்தை உடைப்பது?  எழுத்தின் அதிகாரத்தை வாசகனிடம் செல்லாமல் கதை சொல்வது எப்படி?  இதை செய்ய புதின எழுத்தாளர்கள் கையாளும் முறையே மெட்டா ஃபிக்ஸன் ( Meta Fiction).  எழுத்தாளனின் அதிகார விழ்ச்சியோடு எழுதும் முறையை Meta Fiction என்கிறார்கள்.


             பிரதியின் உடே அப் பிரதியை பற்றி கிண்டல் செயதல், பிரதி உருவாக்குதலை பிரதியாக்குதல், பிரதியை கலைத்து போடுதல், பிரதியை சந்தேகப்படுதல், எழுதும் எழுத்தாளரே அப் பிரதியில் பாத்திராமாகுதல், பாத்திரங்களே தாங்கள் கற்ப்பனைகள் என வாசகனுக்கு சொல்லுதல், பிரதியின் நம்பகதன்மையை சந்தேகித்தல், பிரதியில் வேண்டுமென்றே பிழை செயதல், பிரதிக்குள் தேவையில்லாத தகவல்களை சொல்லுதல், பிரதிக்குள் பிரதி வைத்தல் போன்ற முறைகளால் வாசகனுக்கு இது ஒரு புதினம், இது ஒரு கலைபடைப்பு என உணரவைக்கும் முறையே மெட்டாஃபிக்ஸன் என்கிறார்கள். அவன் வாசித்து கொண்டுருப்பது கட்டமைகப்பட்ட ஒன்றே எனும் உணர்வு அவ்வப்போது பிரிதியில் சொல்லப்படுகிறது. இம்முறை கொடுக்கும் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது, எப்படி வித்தியாசமாக இருக்கிறது என்பதை எனக்கு சொல்ல தெரியவில்லை.
              

1 comment: