Sunday, February 9, 2014

கதை சொல்லி ஆறுதல்படுத்து - ஒரு பயிற்சி முகாம் அனுபவம்

 கதை சொல்லி ஆறுதல்படுத்து - ஒரு பயிற்சி முகாம் அனுபவம்




இந்த லிங்கில் http://susanperrow.com/ இருக்கும் விபரங்களை சொல்லிக்கொடுக்கும் ஒரு வொர்க் சாப்பிற்குதான் நானும் பிச்சையும் சென்றோம் . கதைகள் மூலம் குணப்படுத்துவது பற்றியது இது.

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கும் குழைந்தைகளுக்கும் எப்படியான கதைகளை நாம் உருவாக்கலாம் என்கிறதை சொல்லி தருகிறார் சுசன்.
சூசனின் பேச்சு உண்மையிலே அருமையாக இருந்தது. 



 Storytelling and Healing என  சென்னையில் உள்ள storytellinginstitute  நடத்திய 

http://www.storytellinginstitute.org/122.html  பயிற்சி முகாம் ஒன்றுக்கு சென்றோம். வொர்க் சாப்பில் சொன்னது  எல்லாம் நமக்கு தெரிந்ததுதான் புரிந்ததுதான். ஆனாலும் அதை முறைப் படுத்தி சொல்கிறார் அதை நடத்திய சுசன்.

கதைகளின் பூமி நமது நாடு. மனிதர்களை ஆறுதல் படுத்த நம்மூரில் பல

கதைகள் உண்டு ஆனாலும் சுசன் அதை முறைபபடுத்தி இருக்கிறார்.
அறிவாற்றல் அதிகம் இல்லாதவர்கள் கூட இதை வீரியத்தோடு பயன்படுத்துதற்கு ஏற்ப முறை படுத்தி சொல்லிக் கொடுக்கிறார்.

இதுதான் நமக்கும் மேற்கு உலகுக்கும் வித்தியாசம். ஒரு வழி முறையை சோஷியலிஸ் செய்கிறார்கள். அதாவது எல்லோரும் அதை பயன்படுத்த சொல்லித்தருகிறார்கள். இந்த முறை கவுன்சிலிங் செய்பவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலருக்கும் பயன்படும். ஒரு  நிர்வாகத்தில் பணிபுரியும் லிடர்களுக்கும் பயன்படும். இதன் தொடர்ச்சி பற்றிய விபரம் இதோ http://www.centerforcounselling.blogspot.in/2013/08/diploma-in-expressive-arts-therapy.html




நாங்கள் சென்றே இந்த  Storytelling and Healing வொர்க் சாப்பில் அடுத்த நிகழ்வு கதை சொல்லிகள் சொல்லும் ராஜா ரானீ கதைகள் , பாட்டி கதைகள். மூன்று கதை சொல்லிகளான அல்லி, கலா மற்றும் அருள்மொழி சொல்லிய கதைகளை கேட்டோம்.

பாட்டி கதையாக சொன்ன கொழுந்து ராஜன் கதை, ராஜா ராணி கதையாக சொன்ன ஒரு விசித்திரமான கதை, சதி ஒழிப்பு பற்றிய ஒரு சரித்திர கதை எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

ஒவ்வரு கதையின் முடிவிலும் பார்வையாளர்களிடம் இந்த கதை எப்படியான சங்கடத்தில் இருப்புபவர்களிடம் சொல்லப்படவேண்டியது என்ற கேள்வியை கேட்டு சிறு கலந்துரையாடலும் நடந்தது. ஒவ்வரு கதைப் பற்றிய புரிதல்கள் கேட்ப்பவர்களுக்கு வேறு மாதிரியாக இருந்தது என்பது நான் கவனித்த ஓன்று.


மூன்று கதைகளை பற்றி பார்வையாளர் ஒருவர் தொகுத்து சொல்லியவிதம் அருமை. மூன்று கதைகளும் பெண்களை பற்றியது கர்வம் , குடும்ப மானம் மரியாதை சம்பந்தப் பட்டதாக இருப்பதை சுட்டிக் காட்டி எப்படி honor தாண்டி வாழ்கையை முன் வைக்க இப்படியான கதைகள் சொல்லித்தருகின்றது என்பதை சொன்னவிதம் அருமை

பார்வையாளர்கள் என்று சொல்கிறேன் அல்லவா, அவர்களில் சில வெளிநாட்டுக்காரர்கள் , தமிழ் மேற்குடி மனிதர்கள் , அதிகமான பெண்கள் வெகு சில ஆண்கள். கூட்டத்தில் மீசை வைத்து காட்டான் தோற்றம் கொண்டவர்கள் நானும் பிச்சையும்தான் மற்றவர்கள் எல்லாம் ஹை பை . எல்லோரும் ஆங்கிலத்திலே உரையாடிக் கொண்டார்கள் முடிந்த வரை, முடியாத தருணத்தில் மட்டுமே தமிழ் பாவிக்கப்பட்டது. 


1 comment:

  1. சூப்பர் பதிவு....ஏதாவது ஒரு கதை விவரித்து சொல்லி இருக்கலாமே?

    ReplyDelete