Wednesday, February 19, 2014

தண்டனை ரத்து கொண்டாட்டம்:

தண்டனை ரத்து கொண்டாட்டம்:

சிலர் அம்மாவுக்கு நன்றிங்க்றான், இன்னும் பலர் நீதி கிடைத்துவிட்டது என்கிறார்கள், சிலர் தமிழர்களுக்கு வெற்றிங்றான், எதுவும் சொல்லவில்லையென்றால் தமிழின துரோகின்றான். ஃபேஸ்புக்கே கொண்டாடுது. அரசியல் தலைவர்கள் உற்சாக வரவேற்ப்பை கொடுக்கிறார்கள், தமிழக அறிவு ஜிவி சமுகம் துள்ளி ஆர்பரிக்கிறது, சினிமா நடிகர்களான தமிழக தத்துவவாதிகள் எல்லோரும் வெற்றி முழக்க...ம் இடுகிறார்கள். இனையத்திலும் பேஸ்புக்கில் சிலாகிக்கிறார்கள். படித்தவர்கள் புகழ்கிறார்கள்.

மிடில.
இவர்களது மன ஓட்டத்தோடு என்னால் ஒத்து போக முடியாமல் இருப்பது ஏன்? என்பதைப் பற்றீய சிறிய பதிவு.

                தண்டனை ரத்து சட்டத்திற்க்கு உட்பட்டு இருப்பது போலதான் இருக்கிறது. உடன்பட முடிகிறது. ஆனால் இந் நிகழ்வை கொண்டாட முடியவில்லை. நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனனில் அது பல வாதங்களுக்கும் சாட்சியங்களின் பரிசிலனைகளுக்கு பிறகு தந்த தீர்ப்பு.

         ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டவர்களின் தண்டனை ரத்தை கொண்டாட முடியாத அளவிற்க்கு பரந்த மன பக்குவம் எனக்கு இல்லையே என்பதுதான் எனக்குள் பயத்தை கொண்டு வருகிறது.

                தமிழனாக இருந்து கொண்டு இப்படியான குற்றவாளிகளின் விடுதலைக்காக சந்தோஷம் அடையாத எனது மனது வெறும் கல்தான். என்பது போலவும் தோன்றுவதை மறைக்க முடியவில்லை.

எனது தந்தையை கொன்றவனையும் மகளை பலத்காரம் செய்தவனின் குற்றங்களைக் கூட வருங்காலத்தில் இது போல நடக்கும் பட்சத்தில் நானும் பரந்த எனது மனதையும் மனிதாபிமானத்தையும் எனது கொண்டாட்டம் மூலம் காட்டிக் கொள்வேனாக. அதற்க்கான மன உறுதியை ஆண்டவன் தருவானாக.

                   இந்த கொண்டாட்டங்கள் எப்படி நாம் குற்றங்களை சகித்துக் கொள்கிறோம் என்பதை சொல்வதாகவும், குற்றங்களை தடுப்பதின் மீது உள்ள நம்பிக்கையையின் அளவை காட்டுகிறது என்றும் ஏன் நாம் பார்க்க கூடாது? 


                இதை வரவேற்றும் நீதி நிலை நாடுதல் பற்றீயும் பல அறிவு ஜிவிகளும் சொல்லுவது வியக்கவே வைக்கிறது.  குற்றங்கள் தடுப்பதில் நீதியின் தேவையை பொது மக்களுக்கும் இளைய  சமுதாயத்தினருக்கும் உணர்த்த கடமைபட்டுள்ள அறிவு ஜிவிகள் சந்தோஷத்துடன் குலுகலிப்பது வேதனையாகவும் இருக்கிறது.
             







                 இப்படியான கொண்டாட்டங்கள் முலம் குற்றவாளிகள் மிக லெகுவாக மக்களின் அனுதாபத்தை பெற்று அரசியலில் இறங்கி நம்மை ஆளுபவர்களாக ஆகிவிடுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். புலான் தேவி பாராளுமன்றத்திற்க்கு தேர்வானது இப்படிதான்.  நம்மை ஆளும் அதிகாரத்தை கூட தானாமாக வழ்ங்கும் நிலைக்கு  நம்மை நாமே கொண்டு சென்றூவிடுகிறோமோ என்கிற  சந்தேகம் உருவாகுவதையும் தடுக்க முடியவில்லை.
 
 
 

 
        இந்த நான்கு பேர்கள் என்னை பொருத்தவரை வரும் தேர்தலில் வெற்றீ வாய்ப்பு அதிகம் உள்ள தேர்தல் வேட்பாளர்கள்  நல்ல அரசியல் கட்சி சார்ப்பாக போட்டியிட்டால் வெற்றி கூட பெற்றுவிடுவார்கள். அப்படியில்லையென்றால்  தேர்தல் கள பணி செய்வார்கள். 

இங்கு நான் தீர்ப்பின் மீது வாதத்தை வைக்கவில்லை. இதை பெரிய புரட்சியாக பார்க்கும் மன நிலையோடு ஓத்து போக முடியாத நிலையை விளக்குகிறேன். குற்றங்களுக்கு தகுந்த தண்டனை என்ற பயம் எல்லா சமுகத்திடமும் இருக்க வேண்டியது. அது  இந்தியாவில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  அடுத்த குற்றம் நடக்கும் பொழுது ஒருத்தனுக்கும் பயம் இல்லைப்பா என்கிறதையும் நாம சொல்லிக் கொள்வோம்  இன்று கொண்டாடிய கொண்டாட்டத்தை மறந்து..  
 
 அமைதியாக கடந்து போக வேண்டியதிற்க்கு புரட்சி சாயம் பூசி கொண்டாடுகிறோம் என தீர்கமாக சொல்ல முடிகிறது என்னால்.  எதற்க்கெடுத்தாலும் போஸ்டர், ஃப்ளக்ஸ் போர்ட் வைக்கும் கலாசாரத்தின் நீட்டிப்பாகவே இதை பார்கிறேன். இதை ஆதரித்த அறிவுஜிவிகளை சந்தேகத்தோடு பார்க்கிறேன்.

முடிவாகவும் சொல்கிறேன் இது இந்த தண்டனை ரத்து கொண்டாட்டம் மீதான பதிவு.

10 comments:

  1. Fist of all the Capital Punishment judgement itself based on altered confession. The officer who recorded the confession has accepted that he altered
    the confession.They were implicated by certain officers under a master plan to divert the attention from the actual killer.User your common sense to
    understand the implication in this case.
    M.Baraneetharan.

    ReplyDelete
    Replies
    1. He did not alter the confession.. he said he didn't record the fact that the accused did not know the actual purpose for which the batteries were bought...

      Delete
    2. Dear Anonymous sir, I am not mentioning or criticizing judgment. My concern is about reaction to this decision. Thank you very much for your comments. your comments means to me lot.

      Delete
  2. வணக்கம்
    எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. exactly what i felt... its not true that the whole TN is celebrating..... I feel SC has set a wrong precedence....

    ReplyDelete
    Replies
    1. Yes LN, it is not the whole TN celebrates but in future can be. Thank you very much for your comments. your comments means to me lot.

      Delete
  4. அவர்கள் குற்றம் செய்திருப்பார்கள் என நம்பாதவர்கள் இந்த தண்டனை குறைப்பை கொண்டாடுகிறார்கள் ...விடுதலையை வரவேற்கிறார்கள் ...நமது காவல் துறை ....புலனாய்வு துறைகளின் மீதான நம்பகத்தன்மை அந்த நிலையில் இருக்கிறது .சில பத்தாண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றத்தில் பாண்டியம்மாள் என்ற மணமான பெண்ணின் தந்தை மகளைக்காணவில்லை ...மருமகன் கொலை செய்திருக்கக்கூடும் என்று புகார் கொடுக்க காவல் துறை கணவனைக்கைது செய்து விசாரித்து போட்ட போட்டில்....கொலை செய்ததாக கணவனே ஒப்புக்கொண்டான் ...சில நாட்களுக்குப்பிறகு மனைவி எங்கோ கோபித்துக்கொண்டு சொல்லாமல் போனவள் திரும்பவும் வந்த பிறகே உண்மை தெரிந்து நீதி மன்றம் கணவனை விடுவித்தது !சாதாரண பெண்ணின் கணவனுக்கே இந்த அடி உதை என்றால் ...ராஜீவ் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர்களை என்ன போடு போட்டிருப்பார்கள் ?
    முன்னாள் சிபிஐ இயக்குனர் மாதவன் அந்தத்துறையின் சீர்கேடுகளுக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று போபார்ஸ் வழக்கின்போது குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன்!

    ReplyDelete
  5. இன்னும் ஒரு நகைச்சுவை கதை ......ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் மனைவி வீட்டில் ஏதோ பொருளைக் காணவில்லை என தொலைபேசியில் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் சொன்னார் .சம்பந்தப்பட்ட அதிகாரியும் உடனே விசாரிப்பதாக சொன்னார்.சிறிது நேரத்தில் அதே அதிகாரியின் மனைவி காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பொருள் வீட்டிலேயே இருந்ததாக கூறி மன்னிப்புககேட்டார்...அதற்கு விசாரணை அதிகாரி "பரவாயில்லை மேடம் ....நான் உடனே நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தேன் ,அதில் மூன்று பேர் உங்கள் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டு விட்டனர் என்று பதில் சொன்னாராம் !இது நீண்ட நாட்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது!!!தனது பணபலம் ...ஆன்மீகப்பின்புலம் போன்றவற்றைப்பயன்படுத்தி கொலைக்குற்றத்திலிருந்து தப்பித்து மகான்களாக நடமாடுகிறார்களே ,அவர்கள் குறித்து உங்கள் மனம் என்ன பாடுபடும் ???

    ReplyDelete
  6. //ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டவர்களின் தண்டனை ரத்தை கொண்டாட முடியாத அளவிற்க்கு பரந்த மன பக்குவம் எனக்கு இல்லையே என்பதுதான்//

    வாழ்த்துக்கள்.
    போதையில்லில்லாம தெளிவாக இருப்பதற்கு.

    ReplyDelete