கருனை, அன்பு, பாவம் , உணர்வுகளை தாண்டிய பாரா ஒலிம்பிக்ஸ்
தனக்கான புதிய கணவை உருவாக்கி கொள்வது,
வாழ்கையோடும் சமுகத்தோடும் தன்னை பினைத்து கொள்ளுவது என்பது மனிதரிகளின் தேவையான
ஒன்று, பலருக்கு இது தானாக நிகழ்ந்துவிடுவது உண்டு.
கணவுகளில் பெரியது சிறியது என இருக்குமே தவிர, ஏதாவது
ஒரு முனைப்பு ஒன்று ஒவ்வருவரையும் முன்னகர்த்தி சென்று கொண்டேதான் இருக்கும் அது குடும்பமாக
இருக்கலாம், குழந்தையாக இருக்கலாம், கலையாக
இருக்கலாம் வேலையாக இருக்கலாம், தான் எனும் ஈகோவாக இருக்கலாம், சமுக
சேவை, கடவுள் என இன்னும் எதுவாகவும் இருக்கலாம்.
இதை செயல்படுத்த மனபூர்வமாக அனுபவிக்க முக்கியமான தேவை உடல் , உடல்
நலம் உடல் வளம் இதுவே நம் எண்ணங்களை செயலாக்கும் கருவி என சொல்லவிட முடியும்.
ஆனால் வாழ்வோடு தனனை பினைத்து கொள்ளவும்
தனக்கு பிடித்தவையோடு முனைப்பாக முன் நகர பெரும் தடை உடல் குறைபாடுகள்.
அது பலரை இன்னும் இருட்டிலே வைத்துவிடுவதும், ஒதுக்கிவிடுவதுமாக
இருப்பதே எதார்த்தமாக நாம் பார்க்கும் சூழல். பாரா
ஒலிம்பிக்ஸ் உடல் குறை உள்ளவர்களுக்கான விளையாட்டு பற்றி எழுத போகிறேன் என்றதும் எனக்குள்
வந்த முதல் குழப்பம் உடல் உனமுற்றவர்களை எப்படி இந்த கட்டுரையில் குறிப்பிட போகிறேன்
என்பதுதான். ஊனம், உடல் உணம், குறைபாடு,
ஊனமுற்றோர், பார்வையற்றோர், மாற்று திறனாளிகள்,
இப்படி பல சொற்கள் தமிழில், இன்னும் நம்மோடு
வாழும் மனிதர்களை எப்படி குறிப்பிடுவது என்பதிலே சிக்கலோடு இருக்கும் இந்த சூழலில்தான்
இதைப் பற்றி எழுத வேண்டிதான் உள்ளது.
இன்றும் நம்மூரில் நம் பாவ புண்ணியங்களை போக்கவும்..
நமது பரந்த விரிந்த கருணை உள்ளங்களை காட்டவுமே இவர்களை வைத்திருக்கிறோம்
. அய்யோ
பாவம் என்று இவர்கள் மீது கருணை காட்டி ஒரு சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறோம்
என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
இவர்கள் மீது காட்டும் அன்பும் கருணையும் இவர்கள் இப்படி
இருக்கும் நிலையை கண்டு அவமான படுதலில்லிருந்தே துவங்குகிறது.
1948 ஆம்
ஆண்டு லண்டனில் மாற்றுதிறனாளிகளின் விளையாட்டை அறிமுகபடுத்தியிருந்தாலும் அடுத்த ஆண்டுகளில்
ஐரோப்பிய நாடுகளில் இவை மெல்ல மாற்றங்கள் உருவாக்கி... 1960 ஆம்
ஆண்டு ரோமில் முதல் பாரா ஒலிம்பிக்ஸாக நடைபெற்றது. இந்த
வேளையில் "பாரா" என்பதன் அர்த்தம் என்னவென தெரிந்து கொள்வது அவசியம்.
கிரேக்க சொல்லான "பாரா" என்றால்... "தன்னையொத்த"
அல்லது "இணையான" என அர்த்தம். இணையானவர்களுக்காக
பொது ஒலிம்பிக்ஸிக்கு நிகராக நடத்தபடும் ஒலிம்பிக்ஸ் என அர்த்தப்படும்.
இந்த பாரா எனும் வார்த்தையை கூட அறிமுகம் செய்தவர் குமேன் ஆவார்.
அதை தொடர்ந்த பல ஒலிம்பிக்ஸ் நடந்தாலும் 1988 சியோலில்
நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து பொது ஒலிம்பிக்ஸ் நடக்கும் நகரத்திலே தொடர்ந்து
நடத்தப்பட்டு வருகிறது.
யார்
இந்த பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள முடியும், முக்கியமா
மூன்று பிரிவுகள் உள்ளது, உடல் குறை பாடுகள் உள்ளோர், பார்வை
குறைபாடு, நரம்பு மூளை செயல்பாடு குறைவு உடையவர்கள்.
இம்மூன்று பெரும் பிரிவுக்கு கீழ் பல உட் பிரிவுகள் உண்டு.
ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வி என்பது சோர்வடையாமல் நீண்ட நேரம் தனது உடல்
வலு, உடல் ஆற்றல், மனதை ஒருமுகபடுத்தும்
திறன் , விளையாட்டின் நுனுக்கத்தோடு முறையாக விளையாடும் திறனால் மட்டுமே
நிர்னயக்கப்பட வேண்டும் , உடல் குறைபாடுகள் கொண்டு விளையாட்டின் வெற்றி தோல்வி நிர்னயம்
செய்ய்யக் கூடாது , அதாவது
ஒரே மாதிரியான குறைபாடுகள் கொண்டவர்களுக்குள்ளே போட்டி நடத்தப்பட வேண்டும் என்கிற கொள்கையின்
படி சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியினர் உடல் குறைபாட்டைக் கொண்டு பிரிவுகள் உருவாக்கினார்கள்
, இதன் மூலம் ஒரே பிரிவினருக்கிடையிலே விளையாட்டு திறன் உடல் மன திறன் பரிசோதிக்க
முடிகிறது. உதாரணமாக,
கை கால் இழுத்தவர்கள், கால்களின் உயரம் சமமாக இல்லாதவர்கள்,
பார்வை முழுவதுமாக இழந்தவர்கள், என பல பிரிவுகள்
உண்டு. வீரர்
அவர் தேர்ந்தடுக்கும் விளையாட்டை விளையாட அவரது உடல் குறைபாடு எந்த அளவு தடையாக இருக்கிறது
என்பதை கொண்டே உள் பிரிவு உருவாக்கப்படுகிறது.
இந்த
முறை ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் ஜோதியை ஏற்ற தன் நாற்காலியில் முன்னேறி போகிறார்,
அங்கு அவர் முன் பல படிகள் ஆனால் ஜோதியை கொண்டு சேர்க்க வேண்டிய இடமோ உயரத்தில்,
என்ன செய்ய என அங்கு அமைதி, இசை நிறுத்தப்படுகிறது,
பார்வையாளர்களுக்கு குழப்பம், எல்லாம் அமைதி...
அரை நிமிடம் கழித்து அந்த படிகளுக்குள் அழகிய சறுக்கு பாதை ஒன்று உருவாகிறது,
அதன் வழியாக ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்கிறார். வாழ்
நாள் முழுவதும் மறக்க முடியாத கதை சொல்லல் இது, உடல்
உணமுற்றோர் ஒவ்வருவருக்கும் ஏற்ப்படும் அந்த உணர்வின் சிறு துளியை சிறு மணி நேரம் பார்வையாளர்களுக்குள்
கடத்தி சென்ற தருணம் அது.
குட்மென் மாதிரி இங்கு ஒருவர் வேண்டும்
!! குட்மெனின் சிறிய கனவு இன்று உலக பேரதிசயமாய்,
புதிய புதிய கதைகளையும், வாழ்வின் மீது பற்றுதலையும், வீரர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தினருக்கும் அளித்து வருகிறது. அன்பும்
கருனையும் நேசமும் கரிசனை அல்ல தேவை, புதிய சொற்களின் உற்பத்தி அல்ல. அவர்களையும் சேர்த்து கொண்டாடவும் முன்னேறவும் செய்கிற புதிய
பாதை புதிய நோக்கு புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் அந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றிய வீரனின்
முன் நிகழ்ந்த மாற்றம் போல அதுவே இங்கு அவசியம்.
No comments:
Post a Comment