Friday, March 16, 2012

போர் குற்றம் - தமிழர் உணர்வு

போர் குற்றம் - தமிழர் உணர்வு

   ராஜபக்சை ஒரு போர் குற்றவாளி இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை,  இதில் இந்தியா ஆதரிச்சால் தமிழர் உணர்வுக்கு மதிப்பாம் இல்லை இந்தியா, தமிழர்க்கு எதிரியாம் இதில்தான் எனக்கு உடன்பாடு இல்லை, ஒரு உலகம் அறிந்த உண்மையை ஒரு இனவெறி கோசமாக எடுத்து செல்லும் சில அரசியல் தலைவர்களை என்ன செய்ய. இலங்கைக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு கொடுத்தால் தமிழர்களின் உணர்வை மதிப்பு கொடுத்ததாக ஆகிவிடுமா? தமிழர்களின் உணர்வு ஆதரவு/ எதிர்ப்பு எல்லாம் அரசியல் கோசம்.

 ஒரு பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா, பொறுப்பான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த போர் குற்றத்திர்க்கு இந்தியாவும் போறுப்புதான் இதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தியாவின் முடிவு அதன் எதிர்காலத்தை நிர்ணைக்க போகிறது. எப்படி பிரபாகனின் முடிவு விடுதலைபுலிக்கு முடிவோ அதுபோல சிக்கள அரசியல் தலைவர்களும் அவர்களது முடிவை அவர்கள் நிர்ணைக்க முடியாது, சர்வதேச போர் குற்ற நிதிமன்றம்தான் நிர்னைக்க முடியும். போரில் ஈடுப்பட்ட இருவருமே குற்றவாளிகள்தானே. If War is against Humanity then both parties who indulged in War are Criminals.  

  ஒரு போரின் வெற்றியை கொண்டு தேர்தலில் வெற்றி செய்யவைப்பது போல ஒரு மூடத்தனம் எதுவும் இல்லை. அதை சிங்களவர்கள் செய்துவிட்டார்கள், இரண்டாம் உலகப்போரில் சர்ச்சிலை வீட்டுக்கு அனுப்பினார்கள், அது சரி. தமிழ் நாட்டில் எப்போதும் இந்திய எதிர்பலை இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்க்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கு மரித்தவர்கள் தமிழர்கள் இல்லையென்றால் என்ன முடிவோ அதுதான் இதற்க்கும் முடிவு. இதில் உள்ள அடுத்த சிக்கல் இந்தியா ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கவில்லை என்றால் இந்தியாவின் மறைமுக தொடர்பை ராஜபக்சை வெளியிடுவான். சோனியாவின் இடுபாட்டை உலக அறிய செய்வான்.

   ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் அந்த முடிவினால் எற்ப்படும் சாதக பாதக முடிவிற்க்கு பொறுப்பாளிகள். அதிகாரமும் பொறுப்பும் செங்கோலின் இரு முனைகள். இதில் உணர்வு அது இது என நாம் குழப்பிக்கொள்கிறோம் எண்றாலும் உயிர் இழந்தவர்களின் கணக்கும் அருகாமையும் நம்மை உணர்ச்சி வசப்படவைக்கிறது என்பது உண்மைதான்.

 இலங்கைக்கு எதிரான இந்த போர் குற்ற நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு  ஆதரவு அளித்தால் ஒரு பொறுப்பான நாடு. இல்லை சர்வேதச அரங்கில் இந்தியாவின்   நிலை கேள்விக்குறிதான்.

1 comment:

  1. EVERYBODY MUST READ THIS.

    எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர்,

    நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

    பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

    இதில் மிக வேதனைக்குறிய விடையம்

    இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

    சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


    சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

    .
    .

    ReplyDelete