Sunday, May 26, 2013

வளைகுடா பற்றிய பதிவு


  வளைகுடா பற்றிய பதிவு:



         சூட்டறிக்கும் வெயில், புழுதி புயல், வெளியே போகமுடியாத வெக்கை, புழுக்கம், வேற்று ஊற்றும் ஈரபதம், மேலும் எங்கும் சுதந்திரம் இல்லாத சூழல், நேற்று இங்கு சுமாரன வெயில்தான், என்ன 104 டிகிரி மட்டுமே, இதுதான் வெயில் கால ஆரம்பம், இன்னும் இது 115 வரைக்கும் போகும். இருந்தும் வளைகுடாவிற்க்கு வரவேண்டும் என்றும் இங்கு நீடித்து வேலை செய்து சம்பாதிக்கனும் என்கிற ஆசை எப்படி வருகிறது.

         முதலில் பணம் ஆமாம் இங்கு வேலை செய்து வரும் ரியால்கள்களை இந்திய ருபாய்க்கு மாற்றும் போது அதிகமான ருபாய் கிடைக்கும். இது மட்டும்தானா? இதை தவிர வேறொன்றும் இல்லையா, உற்றார் உறவினர்களையும் தாய் தந்தையினரையும் விட்டு விட்டு தொலை தூரத்தில் இப்படி காசுக்காக ஆனாதையாக கிடைக்கிறோம் நாங்கள் என்று பொதுவாக சொல்வதுண்டு. இது உண்மையிலும் உண்மையாக இருந்தாலும் இது மட்டுமே உண்மையல்ல, இதை தவிரவும் இன்னும் சில விடையங்கள் உண்டு. அவற்றின் சிலவற்றை பார்ப்போம்.

         இதை பற்றி எழுதுவது கடினமானதும் சிலரின் மனதை புண்படுத்துவதாக கூட இருக்கலாம், எனவே இதை என்னை போன்ற பலரது அனுபவமாக மட்டுமே எடுத்துக்கொள்ளனும், நான் சொல்ல போவது அந்த சிலருக்கு மட்டுமே பொருந்தும். எல்லோருக்கும் பொருந்தாது. 

    இங்கு பணம் சம்பாதிக்க ரொம்ப அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ மேலும் அதிக படித்து பட்டம் பெற்று இருக்கனுமென அவசியமில்லை. இந்தியாவில் உழைப்பதைவிடவும் சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும். திறமை இருந்தால் இன்னும் சிறப்பு, நம்ம ஊர் டிப்ளோமாவோடு இங்கே இஞ்சினியாராக பணி புரியலாம். ஒரு டிகிரியை வைத்துக்கொண்டு மேனேஜர் வரை போகலாம். சிறிது திறமை, சரியான வாய்ப்பு இருந்தால் ஜெனரல் மேனஜராக கூட வாய்ப்புகள் அதிகம்.

   இங்கு இருக்கும் தொழிற்சாலைகளில் இருக்கும் பாதுகாப்பு முறைகள் மேலும்  வேலை செய்யும் இடத்தில் இருக்கும் சவுகரியம் இந்தியாவை காட்டிலும் அதிகம், மிகவும் ஸ்டிரிக்டான பாதுகாப்பு விதிகள் உண்டு, சும்மா எடுத்தோம் கவுத்தோமென எதுவும் செய்யமுடியாது, இங்கு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏற்ப்படும் நோய்களை தடுக்க கூடிய உபரணங்கள் உலக தரத்தோடு அளிப்பார்கள், மேலும் அதை அனிய கட்டாய படுத்துவார்கள். சரியான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் உண்டு. எனவே கூடுதல் பாதுகாப்பான வேலை இடம் இந்தியாவை காட்டிலும் இங்கு உள்ளது. பெட்ரோல் கெமிக்கல் தொழிற்சாலைகள் மிகவும் ஆபத்தானவைகள், அவற்றை பாதுக்காபாகவும் லாபகரமாகவும் இயக்க வேண்டும். சிறிய பிழை கூட பேராபத்தை உருவாக்க கூடியது. அப்படிபட்ட சூழலில் இங்கு பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முதன்மையான காரணங்களில் ஒன்று. 

   இனி வருவது முக்கியமான ஒன்று, இதுவே பலரின் வளைகுடா வாழ்க்கை நீடிப்பதற்க்கு காரணம். பெரும்பாலோர் ஏதோ ஒரு Commitment வோடுதான் இங்கு வருவார்கள், தங்கை திருமணம், தம்பி படிப்பு, கடன் அடைக்க போன்றவைகள், இந்த தேவைகள் பூர்தி ஆனதும் கிளம்பிவிடுவேன் என சொல்லும் இவர்களால், மீண்டும் இந்தியா போக முடியாத வகையில் அவர்களது திருமணம் கட்டிபோட்டுவிடும். இங்கு குடும்பத்தோடு வசித்து கொண்டே வேலை செய்பவர்களின் மனைவிகள் வளைகுடா நாட்டை விரும்புகிறார்கள். மனைவிக்கு தேவை கணவனும், பிள்ளைகளும் மட்டுமே என ஆகிபோன நிலையில், அவர்களுக்கு ஏற்ற இடமாக கருதுகிறார்கள்.  அவர்கள் வேறு யாரையும் திருப்தி படுத்த தேவையில்லை, மாமியார், நாத்தனார், ஒன்னு விட்ட சித்தி, சித்தப்பா போன்றவர்களுக்காக போலியாக நடித்தோ அல்லது சண்டையிட தேவையில்லை. மேலும் கணவனோடு இன்னும் நெருக்கமாகவும் Intimate ஆக இருக்கவும் வளைகுடா வாழ்க்கை உதவுகிறது எனபதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய மிடில்க்ளாஸ் பெண்களின் அனுபவிக்கும் சில கட்டுப்பாடுகள் சிறிது தளர்க்கும் எனவும் சொல்லல்லாம், அவரகளது சின்ன சின்ன கணவுகள் எளிதாக கைகூடும் வாய்ப்புகள் இங்கு அதிகம்.  நினைத்த நேரத்தில் ஏழலாம், நினைத்த நேரத்தில் தூங்கலாம், விரும்பியதை சமைக்கலாம், சமைக்காது அடுப்பாங்கரைக்கு லிவு விடலாம், எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டிலே. இது சரியா/ தவறா என நீயா நானா மாதிரி கேட்க்கபுடாது , நான் சொல்லுவது இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். என்பதுதைதான்.  

      பெரும்பாலான பெட்ரோலிய தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. அவற்றில் சில இலவச மெடிக்கல் இன்ஸுரன்ஸ் மேலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி. இந்தியாவில் மெட்ரிகுலேசன் பள்ளியின் படிக்கும் மாணவனை காட்டிலும் இங்கு கல்வி கட்டணம் குறைவு மேலும் அந்த பணத்தை கம்பேனியே ஏற்றுக்கொள்கிறது, எனவே +2 வரை பிள்ளைகளை சிறப்பான பள்ளியில் இலவசமாக படிக்க வைத்துவிடலாம். இப்போது இங்கு கத்தாரிலும் துபாயிலும் உலகத்தின் சிறந்த பல்கலைகழகங்கள் அவர்களது கல்லூரிகளை ஆரம்பித்துள்ளது, தற்ப்போது பல பெற்றோர் கல்லூரியிலும் கூட சேர்த்துவிடுவது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

       இதை சொல்லாமல் முடிக்க முடியாது, இந்தியாவில் இங்கு போல சம்பாதிக்க அறிவாற்றல் வேண்டும் ofcourse எல்லா இடத்திலும் அது வேண்டும்,  நான் சொல்ல வருவது சுமாரான அறிவோடும் படிப்போடும் நேர்மையாக தகடுத்தனம் செய்யாது பணம் சம்பாதிக்க வளைகுடா அற்ப்புதமான இடம் என சொல்லுவேன். இந்தியாவில் இந்த அளவு சம்பாதிக்கனுமென்றால் கண்டிப்பாக ஏதாவது அப்படி இப்படி இருக்கனும் அல்லது அதுக்கு துனை போகனும். இது நான் சொல்றது 10 -15 வருடங்களுக்கு முன்பு, இப்ப எப்படின்னு எனக்கு தெரியாது. இல்ல இப்படி தகுடுத்தனம் செய்யாமலே நாங்கள் இந்தியாவில் சம்பாதிக்க்றோம் என்றால் கண்டிப்பாக ஆறிவும் திறனும் அதிகம் என்று அர்த்தம். நான் சொல்லுவது சுமாரான அறிவு, மக்குக்கு அடுத்த நிலையை. எழுத்தறிவு இல்லாத எல்லா மலையாளியும் கல்ஃபில் இருப்பதனால்தான் கேரளா, 100% எழுத்தறிவு கொண்ட மாநிலமாக இருக்கிறது என இங்கு கேலியாக சொல்வதுண்டு.  

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்கள் தினம் தினம் இங்கு இந்தியாவிலிருந்து உடல் உழைப்பையும் திறனையும் விற்று வாழ்கிறார்கள், மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். அது முழுக்க முழுக்க உண்மை. சிலரின் வாழ்க்கை கண்ணிரால் எழுதபட்டிருக்கு, அவர்கள் மட்டுமே வளைகுடா அல்ல, , 
      இங்கு பல கோடிஸ்வர இந்திய வியாபாரிகள் உண்டு அதாவது வளைகுடா நாட்டிலே கோடிஸ்வர்கள். பெரும்பாலான கோடிஸ்வரகள் கேரளாவை சேர்ந்தவர்கள். 

7 comments:

  1. ''நினைத்த நேரத்தில் ஏழலாம், நினைத்த நேரத்தில் தூங்கலாம், விரும்பியதை சமைக்கலாம், சமைக்காது அடுப்பாங்கரைக்கு லிவு விடலாம், எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டிலே.''
    200% TRUE

    ReplyDelete
  2. வளைகுடா பற்றி ஒரு வித்தியாசமான பதிவு

    ReplyDelete
  3. நிர்மல் ,அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் .மனைவிகள் ள் பற்றியது நூறு சதம் உண்மை

    ReplyDelete
  4. எழுத்தறிவு இல்லாத எல்லா மலையாளியும் கல்ஃபில் இருப்பதனால்தான் கேரளா, 100% எழுத்தறிவு கொண்ட மாநிலமாக இருக்கிறது என இங்கு கேலியாக சொல்வதுண்டு.

    👆😉😎

    ReplyDelete