Monday, June 24, 2013

கத்தார் – பேபி சீட் காமெடி: ”பேபி சீட்டு”க்கும் சேர்த்து டிரைவராக பணிபுரிந்த அனுபவம்


கத்தார் – பேபி சீட் காமெடி:  ”பேபி சீட்டு”க்கும் சேர்த்து டிரைவராக பணிபுரிந்த அனுபவம்: 



          இங்கு கத்தாரில் குழந்தைகளை காரின் முன் இருக்கையில் வைத்து பயணம் செய்ய கூடாதென்று ஒரு விதி இருக்கிறது. அப்படி பயணம் செய்தால் போலிஸ் பிடித்து அபராதம் போடும். சுருக்கமாக சொல்லுவதென்றால் இது ஒரு சாலை பாதுகாப்பு விதி. விபத்தின் போது பாதுகாப்பு பலூன் திறந்துவிட்டால் சிறு குழந்தைகள் முச்சு தினறி இறந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த முறை.  

             எங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு காரில் செல்லும் போது மனைவியும் குழந்தையோடு வண்டியில் உரிமையாளர் போல பின் இருக்கையில் அமர்ந்து கொள்வார். மடியில் குழந்தையை வைத்து கொள்வார். நான் ஞே……. என இந்த வண்டியின் டிரைவர் போல வண்டி ஓட்டி செல்வேன். இது ஒன்றும் புதியது அல்ல, மற்ற தமிழர்கள் குடுப்பத்தோடு எப்படி காரில் சென்றார்களோ அப்படியே சென்று வந்து கொண்டிருந்தேன்.  
        பெரும்பாலும் தமிழ் குடும்பங்களின் காரின் சீட்டிங் arrangement இப்படித்தான் இருந்தது.  கணவன் கார் ஓட்டுவார்  மனைவியும் குழந்தைகளும் பின் இருக்கையில் இருப்பார்கள். முன் இருக்கை காலியாக இருக்கும். இது கத்தார் தமிழர்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று. இப்படி செட்டப்பை பார்த்தாலே இது நம்ம ஊர் என தெரிந்துவிடும்.

             குழந்தைகளை மட்டும் தனியாக பின் இருக்கையில் விட்டுவிட்டு, மனைவி முன் இருக்கையில் அமர்ந்து செல்லவதில்லை  நாங்கள். எனென்றால் குழந்தைகள் தனியாக பின் இருக்கையில் இருக்காது, அழும், அடம்பிடிக்கும், தனியாக ஃபில் செய்து பயப்படும். மேலும் சீட் பெல்ட் இல்லாது தனியாக பின் இருக்கையில் குழந்தைகளை விடுவதும்  ஆபத்தே எனவே மனைவி அவர்களை பத்திரமாக பிடித்து வைத்திருப்பார். அதாவது அவரது கண்கானிப்பில் அவரது பிடியில் பத்திரமாக இருப்பார்கள்.
 
               ஆனால் பாருங்கள். ஐரோப்பிய குடுப்பத்தோடு காரில் சென்றால் டிரைவர் சீட்டி கணவனோ அல்லது மனைவியோ இருப்பார்கள், காரின் முன் இருக்கையில் யார் கார் ஓட்டுகிறாரோ அதை பொறுத்து கணவனோ அல்லது மனைவியோ இருப்பார். பின் இருக்கையில் குழந்தைகள் இருக்கும். அது ஒரு வயதென்றாலும் சரி, 10 வயதென்றாலும் சரி. குழந்தைகள் பின் சீட்டில் மட்டுமே பார்க்க முடியும். ஒரு வயதென்றால் காரில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் பேபி சீட்டில் உட்கார்ந்து இருக்கும், பெரிய குழந்தைகளன்றால் சீட் பெல்ட் போட்டு கொண்டு சமத்தாக இருக்கும்.
          அது சரி இந்த பேபி சீட் சமச்சாரம் நமக்கு தெரியாம போச்சேன்னு விலை கூடுதலான ஒரு பேபி சீட்டை வாங்கி, காரில் பொருத்தி குழந்தையை வச்சா ஏதோ மரத்தில கெட்டி வச்சி அடிக்கிற மாதிரி பேய் கத்து கத்தி ஊர கூட்டுது. அப்புறம் என்ன காரின் பின் புறத்தில் காலியான பேபி சீட், மனைவி அப்புறம் அவரது மடியில் குழந்தை என பயணம் தொடர்ந்து. அதுவரை குடும்ப டிரைவராக இருந்த நான் சிறு முன்னேற்றம் அடைந்து அந்த ”பேபி சீட்டு”க்கும் சேர்த்து டிரைவராக பணிபுரிந்தேன்.
         
        இந்த கூத்து  தெரியாத மற்ற நாட்டுக்காரர்கள், பின் இருக்கையில்  குழந்தையோடு செல்லும் மனைவியை பார்த்து, ம்ம்ம் இந்த இந்திய பெண் அரேபியை போல அவளது காரை ஓட்டவதற்க்கு ட்ரைவர் எல்லாம் வச்சிருக்கா பாரு பெரிய பணக்காரிதான் என நினைப்பது உண்டு. மேலும் சிலர் ம்ம்ம்ம்ம்ம்ம் ட்ரைவர் தோரனைய பாருடா என்ன ஸ்டைய்ல் என என்னை பார்த்து நினைத்து கொள்வதும் உண்டு. அப்படி நினைப்பது அவரகளது  தவறல்ல எனென்றால் மனைவிக்கு எப்போதும் உள்ள இடம் முன் இருக்கை, அதை அவர்கள் எந்த காரணத்திற்க்கும் விட்டு கொடுப்பதில்லை. பிள்ளைகளுக்கு பின் இருக்கை அதையும் எப்படியோ ட்ரிக் செய்து குழந்தைகள் வள்ர்க்கும் முறையில் கொண்டு வந்துவிடுகிறார்கள். அந்த சிறு வயதிலே பாதுகாப்பான உனர்வை கொடுத்து தைரியத்தை வர வழைத்து விடுகிறார்கள். தாயின் மடியை போல இந்த காரும் நமதே இதுவும் பாதுகாப்பானதே என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள். இந்த முறை வளர்ப்பு அக் குழந்தைகளின் Self Confidence levelஐ அதிகரிக்க கூட செய்யலாம்.

          பேபி சீட்டிலும் உட்காராத, தனியாகவும் இருக்காத அல்லது இருக்க விருப்பம் இல்லாத மன நிலை எப்படி நமது குழ்ந்தைகளுக்கு மட்டும் இருக்கிறது அதே வயதுள்ள ஐரோப்பிய குழந்தை ஜம்முன்னு உட்கார்ந்து உலகத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறதுதானே? ”தைரியமாக”. 

4 comments:

  1. அருமையான பதிவு,”கத்தார்”ல் மனைவியுடன் காரில் செல்வதே ஒரு சுகம் தான்.....

    ReplyDelete
  2. Thinamum nadakum / parkum oru vishayam...azagana vargalil ;)

    ReplyDelete
  3. பேபி சீட்டிலும் உட்காராத, தனியாகவும் இருக்காத அல்லது இருக்க விருப்பம் இல்லாத மன நிலை எப்படி நமது குழ்ந்தைகளுக்கு மட்டும் இருக்கிறது
    >>
    பாப்பா உடம்புல இருக்குற ஜீன் தான் காரணம்..,

    ReplyDelete
  4. Nirmal I agree with Raji. Even the habits are genetically transformed. My second daughter sreamed like anything while I fastened seat belt in the aircraft. Her cry would be like "oppaari" of our paattis. She was sreaming " yaempaa enakku ippadip pandreenga. naan paappaa thaana...." Every one near by joined me laughing.

    A.C.Srikanth

    ReplyDelete