மார்பை சுவைத்த மீன்கள்: மைக்ரோ கதை
ஆற்றில் குளிக்க ரொம்ப பிடிக்கும், அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மந்தியான நேரம் குளிப்பது இன்னும் சுகம். மணி பண்ணிரண்டு சுட்டறிக்கும் வெயில், பொதி அடிக்கும் கழுதை கூட இல்லை, தலையில் துண்டை சுற்றி கொண்டு நடந்து ஆற்றை நோக்கி சென்றேன். பன்னி கத்தும் சத்தம் கேட்டு சுற்றி பார்த்தேன், பொதுவா இந்த இடத்தில் பன்றி கிடையாது, எங்கிருந்து வருதுன்னு பார்த்தா ஒரு ஆள் பன்னி போல கத்தி வாந்தி எடுத்து கொண்டிருந்தான், அதுவும் சிறு குட்டைக்குள். வாந்தியெடுப்பதும் அந்த வாந்தி கலந்த குட்டை தண்ணிரில் முழ்குவதுமாக இருந்தான், சிறுது நேரம் அங்கு நின்று வேடிக்கை பார்த்தேன், அந்த சிறு குட்டை இப்போது அவனது வாந்தியாகவே இருந்தது, இருந்தும் அதிலிருந்து வர முடியாமல் அந்த தண்ணிர்க்குள் பன்றி போல கத்தி கொண்டிருந்தான். மெதுவாக நடந்து ஆற்றை அடைந்தேன், அருமையான குளிப்பு, குளுமையான நீர் உடலை சிலிர்த்தது, காலை சிறு மீன்கள் சுறு சுறுப்பாக கடித்து சுத்தம் செய்தன, சில மீன்கள் தைரியமாக மார்பின் நூனியை சுவைத்தன, சிலிர்த்தது உடல், இதயம் கணிந்தது இந்த உலகமே நல்லதாக தோன்றியது, சிலிர்ப்பை கொடுத்த அந்த கெண்டை மீனுக்கு முத்தம் தர முடியாத ஏக்கம் தாக்க. ஃப்ரி ஸ்டையிலில் இரு ரவுண்ட், பட்டர்ஃப்ளை ஸ்டையிலில் ஒரு ரவுண்ட், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் ஒரு ரவுண்ட் நிச்சல் அடித்து களைத்து ஆற்றங்கறையில் ஓய்வெடுத்து, பின் குளித்துவிட்டு வீடு திரும்பினேன்.

romba kevalama irukku.
ReplyDelete