Monday, October 21, 2013

தனிமையின் நூறு ஆண்டுகள்: ஜிரோ டிகிரி- மேஜிக்கல் ரியலிசம் & மெட்டா ஃபிக்ஸன் :

தனிமையின் நூறு ஆண்டுகள்:  ஜிரோ டிகிரி- மேஜிக்கல் ரியலிசம் & மெட்டா ஃபிக்ஸன் :


சாருவின் ஜிரோ டிகிரியில் ஜெனிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த நாவலின் முதல் வரிகளை மட்டும் சுட்டிக் காட்டிருப்பார். அது ஏன் என்பதை அடுத்த  பதிவில் பார்ப்போம்.  ஜிரோ டிகிரியிலிருந்துதான் எனக்கு 100 years of solitude புத்தகம் அறிமுகம் ஆனது. மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்த இந்த நாவலை எனக்கு அறிமுகபடுத்திய சாருவிற்க்கு என்றும் அன்புகளும் நன்றிகளும். 






தனிமையின் நூறு ஆண்டுகள் கதை சொல்லும் முறையை மேஜிக்கல் ரியலிஸம் என சொல்லுவார்கள்இந்த மேஜிக்கல் ரியலிஸத்தின் தந்தை என  காமாவை ( கார்சியா மார்கேஸ்) அழைக்கிறார்கள். வாசித்து முடித்தவுடன் எது உண்மை எது பொய் என குழப்பம் வந்துவிடுகிறது. அந்த அளவிற்க்கு கற்பனையான ஒரு விஷயத்தை நேர்த்தியாக அதிக விபரத்துடன் தகவலைப் போல சொல்லிவிடுவது. அதுதான் மேஜிக்கல் ரியலிசம். நம்ம ஊர்ல நாட்டுப்புறக் கதைகள் பாட்டி சொல்லும் கதைகள் எல்லாம் இந்த வகையறாதான். 
              
  தங்க நிற யானை ஒன்றை நான் பார்த்தேன் என எழுதினால் அது பொய் / கற்பனை எளிதில்  கண்டுபிடித்துவிடலாம்ஆனால்  நான் எங்கள் ஊரிலிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நன்பகல் வேளையிலே நடந்து கொண்டிருந்த பொழுது 15 தங்க கலர் யானைகளை பார்த்தேன்அதில் 4 ஆண்  யானை 8 பெண்  யானை மேலும் மூன்று குட்டிகள்அந்த குட்டிகளில் ரெண்டு ஆண்மற்றொன்று பெண்அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன” என எழுதினால் ஸ்லைட்டா  நம்ப ஆரம்பித்துவிடுவோம்அப்படித்தான் இந்த நாவலிலும் கற்பனைகளோடு அதிகமான விபரங்களை சேர்த்து சொல்லிருப்பார் எல்லா கற்பனைகளிலும் எண்கள் பயண்படுத்திருப்பார்உதாரணம் கற்னல் அர்லியோனோ 13 போர்களை தொடுத்தார்அவருக்கு 17 மகன்கள் எல்லோரின் பெயரும் அர்லியோனோஎல்லோரின் நெற்றியிலும் சிலுவை குறி இருக்கும் என சொல்லுவதால் அந்த கற்பனைக்கு உன்மை சாயம் பூசப்படுகிறது அதுவே புதினத்தின் வாசிப்பை இண்ட்ரெஸ்டிங்காகவும் ஆக்குகிறது. 



மெட்டா ஃபிக்‌ஷன்: 
               அடுத்து காமாவின் இந்த நாவல் ஒரு மெட்டா ஃபிக்ஷன் கூட, புதினம் பற்றிய புதினம் மெட்டா ஃபிக்ஷன். இந்த மெட்டா ஃபிக்ஷன் புரிதல் இந்த நாவலை அடுத்த தளத்திற்க்கு எடுத்துச் சென்றுவிடும். இந்த மெட்டா ஃபிக்ஷனில் எழுதும் எழுத்தாளரும் பங்கு பெறுவார், வாசகர்களையும் கூட உள்ளே இழுத்துவிடுவார்கள். அது போலவே தனிமையின் நூறு ஆண்டுகளிலும்  வாசிக்கும் நாம் உள்ளே சென்றுவிடுவோம். எப்படி என்று பார்ப்போம்.



       மில்கியாதேஷ் எனும் நாடோடி சிங்கப்பூர் கரையோரத்தில் செத்துவிடுகிறான், ஆனால் திடிரென மக்கோண்டாவில் தோன்றுகிறான் இயல்பாக இருக்கிறான், ஒரு நாள் வெண்டியாக்கள் வீட்டிலுள்ள ஆராய்ச்சி கூடத்தில்  அமர்ந்து யாருக்கும் புரியாத மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் எழுதிய குறிப்புகளை அந்த ஆராய்ச்சிக்  கூடத்தில் விட்டு செத்துப்போகிறான். க்கண்டோவில் இறந்த முதல் மனிதன் மில்கியாதேஷ்.
           இந்த மில்கியாதேஷின் குறிப்புகளை பின்வரும் வெண்டியாக்களின் வாரிசுகள் படிக்க முயல்கிறார்கள் அதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்கிறார்கள் ஆனால் யாராலும் முடியவில்லை, இறுதியில் ஆறாவது தலைமுறையின் தோன்றும் ஒரு அர்லியோனா வெண்டியா அதை முயற்ச்சி செய்கிறான், அவனது இடைவிடாத முயற்சியால் அவனுக்கு மில்கியாதேஷ் எழுதிய குறிப்புகளை வாசிக்க முடிகிறது, ஆனாலும் அதன் அர்த்தம் விளங்க சில காலம் ஆகிறது.
       மூன்று காலங்களையும் ஒரே கணத்தில் உணர்ந்து எழுதியது போன்ற  முறையில் எழுதப்பட்ட வெண்டியாக்களின் வாழ்க்கை வரலாறுதான் அந்த குறிப்புகளில் இருப்பது. எழாவது தலைமுறையில்  வெண்டியாக்கள் என்ன ஆனார்கள் என்பது அந்த குறிப்புகளில் இருக்கிறது என்பது நமக்கு தெரியவருகிறது.
         அதே முறையில்தான் ( மூன்று காலமும் உணர்ந்து எழுதுவது) இந்த நாவலும் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.  முதல் வெண்டியாவான யோசே முதல் எழாவது தலைமுறை வரை நுணுக்கமாக எழுத்தப்பட்டிருக்கிறதை வாசிக்கிறான் அர்லியோனோ.
       மேலும் இந்த ஆறாவது தலைமுறை அர்லியோனாவிற்க்கு ஒரு பழைய புத்தகக் கடைக்காரர் நண்பராக இருக்கிறார் அவர் வேறு யாருமில்லை கார்சியா மார்கேஸ்தான், அவரும் எதோ ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார், முடிவில் முன்று பெட்டிகள் பிடிக்கு அளவிற்க்கு எழுதிய பேப்பரைகளை எடுத்துக்கொண்டு மக்கண்டோவின் முடிவை அறிந்தவராக ஊரை விட்டு வெளியே சென்று பிரான்சில் பழய பேப்பரும் பாட்டில்களும் விற்க்கிறார்.
       இப்போழுது நாம் வாசித்துக் கொண்டிருக்கும் தனிமையின் நூறு ஆண்டுகளின் புத்தகம் எப்படி உருவானது என யூகிக்க முடிகிறதா. அந்த முன்று பெட்டிகள் பிடிக்கும் அளவிற்க்கு கொண்டு சென்ற பேப்பர்கள்தான் நாம்  படித்துக்கொண்டிருக்கும் நாவல்.
 இங்கதான் ட்விஸ்ட் இருக்கு, எனக்கு புரிந்தவற்றை எப்படி சரியாக எழுதப்போகிறேன் என தெரியவில்லை இருந்தாலும் ட்ரை செய்கிறேன்.       
        
         “மில்கியாதேஷ் எழுதிய வெண்டியாக்களின் வாழ்கை குறிப்புகளை ஆறாம் தலைமுறை வெண்டியா வாசிக்கிறான். கார்சியா மார்கேஸ் எழுதிய வெண்டியாக்களின் வாழ்கை குறிப்புகளை நாவலாக வாசகன் வாசிக்கிறான்இப்போழுது வெண்டியாக்கள் யார்? வாசகன் யார்?  ரெண்டும் ஓன்றாகிவிடுகிறதெல்லவா, so  நாம்  நமது கதையைத்தான் படித்துக்கொண்டிருக்கிறோம்.   இது மெட்டா ஃபிக்ஷன் அற்புதம்.

              


 இது போக இன்னும் பல விதமாக புரிந்து கொள்ளக் கூடிய ஆச்சரியமான எழுத்துக்கள் இவை தென் அமேரிக்க அரசியல், கம்பூனிஸ்டுகள்  செய்த புரட்சிகள்,  முதாலாளிகளின் சுரண்டல்கள் அடிக்கடி நடக்கும் புரட்சிகள் அதனாலும் வரும் ஆட்சி மாற்றங்கள் குழ்ப்பம்  இவைகள் எல்லாம் கொலம்பியாவை எப்படி தனிமை படுத்தின என்கிற  அரசியல் பார்வையிலும் பார்க்கலாம் அப்படியும் புரிந்துக் கொள்ளலாம்.


          ஆன்மிக ரீதியாக இந்த  நாவலை பார்க்க  வேண்டும்மென்றால் யோசே ஆர்காடியா வெண்டியாவை  பைபிள்  சொல்லும் முதல் மனிதன் ஆதாமாக யோசித்து பார்க்கலாம், மெக்கண்டோவை Garden Of Eden ஆக பார்க்கலாம். எப்படி மனிதனின் வீழ்ச்சி அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
           சமுக ரீதியாக பார்க்க வேண்டுமென்றால் மக்கண்டோவை  மார்க்ஸ் சொன்ன Utopian State ஆக வைத்து பார்க்கலாம். Utopian State என்பது கணவு அதை கலைத்துப் போடுவது மனிதனின் குணம் என்பது மிக அற்புதமாக புரிகிறது இந்த நாவலின் மூலம்.

          மனிதர்களின் வாழ்வியல் பார்வையில் பார்த்தால் வெண்டியாக்காலின் தனிமைக்கு தள்ளும் காரணங்கள் என்ன போன்றவற்றை பற்றி பேசலாம்.
           இப்படியாக பல் வேறு தளங்களும் நிலைகளையும் கொண்ட நாவல் - தனிமையின் நூறு ஆண்டுகள்  - One Hundred Years of Solitude.

       



அடுத்த பதிவில் ஜிரோ டிகிரியோடு தொடரும்

 இந்த புத்தகம் தமிழிலும் வந்திருக்கிறது - தனிமையின் நூறு ஆண்டுகள், படித்து இன்புறுக. கீழ் கானும் சுட்டு வாங்குவதற்க்கு உதவும்.

11 comments:

  1. தேவையான படங்கள் , அவசியமான உதாரணங்கள்னு கலக்கி இருக்கீங்க. அந்த அளவுக்கு எழுத்தில் மூழ்கி இருக்கீங்கணு தெரியுது...ஹேட்ஸ் ஆஃப்

    ReplyDelete
  2. இரண்டு முறை வாசித்தேன். நல்ல பதிவு... இது போன்ற சிக்கலான நாவலுக்கு இது போன்ற முன்னுரைகள் நிறைய வரவேண்டும்.இந்த பதிவு நாவலை வாசிக்கத் தூண்டுகிறது. கொஞ்ச நாளாகவே ஆங்கிலத்தில் வரும் கிளாசிக்குள் 50 நாவலை எடுத்து,அதன் கதைச் சுருக்கத்தை தமிழில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.நாவலை முழுவதுமாக வாசித்திருக்க தேவையில்லை. குழந்தைகளின் இல்லுஸ்டிரேட்ட் வெர்சன் இருந்தாலே போதும்.அதை வைத்து எழுத வேண்டும்.தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள்,அதைப் படிக்கும் போது ஆங்கில கிளாசிக்குகள் உள்ளே போகும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். இப்படி நினைத்திருந்தேன்.உங்களின் இந்தப் பதிவு அதற்கு ஒரு வடிவத்தை கொடுத்தது மாதிரி இருக்கிறது.அந்தப் பணியை செய்யவும் தூண்டுகிறது.

    எனக்கு இந்த font வித்தியாசமாக கடலைப் பருப்பு மாதிரி பெரிதாக தெரிகிறது நிர்மல்.அப்புறம் கொஞ்சம் எழுத்துப் பிழை.நானே ஒரு எழுத்துப் பிழை நாயகன். இருந்தாலும் இது கொஞ்சம் ஆழமான பதிவானதால் அதைக் கவனியுங்கள்...

    ReplyDelete
  3. பிச்சை மற்றும் மரப்பசு விஜை, உங்கள் கமெண்டுகளுக்கு நன்றி.
    எழுத்துப் பிழையில்லாமல் எழுத முயன்று கொண்டே இருக்கிறேன். ரொம்ப கூச்சமாகத்தான் இருக்கிறது இப்படிச் சொல்ல.

    ReplyDelete
  4. இந்த நாவலை நான் வாசித்து பல மாதங்கள் ஆகிறது நிர்மல். வாசித்த போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கிய வகைகள் எதுவுமே எனக்கு தெரியாது. இதனை வாசிக்கும் போது என் விருப்பங்களை அதிகமாக கொண்டுள்ள ஒரு பிரதியை பிரக்ஞையின்றியே வாசித்திருக்கிறோமே எனும் உணர்வே மேலோங்கி மெய் சிலிர்க்கிறது. அருமையாக எழுதியுள்ளீர் நண்பா

    ReplyDelete
    Replies
    1. கிமூ நன்றிகள். உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  5. Hi Mr Nirmal,
    I've been directed to your blog after reading charu sir's blog, I really liked the magical realism explanation and you made it as simple so that anyone can understand, Keep up the good work Mr Nirmal.

    ReplyDelete
  6. Good introduction to Magical Realism with examples and Meta Fiction. Hope last three paragraphs can be realized once I read the novel. Let me try. Really we miss such articles in Tamil literature. Keep going

    Narayanan.N

    ReplyDelete
  7. மிக நன்றாக உள்ளது... என்னிடம் தூங்கும் அந்த புத்தகத்தை மீண்டும் படிக்கிறேன்

    ReplyDelete