Thursday, May 22, 2014

டிஜிடல் ஸ்டோரிஸ்: வாங்க கதை சொல்லுவோம்

டிஜிடல் ஸ்டோரிஸ்: வாங்க கதை சொல்லுவோம்
               நாம் சினிமா எடுக்கு ஆரம்பித்த பொழுது நாடகங்களைதான் அப்படியே சினிமாவில் கொண்டு வந்தோம், இன்றும் கூட அது அவ்வளவாக மாற வில்லை. அதிகமான டையலாக் கொண்டு நகர்த்தும் சினிமாக்களே அதிகம். சினிமாவைப் போலவே இப்பொழுது எடுக்கும் குறும் படங்களும்.
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாடுகள் இன்று அதிகமான சூழலில், நடிகர்கள் டையலாகுகள் இல்லாமல் கூட ஒரு கதையை நம்மால சொல்ல முடியும்.

                இதற்கன விசேட தொழில் நுட்பங்கள் தேவையில்லை. உங்கள் போனில் இருக்கும் கேமரா போதும், அதில் எடுத்த புகைப் படங்களை கலை நயத்தோடும் கிரியேட்டிவாக வரிசைபடுத்த தெரிய வேண்டும். பழக பழக வந்துவிடும். இசை தேவையென்றால் அதுவும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்படியாக கதை சொல்லும் முறைக்கு டிஜிடல் ஸ்டோரிஸ் என சொல்லுவார்கள்.

                அண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள் இதற்கான ஆப்ஸ்கள் உண்டு, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், இல்லையென்றால் விண்டோஸ் மூவி மேக்கரிலும் செய்யலாம். உங்கள் ஆப்ஸ் ஸ்டோரில் Digital story telling என தேடினால் கிடைக்கும். போட்டோக்கள் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்.

               சொல்ல தேவையான கதை, அவற்றை விஸ்வலாக சொல்லக் கூடிய புகைப்படங்கள் அதற்க்கு ஏற்ற இசை, தேவையென்றால் பின்னனியில் வரும் உரையாடல், மற்றும் அடங்காத ஆர்வம் இருந்தால் நாமும் நம் கதையை உலகத்துக்கு சொல்ல முடியும்.

      நீங்கள் சொல்ல வரும் கதையை கச்சிதமாக பார்வையாளாரோடு தொடர்பு கொள்ள முடிந்தால் அது வெற்றிதான்.

           மிக எளிதாகவும் குறுகிய நேரத்திலும் இந்த முறையால் பவர்ஃபுல்லான செய்திகளை சொல்ல முடியும். இப்படியான முறையால் சிறு குழந்தைகளுக்கு பாடங்களை கூட சொல்லிக் கொடுக்கலாம்.
முயற்சி செய்யலாமே....

       எப்படியான கதைகளை சொல்லலாம்? எந்த கதையையும் சொல்லலாம், உங்களின் கதை, உங்கள் தாயாரின் கதை, உங்கள் ஊரின் கதை, சாதி அமைப்பு, கலாசாரம், திருவிழாகள், திருமனம், காதல், வன்மம், பிடித்த தலைவர், உங்க ஊர் பஜார், தெருவில் இருக்கும் பிச்சைக்காரன்,  ஒரு திருகுறளை வைத்து 3 நிமிட கதை சொல்லாமே, கூவி கூவி விற்க்கும் மீன் வியாபாரியின் கதை என எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம்.  இரண்டாயிரம் கலாசாரம் இலக்கிய பாரம்பர்யம்  கொண்ட தமிழ் மொழியில் இருக்கும் கதைகள் எத்தனையோ ஆயிரம் ஆயிரம்.

   இந்த உலகிற்க்கு நாம் சொல்ல வேண்டிய கதைகள் ஆயிரம் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால்  நம்மிடம் கதைகள் மட்டுமே இருக்கிறது இந்த உலகிற்க்கு சொல்ல. வேறு எங்கும் இல்லாத அளவு கதை கொட்டிக் கடக்கிறது, இலக்கிய செழுமையோடு.

      தொலை தொடர்பு வசதிகள் அதிகமான இந்த சூழலில் நமது கதைகளை படிக்க ஆவலாக நிறய பேர் இருக்கிறார்கள்.

  கதை சொல்லும் பொழுது முக்கியமாக  மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது இதுதான். நீங்கள் உலக உண்மையை உங்கள் கதைக்குள் சொல்ல முறப்படவில்லை, உங்களின் பார்வைகளை முன் வைக்கிறிர்கள் அவ்வளவுதான், பார்வையாளர்களுக்கு புத்திமதி சொல்லவில்லை, உங்கள் சிந்தனைகளை திறந்து காட்டுகிறிர்கள் அவ்வளவுதான்,  குறைந்த நேரங்களில் நிறைவான விஷயங்களை சொல்ல முயற்சி செய்யுங்கள்.
    
 உங்கள் கதைகளை நண்பர்களோடு பகிருங்கள். பகிர்வது இன்பத்தின் உச்சமல்லவா.

       முழு நீள திரைபடத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது இந்த டிஜிடல் ஸ்டோரிஸ்.
உதாரண படங்கள் அடங்கிய லிங்க் இது http://www.creativenarrations.net/stories 
 
 இலவச இசை டவுன்லோடு செய்யும் இனையம்: http://incompetech.com/music/

 உங்கள் ப்ராஜெக்டுகளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் தயங்காமல் nirmalcb@gmail.com / Nirmal Mrinzo ஃபேஸ்புக்கிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

 நான் செய்த எனது முதல் டிஜிடல் கதை http://www.youtube.com/watch?v=vcZaP7GueOw&list=UUGmnaxE_pl4XWeiEoyeuOEw

  Youtubeல் - Digital Stories என டைப் அடித்து பாருங்கள், தைரியமாக பிடித்த படத்தை காப்பி அடித்து உங்கள் முதல் முயற்சியை ஆரம்பிங்கள். பழக பழக மெருகேறும்.........

2 comments:

  1. வணக்கம்
    நல்ல செயல் முறை விளக்கம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வல்லின ற் எழுத்துடன் வல்லின க் ஒற்று சேராது நிர்மல்... உங்கள் எழுத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன். கட்டுரை அருமை.

    ReplyDelete