Sunday, February 19, 2012

காவல் கோட்டம் அப்டேட் 1:

காவல் கோட்டம் அப்டேட் 1:
                                250 பக்கம் வாசித்து முடிச்சாச்சி. இது நாவலா இல்லை சரித்திர கட்டுரைகளின் தொகுப்பா, சாருவின் நாவல் ஸ்டைலில் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வந்து வந்து செல்கிறார்கள், மீண்டும் மீண்டும் ராஜியத்திற்க்கு இடையில் போர்கள், புதிய ராஜியம், வெள்ளம், பஞ்சம் என சென்று கொண்டுருக்கிறது.
வந்தியதேவனோ, அருள்மொழிவர்மனோ இல்லை,
 பயங்கரமான் உழைப்பு, விபரம் சேகரிப்பதில் செலவிட்டிருக்கனும் ஆசிரியர். பாரட்டுக்கள்.
                        அதிகமான சூழல் வருனனை இல்லை, கதாபாத்திர வருனனை இல்லை, அது பிடித்திருக்கிறது. பெண்னை வருனிப்பதில் கூட ரொம்ப சிக்கனம், அதிகபட்சம் வானத்தில் இருந்து வந்திருப்பாளோ என ஒரு Well Educated / Decent looking / Politically correct வருனனை. - ஒரு அறைக்குள் நடக்கும் ஒரு காட்சியும் இதுவரை இல்லை.

                          சணங்களின் கதையாய் இருக்கும் என நினைதேன், இப்போதிக்கி இது ராஜியங்களின் கதையாகதான் எனக்கு தெரிகிறது.

 அடிகோடு இட்ட இடங்கள்:
            1.   நல்லவேளை முகமதியர்கள், கோவிலை பூட்டியதோடு விட்டார்கள், சமன கோவிலில் சைவர்கள் செய்வதுபோல இல்லை.
              2. கெட்டிக்காரர்கள்தான் இந்த வைதீகர்கள், நிற்க்க இடம் இல்லை விஜயநகரத்தை தவிர..... நம்பிக்கைகளை கதைகளாய் புனைந்து பரப்புவார்கள்.
              3. கங்காவின் உள்மன சிந்தனை வர்னனைகள்.
              4. கனகநுகா மற்றும் அந்த இளைஞசர்களின் நர பலிகள்.
             
 அப்புறம் கதையைஆசிரியர் நமக்குசொல்கிறார், அதன் இடையில் கதாபாத்திரங்களின் உரையாடல் என வருவதால் வாசிக்க சலிப்பு இல்லாது உள்ளதோ?


   சரித்திரத்தை சந்தேகமாக பார்பதுதான் சுவாரஸ்யம், அதுவும் ஒரு புதினம் வழியாக பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக் இருக்கும். புதினதின் முலம் அது சாத்தியம், எனோதெரியவில்லை, காவல் கோட்டத்தை படிக்கும் போது, இதுதான், இப்படிதான் நடந்தது என ஆனித்தரமாக சொல்வது போல, ச்ந்தேகங்களை நிவர்த்தி பன்னும் விதமாய் இருக்கிறது, இதுவரை வாசித்ததில் எனக்கு அப்படி படுகிறது. அது ஆசிரியரின் மொழி நடயா, இல்லை அதுதான் அவரின் நோக்கமா தெரியவில்லை, போக போக புரியும் போல!!!!


 சிரிக்க இதுவரை ஒரு இடமும் இல்லை, சரித்திரத்தில் என்னடா நகைச்சுவை என்பது போல இருக்கு, இருந்தாலும் தொடர்ந்து வாசிக்காமால் விடுவதில்லை.

                                    ஜெய் ஜக்கம்மா.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

1 comment:

  1. காவல் கோட்டம் நாவல் வெளிவந்தவுடன் ஆதரவும் விமர்சனமும் ஒருங்கே வந்தது. வரலாற்று நாவலை படிப்பது சிரமமான காரியம் தான். இந்த நூல் சாகிய்த் அகடமி விருது பெற்றதால் என்னவோ மீண்டும் நாவல்பற்றி விவாதங்கள் எழுகின்றன. அதிக பக்கங்கள் கொண்ட நாவலை வாசிக்க ஆரம்பிக்கவே பயமாக இருக்கு.

    பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மாதிரி இது நிச்சயமா இருக்காது, மானுடம் வெல்லும், வானம் வசப்படும் மாதிரி இருந்தா அது மக்களோட வர்லாறு மாதிரி இருக்கும். முதல்ல இருக்கிற புத்தகத்தை வாசிக்கலாம்.
    இன்னும் கொஞ்சம் படிச்சிட்டு எழுதுங்க.

    ReplyDelete