Friday, March 30, 2012

காவல் கோட்டம் அப்டேட் 5 - இது வரை வாசித்ததில்.....

காவல் கோட்டம் அப்டேட் 5 - இது வரை வாசித்ததில்......

                  660 பக்கங்கள் வாசித்துவிட்டு வாசித்த பக்கங்களை நினைவுப்படுத்தி பார்க்கிறேன், பாண்டிய மண்ணர்களின் முடிவு காலத்தில் ஆரம்பித்து, நாயக்கர்களின் வரவு, முகமதியரின் ஆட்சி, கடைசியில் ஆங்கில கம்பெனி ஆட்சி வரை எத்த்னையோ மாற்றங்களை சொல்கிறது இந்த நாவல். இந்த மாற்றங்கள் மதுரையையும் அதோனோடு தொடர்புடைய பூர்வ குடி மக்களான் கள்ளர்கள்ளும் எப்படி தங்களது வாழ்வை தீர்மானிக்கிறார்கள் என்பதை சில இடங்களில் நுட்ப்பாகவும், சில இடங்களில் மேம்போக்காகவும் சொல்லி இருக்கிறது காவல் கோட்டம்.

                கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, சரித்திர கதையில் எந்த ஒரு கதைத்தலைவனும் இல்லாது இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. மாயாண்டி என்கிற ஒரு பாத்திரம் தவிற வேறு எந்த கதை பாத்திரமும் நமது மனதில் இல்லை, ஒரு கோர்வையான அல்லது கற்ப்பனையான கதையும் இல்லை, அதாவது ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவன் இப்படி இருந்தான் என பழமையான் கதை சொல்முறை இல்லை, கதை என்றால் நாயகர்கள், நாயகிகள், வில்லன், காமடியன், ததுவவாதி என இருக்கனும் என்கிற ஒரு முறை சார்ந்த கதை சொல்லில் இருந்து மாறுப்பட்டு இருப்பது, எழுத்தை சுவாரசியப்படுத்துகிறது, இப்படி எழுதுவதால் கற்ப்பனை திறன் இல்லாத எழுத்து என விமர்சணம் கண்டிப்பாக எழலாம், இரு நூற்றாண்டு வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் போலத்தான் இருக்கிறது.

               வேட்டைக்கு செல்லுதல், களவு, காவல் காத்தல், தாதணுர் ஆண் மக்களுக்கான பயிற்ச்சி முறை, மதுரை கோட்டை இடிப்பு, தாது பஞ்சம்,  என பல விஸய்ங்கள் மிக்ச்சிறந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது. களவு சரியா? தவறா?, கண்டிப்பா தவறுதான் இதில் எந்த மாற்றமும் இல்லைதான் இருந்தும் களவு விவரிப்பு மிக சுவரசியமாக சொல்லப்பட்டதை நான் ரசித்தேன், இந்த கதையின் ஆசிரியரும்  அப்படிதான் ரசித்து எழுதிருப்பார் என நினைக்கிறேன். ஒரு இடந்தில் கூட இந்த ஆசிரியர் களவின் செயலை கண்டித்தோ அதை எதிர்த்தோ அறற்ற்ற்ற்ற்ற்ச்சீற்ற்ற்ற்ற்றம் அடையவில்லை, அதே போல அதை பாராட்டியும் எழுதவில்லை, ஆனால் அந்த களவின் நுட்பத்தை தனது எழுத்தில் சொல்லிருக்கிறார், அது அவரது எழுத்திற்க்கு கிடைத்த வெற்றிதான். அறச்சிற்றம் அரசியல்வாதிக்குதான் படைப்பாளிக்கு தேவை இல்லை. இந்த முறையில் எனக்கு பிடித்த எழுத்தாகுகிறது காவல் கோட்டம்.

               கதையில் அளவுக்கு அதிகமான அவலங்களும் அளவுக்கு அதிகமான கொண்டாடங்களும் இல்லை, அவலங்களை மிக்ச்சாதரனமாக் தாண்டி செல்கிறது, கொள்ளை ஒரு அவலம் அதை செய்யும் கும்பல் பின்னால் செல்கிறது கதை, அதை பறிகொடுத்தவர்க்ளை பற்றி எதுவும் சொல்லாது, இதைதான் அறச்சீற்றம் என சொல்கிறேன், இப்படி அற்ச்சீற்றம் இல்லாது செல்வது சுவாரஸ்சியமாக் இருக்கிறது. இப்படி பட்ட அறச்சீற்றம் ஒரு ஆய்வு கட்டுரையில் கண்டிப்பாக தேவை, அங்கு இரு பக்க ஆராச்சி தேவை, இது ஒரு புதினம் இங்கு இது சாத்தியம் அதை அழகாகவே செய்துருக்கிறார். A Detail study of Strategy and Technique of Kallars in 18th century   என ஆய்வு கட்டுரை கண்டிப்பா சாத்தியமில்லை, இப்படிப்பட்ட மனித செயல்களை ஆராய்வது புதினத்தில் மட்டும்தான் சாத்தியம், இதை புதினத்தில் சொல்வதால் எழுத்தில் எழுதுவதால் அது புகழப்படுவதுமில்லை இகழப்படுவதுமில்லை, மனித மனதின் பல பரினாமங்களையும், விசித்திர செயல்களையும்,  வாழ்வியல் போராட்டங்களையும், அற நெறிக்கான தேவையும், மனித வாழ்வுவின் பொறுப்பும், முகம் தெரியாத மற்ற மனித வாழ்வில் நமக்கு உள்ள  தொடர்பும் நமக்குள் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.



 
            மதுரையை பற்றி கதை சொல்ல ஆரம்பித்து அது கள்ளர்களின் கதையாய் வெளிவந்துருக்கிறது. அதுவும் உணர்ச்சிகளை கூட்டவோ குறைக்கவோ இல்லாது  இருக்கிறது. It is kind of Plastic writing ன்னு கூட சொல்லாம். சப்தம் குறைவாய் மிக முதிர்ச்சியாய் சொல்லப்பட்ட கதை,  ஒரு கூட்டத்தின் செயலை அளவுக்கு அதிகமாக் விமர்சிப்பதும் இல்லை அதை புகழவும் இல்லை, அதை அப்படியே ஒரு பத்திரிகை ரிப்போர்ட் மாதிரி பதிவு செய்திருக்கிறார். இது சரியா, இப்படி எழுதலாமா, இது கற்ப்பனை குறைவான எழுத்துக்களா, இதில் ஃபாண்டசி இல்லையே, மேஜிக் இல்லையே, காதல் இல்லையே, காமம் இல்லையே, ஒரு தனி மனித மன குமறல் இல்லையே, வாசகனை கண் கலங்கவும் மன கலங்கவும் வைக்க வில்லையே வெறும் வறண்ட எழுத்துக்களாய் இருக்கிறதே என பல முறை எனக்குள் தோனியது.

 

      இந்த நாவலின் மிக முக்கியமான ஒரு வரி என்ன என என்னை கேட்டால் நான் இதைதான் சொல்லுவேன், இந்த வரிகள் எனக்குள் என்றும் இருக்கும்.

           “ களவும் காவலும் தாதனூரின் இரட்டை பிள்ளைகள், கஞ்சியை உறுதிப்படுத்த காவலும், காவலை உறுதிப்படுத்த களவும் என்று விதி செய்துகொண்டார்கள்” 

  இந்த வரிகளை வெளிக்கொண்டு வரத்தான் இந்த நாவல்லின் முயற்ச்சியும் அதன் வெற்றியும் இருக்கு. இந்த வரியின் பிரமாண்டம் வடிவம்தான் காவல் கோட்டம்.

  முந்தைய தொடர்புடைய பதிவுகள்:
 

No comments:

Post a Comment