Monday, February 17, 2014

புன்னைகாயல் விசிட்

புன்னைகாயல் விசிட்

          

       பொதிகை மலையில் துவங்கிய அதன் பயணத்தை வங்க கடலோடு தொடரும் அந்த அருமையான இடத்தை கான எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆறும் கடலும் சந்திக்கும் அந்த அற்புத காட்சியை பரவசத்தோடு அனுபவித்தோம்.  தாமிரபரணி நதி கடலில் கடக்கும் இடம் மிகவும் ஆழம் குறைவானதாக இருக்கிறது.

         பிரச்சனை என்வென்றால் இந்த வாய் பகுதியை கடந்துதான் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியும்.

கப்பல் நடுக்கடலில் பஞ்சர் ஆகிட்டா யாரு கிழே இறங்கி கப்பலை தள்ளுவார்கள் என்ற ஜோக்தான் நினைவுக்கு வந்தது, இன்று நான் கண்ட காட்சி.



பெரிய படகுகள் இந்த கடலும் நதியும் சங்கமிக்கும் வாய் பகுதியை கடக்க மிகுந்த சிரமபப் படுகிறார்கள். ஆழம் குறைந்த இந்த சிறிய பகுதியை கடப்பதற்க்கு இரண்டு முதல் மூன்று மனி நேரம் ஆகுமாம்.
மீனவர்கள் உடல் வலுவாலும் அவர்களது அனுபவத்தாலும் இந்த சிறிய தூரத்தை கடக்க படும் பாடு அவர்கள் மீது அளவற்ற அன்பை கொண்டுவருகிறது. நான் சென்று கொண்டிருந்த சிறிய படகிலிருந்து இறங்கி நாமும் அவர்கள் கூட தள்ளலாமென நினைத்துக் கேட்டேன். எங்களை படகில் ஏற்றிச் சென்ற நண்பர் தேவையில்லை மெதுவாக பூப்போல நுனுக்கமான விஷயம இது எடுத்தோம் கவுத்தோம் என செய்ய முடியாது என்றார். பொறுமையும் வலிமையும் உடல் உழைப்பும் கூட்டு முயற்ச்சியும் அவசியமென சொன்னார்.

இப்படியான கடின உழைப்பின் பயன்தான் நாக்கு ருசியாக நாம் சாப்பிடும் மீன் என்ற உண்மை உறையச் செய்கிறது. மீன் கடையில் நாம செய்யும் பேரம் நினைவுக்கு வருகிறது.




இந்த கடின முறைக்கு முடிவு கொண்டுவர காலம்காலாமாக கேட்டுவரும் தூண்டியல் பாலம் இப்போழுது தயாராகிக் கொண்டுவருவது மனதிற்க்கு தெம்பு தருவதாக இருக்கிறது. அரசாங்கம் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செய்லபடுத்தும் இந்த புதிய துறைமுகத் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது முடியும் தருனத்தை புன்னைகாயல் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி பேசும் பொழுது கண்களில் கொப்பளிக்கும் ஆனந்தம் கடல் அளவை காட்டிலும் அதிகமாக தோன்றுகிறது.

No comments:

Post a Comment