Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Sunday, February 16, 2014

தாமிரபரணி தொடரும் நம்பிக்கை பயணம் - புன்னைகாயல் விசிட் அனுபவம்


தாமிரபரணி   நம்பிக்கை பயணம்:  புன்னைகாயல் விசிட்   அனுபவம் 





 
                            பொதிகை மலையில் துவங்கிய அதன் பயணத்தை வங்க கடலோடு தொடரும் அந்த அருமையான இடத்தை கான எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆறும் கடலும் சந்திக்கும் அந்த அற்புத காட்சியை பரவசத்தோடு அனுபவித்தோம். சிறு வயது முதல் தாமிரபரணி ஆற்றோடு எனக்கு மிக நெருங்கி தொடர்பு உண்டு. ஆற்றுப் படுகையில் இருக்கும் எங்க ஊரின் வாழ்விற்க்கும் வளத்திற்க்கு ஒரே காரணம் தாமிரபரணி நதியென்றால் அது மிகையாகாது. குளிப்பது, குடிப்பது, விளையாடுவது, கடைசியில் அடங்கி போவது என எல்லாம் அந்த ஆற்றீன் ஓரத்திலே. ஆயிரம் ஆயிரம் கதைகள் அந்த தண்ணிருக்குள் அழ்ந்து கடக்கிறது, பல ஆயிரம் சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

         எங்க ஊர் கிரிக்கெட் அணியின் பெயர் தாமிரபரணி கிரிக்கட் அணி. இப்படியாக வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்கும்  எங்கள் தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடமான புன்னைகாயலுக்கு முதல் முறையாக சென்றேன். அற்புத அனுபவம்.  
        நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் சங்கு முக பிள்ளையார் கோவில் மற்றும் புனித தோமையார் ஆலையம்   என இரு புகழ் பெற்ற ஆலையங்கள் இருக்கின்றன.  
 
 அனைத்து இந்து கோவிலின் குட முழக்கு திருவிழாவிற்க்கான தீர்த்த நீர் இந்த பிள்ளையார் கோவிலிருந்துதான் எடுத்து செல்கிறார்கள்.  பல ஊர்களிலிருந்து இந்த இடத்திற்க்கு வந்து புனித நீரை எடுத்துச் சென்று தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். தென் மாவட்டம் மட்டுமின்றீ தமிழகத்தின் பல இடங்களுக்கு இங்கிருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. எல்லா திருவிழா கொண்டாட்டங்களும் இந்த புனித நீர் எடுத்து வரும் விழாவில்தான் துவங்கும். பக்தி பரவசத்தோடு கால் நடையாக தீர்த்த யாத்திரை செல்வது என்பது இங்கு உள்ள கோவில்களின் வழக்கம்.
 இப்படியாக இரு கோவில்கள் இந்த நதியின் சங்கம் இடத்தில் இருப்பதை குறீப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது.
 தாமிரபரணி கடலில் கலக்கும் முன் பல சிறிய  நதிகளாகிறது இது பல சிறு தீவுகளை உருவாக்குகிறது. இப்படியான ஒரு தீவில் அமைந்திருக்கிறது இந்த இரு அலையங்களும்.
        சிறிய ஆலையமென்றாலும். இந்த கடற்கரை கிராமங்கத்தின் காவல் தெய்மாக கட்சியளிக்கிறார் தோமையார். இங்கு இருக்கும் தோமையார் கையில் வேல் கம்பு அயுதம் கொண்டு இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முருகனின் வேல் எப்படி தோமையாரிடம்?  எந்த புணிதரும் கையில் ஆயுதம் எந்திய நிலையில் நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இங்குள்ள தோமயாரின் உருவம் மிக வித்தியாசமாக இருக்கிறது.
 

       கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் முன் வணங்கும் ஆலையமாக, புதிய காரியங்களுக்கு தைரியம் கொடுக்கும் ஆலையமாக, திருமனம் செய்த அடுத்த நாள் மன மக்கள் ஆசிர்வாத பெறச் செல்லும் ஆலையமாக, வியாபாரம் துவங்கும் முன்பு தரிசனம் செய்யும் ஆலையமாக விளங்குகிறது இந்த புனித தோமையார் அலையம்.
      இந்து கோவில் வருட திருவிழாக்கள் அம்மன் கோவில் கொடை விழாக்கள் கும்பாபிஷேக விழாக்கள் போன்ற கொண்டாட்டங்களுக்கு புனித நீரை எடுத்துச் செல்லும் இடமாக இருக்கும் சங்குமுக பிள்ளையார் கோவிலின் தீர்த்தம் எடுக்க தீர்த்த யாத்திரையாக வந்து எடுத்துச் செல்கிறார்கள். சங்கு முக பிள்ளையார் கோவில்   புதிய துவக்கத்தின்  நம்பிக்கை சின்னமாக இருக்கிறது.
         கத்தோலிக்க விசுவாசிகளின் எல்லா புதிய துவக்கத்திற்க்கும் அவர்கள் முனைப்பிற்க்கும் உறு துனையாகவும் பாதுகாப்பாகவும் தோமையார் இருப்பார் என்பது புன்னைகாயலை சுற்றி இருக்கும் கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.  
 

நதியின் முடிகிற இடமென்றாலும் அது ஒரு முடிவின் கதையாக பார்க்காது நம்பிக்கையின் அடையாளப்படுத்தும் இந்த ஆலையங்கள் ஆச்சரியபடுத்துகிறது.  இந்த ஆலையங்கள் மானுட நம்பிக்கைகளை புதிய கோனத்தில் பார்க்க தூண்டுகிறது. பார்க்க கற்று தருகிறது. வாழ்வியலை கொண்டாட்டமாக்குகிறது. இவைகளை நம்பிக்கையின் சின்னங்களாக பார்க்க சொல்கிறது.
   சங்கமத்தை - தொடரும் பயணமாகவே பார்க்க முடிகிறது, ஒரு வித சூழற்சியாக உணர முடிகிறது.  நான் லீனியராக  வாசிக்க சொல்கிறது. எது துவக்கம் எது முடிவு என்கிறதை ஒன்றுக்குள் ஒன்று இனைக்கிறது. மரணத்துக்குள் பிறப்பும் மீட்பும் என்கிறதையும் நினைவுபடுத்துகிறது.


Tuesday, June 12, 2012

கூந்தங்குளம் பயணம் பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 2

கூந்தங்குளம் பயணம் பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 2



                         ஆசைப் பட்ட எல்லாத்தையும்  என்று துவங்கும் திரைப்பட பாடலை எழுதியவர்  பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் அண்ணதான். புல்லரிக்கிதில்ல.Bottom of Form இந்த ஊரில் உள்ள எல்லா மரங்களிலும் விட்டு கூரைகளிலும் பறைவகளின் கூடுகளாக இருக்கும், பால்பாண்டியனுக்கு மட்டும்தான் எந்த பறவை எங்கு கூடு வச்சிருக்க்ன்னு தெரியும், பறவைகளில் எது ஆண் எது பெண், அவர்கள் மேட்டிங் முறை என்ன?, எதத்னை முட்டை போடும், குஞ்சி பொறிக்கும்போது கண் முழிச்சி இருக்குமா இருக்காதா, பறக்க எத்தனை நாட்க்கள் ஆகும், எந்த வகை மீன்களை சாப்பிடும் போன்ற எல்லா விசியமும் அத்துபிடி. அவரோடு தங்கி பறவைகளை பற்றி அறிய ஆசை. எந்த வித கர்வமும் இல்லாது டுபாக்குரான எங்களிடம் உரையாடியது  வாழ்வில் மறக்க முடியாதது. எத்தனை தொலைக்காட்சி இருந்து என்ன பயன். இவர போன்ற ஆட்களிடம் உள்ள விபரங்களை வைத்து சுவாரசியமாக கதை பண்ண முடியுமா? மக்ஸிமம் மொக்க பேட்டி வென்னா போடுவாங்க. சுவாரசியமாக்கா மெனக்கடனுமே

            . ஒரு கவிஞ்சர், பறவைகளின் காவலன், பசுமையக்க மரங்களை நடும் சுற்று சூழல் ஆரவலர், வாழ்வை பறவைகளுக்காக வாழும் ஒரு நல்ல மனிதரை தற்ச்செயலாக சந்த்திதது விபத்தா, இல்லை வரமா. வரம்தான். டிசமபரில் அவரோடு ஒரு ரெண்டு நாள் இருக்கனும்.                             பறவைகளை போட்டோ எடுக்க போன நான் அந்த ஊரை பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்.     
                                                                                                                                                                                                                                                                        நமக்குதான் இன்னசன்ஸ் கொஞ்சம் கூட கிடையாதே, இந்த கோடை காலத்திலும் அந்த ஊர் குளத்தில் தண்ணிர் இருக்கு மற்ற ஊரெல்லாம் தண்ணி இல்லாம இருக்கும்போது இங்க் மட்டும் நெல்லு பயிர போட்டு வெள்ளாமை பண்ணிகிட்டுருக்காங்க. பறவைக்காக அரசாங்கம் இந்த குளத்துக்கு மட்டும் கொஞ்சம் தண்ணி உட்றாங்களாம். 





Monday, June 11, 2012

கூந்தங்குளம் பயணம் – பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 1


கூந்தங்குளம் பயணம் – பறவைகளின் நன்பன் பால் பாண்டியன் சந்திப்பு 1
                         
          முதல் தர பறைவைகளை இரண்டாம் தர புகைப்பட கருவியோடு ஒரு முன்றாம் தர புகைப்படங்களை  நாங்கள் எடுத்துகொண்டுருக்கும் போது, யாரு நீங்க எந்த ஊரு இதுவரை நா பார்ததில்லையேன்னு ஒரு ஆள் எங்களிடம் அறிமுக படுத்திக்கொண்டார்.  நாங்க திருவெல்வேலின்னு சொன்னோம், அப்படியா நீங்க காலேஜா, ரிசேர்ச்சான்னு பெரிய பெரிய வார்த்தய போட்டாரு, நாங்க வந்து ஒரு டுபாக்குர்ன்னு சொல்லாம Ameature WIld Photographersனு சொல்லிவச்ச்சேன், அதுக்கு அவரு ஒரு அஞ்சி பேர் பெயர சொல்லி தெரியுமான்னு கேட்டாரு ஹி ஹினு பேச்சை மாத்த ட்ரை பன்னி தோத்து, அப்புறம் அவரே நான்தான் பால் பாண்டியன் உங்களுக்கு ப்றைவைகளை பற்றீ என்ன சந்தேகம் இருக்கான்னு கேட்டாரு, எதையாவத பற்றீ தெரிச்சாதானே சந்தேகம் வரும், பறவைகளின் பாஸை தெரிஞ்ச பாண்டியன் எங்க மவுன பாசை தெரிந்து போல ஒரு ஒரு பறைவகளை பற்றியும், அவரும் அவரின் காலம் சென்ற மனைவிய பற்றியும் அவர்கள் பறவைகளுக்காக செயத செயல்களையும் பற்றி சொல்லிகொண்டுருந்தார். சுமார் 100 பறைவகளின் பெயரை என்களுக்கு சொல்லிகாட்டினார், நமக்கு தெரிஞ்ச ரெண்டே பேரு ஒன்னு கொக்கு இன்னொன்னு நாரை, நாங்களும் தலையாட்டி வச்சோம். 


   திருநெல்வேலி பக்கத்தில் கூந்தங்குளம்னு ஒரு ஊர் இருக்கு இது ஒரு பறைவைகள் சரனாலையம்உலகெங்கும் இருந்து பறவைகள் இங்கு வந்து கூடு கெட்டிமுட்டையிட்டு குஞ்சி பொறித்து அவகளோடு மீண்டும் அவர்கள் வந்த இடத்தீ நோக்கி செல்லும்தை மாதம் அம்மாவாசைக்கு வர ஆரம்பிக்கும் அவை ஆடி அம்மாவாசை யோடு சென்று விடுகின்றனகூந்தங்குளம் ஒரு மிகச் சிறிய ஊர், பறவைகள் பல காலமாக இங்கு வருவதாகவும் இந்த பறவைகள் ஊரில் தங்கும் மாதங்களில் இந்த ஊரில் மேளம், வேட்டு, ஓலிபெருக்கிகள் இந்த ஊர் மக்கள் பயன்படுத்துவதுதில்லையாம்.

               பால்பாண்டி அண்ண்ணுக்கு இந்த ஊர்தான், அவர் இங்கு வரும்  பறவைகளை பற்றியும் உலகம்மெங்கும் இருக்கும் பறவைகளை பற்றிய விபரங்களை தனது விரல் நூனியில் வைத்துள்ளார். இவரை பற்றி யாருக்காவது தெரியுமா? அதிர்ஸ்டவசமாக இந்த முறை கூந்தங்குளம் செல்லும் போது அவரை பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது. அருமையான மனிதர். .

 தொடரும்..........

Wednesday, May 16, 2012

ஊரு ருசி


 ஊரு ருசி:
                               எங்க வீட்டுக்கு அடுதாப்ல ஒரு நாராயண சாமி கோவில் இருக்கு. உலகத்திலே அசைவம் சாப்பிடும் நாராயண சாமி இங்கேதான் இருக்குன்னு நினைக்கேன். ராத்திரி பத்து மணிக்குதான் சமையல் ஆரம்பமாகும், காலையில மூனு மனிக்கு பந்தி, தேங்கா போடாமல் வெறும் சின்ன வெங்காயம், ஆட்டுக்கறி, சீற்கம், மல்லி வருத்த மசாலா போட்டு ஒரு புராதன குழம்பும், வாழக்காய், கத்தரிக்காய், குடல் போட்ட ஒரு அவியலும்தான் பிரசாதம். இது போக... சாமிக்கு தனியா ஒரு ஸ்பெஸல் குழம்பும் உண்டு லக் இருந்தால் நமக்கு கிடைக்கும்.

காலையில மூனு மனியோ நாலு மனியோ கதவ தட்டி நமக்கு சாப்பாடு வந்துரும், பாசக்கார மக்கள். இந்த குழம்பின் சுவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு unique Taste.

இங்கே படைக்கும் பலி ஆடோ, கோழியோ, காய்கறியோ எல்லா பாகத்தயும் பயண்படுத்த வேண்டும், ஒரு வேளை இதுதான் சுவைக்கு காரணமோ.இது போக... சாமிக்கு தனியா ஒரு ஸ்பெஸல் குழம்பும் உண்டு லக் இருந்தால் நமக்கு கிடைக்கும்.

காலையில மூனு மனியோ நாலு மனியோ கதவ தட்டி நமக்கு சாப்பாடு வந்துரும், பாசக்கார மக்கள். இந்த குழம்பின் சுவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு unique Taste.

இங்கே படைக்கும் பலி ஆடோ, கோழியோ, காய்கறியோ எல்லா பாகத்தயும் பயண்படுத்த வேண்டும், ஒரு வேளை இதுதான் சுவைக்கு காரணமோ.
                          பதநிரில் இரண்டு வகை உண்டு, காலை பதனி, மாலை பதனி. காலை பதனி தெளிவா இனிப்பா இருக்கும், மாலை பதனி கலங்கலா சூண்ணாம்பு கலந்து சுவையோடு இருக்கும் ( கள்ளிலும் இப்படி இருக்கா). பதனிக்குள்  நீலம் மாம்பழத்தை சிறுசு சிறுசா வெட்டு போட்டு குடிச்சா தேவ பிரசாதம் ( சரி அதுக்கு என்னாங்கிற). சிலருக்கு பதனிக்குள் நொங்கு போட்டு குடிக்க பிடிக்கும் எனக்கு அவ்வளவு பிடிக்காது,  நொங்கை தனியா சாப்பிட்டாத்தான் சுவை அதிலும் அந்த துவர்ப்பா இருக்கிற வெள்ள கலர் மேல் தோடோடு சாபிட்டால்தான் இன்பம். (துவர்ப்பிற்க்கும் தாதுபுஸ்டிக்கும் சம்பந்தம் இருக்காம் எக்ஸைலில் உங்க தல சொல்லிருக்கிறார்).( அப்புறம் நொங்கில் வோட்கா இன்னும் ட்ரை பண்ணலயா?). மேக்காத்து அடிக்க அடிக்க பதனி இனிப்பு கூடுமாம் ( ரொம்ப deepa எழுதுகிறாராம்!!!), பதனியை குருத்து ஒலையில் செய்த பட்டையில் ஊத்தி கூடிச்சா ஒரு வகையான திருப்தி (திருடி குடிச்சா?), பதனி கலசத்துக்குள் பல வித எறும்புகளும், தேனிக்களும் கிடக்கும் ரொமப சுத்தம் பார்க்றவங்க குடிக்க முடியாது ( மேட்டுகுடிக்கு (பூர்ஸ்வாக்களுக்கு)  ஆப்பு வைக்கிறாராம்), பண மரத்தில் இருந்து கிடைக்கும் சல்லடை போன்று இருக்கும் கொழகாஞ்சியை வைத்துதான் இந்த தேனிக்களையும், எறும்புகளையும் ஃப்ல்டர் பண்ணவாங்க ( the writer have in depth knowladgன்னு எழுதுவாங்க). மே மாசம் லிவுக்கு எங்க பாட்டி ஊரில் சுவையான பதனி கிடைக்கும், அதிகாலையில் எழுப்பி பதனி குடிக்க கொடுத்துவிட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ண செய்யும் எங்க ரெத்தின மணி ஆச்சியின் நியாபகம் வருது (உங்க தொல்லகளை சிறுது நேரம் தள்ளி போட்டிருக்கு பாட்டி), பேரன் பதனியும் குடிக்கனும் ஆனால் லிவில் நல்லா தூங்கனும், Somehow she is able to do both, that, it is Magic. ( இடையில் இப்படிதான் ஆங்கிலத்தில் எழுதனும் அப்பதான் ஒரு Intellectual Look கிடைக்கும்).
          பதனி தந்த மரமும் இல்லை ஆச்சியும் இல்லை, சுவையும் அன்பும் மட்டும் அடி நாக்கில் நியாமகமாய் ( ஒக்கமக்கா ஃப்லிங்லா வச்சி எழுதுறாண்டா).


                         சவ்வு கறி தெரியுமா : ஆடு / மாடு தோல் வியாபாரம் எங்களது, ஆட்டின் உடலிலிருந்த்து தோலை உரிக்கும்போது தோலுக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய சவ்வை நீக்க வேண்டும், அப்படி நீக்கப்பட்ட சவ்வு வைத்து எங்கள் குடும்பத்தில் கறியாகவோ, பொறித்தோ சாப்பிடுவோம். பலரின் தொப்பைக்கு இதுவும் ஒரு காரணம்

Sunday, May 6, 2012

எங்க ஊரு ருசி


எங்க ஊரு ருசி 1: எங்க வீட்டுக்கு அடுதாப்ல ஒரு நாராயண சாமி கோவில் இருக்கு. உலகத்திலே அசைவம் சாப்பிடும் நாராயண சாமி இங்கேதான் இருக்குன்னு நினைக்கேன். ராத்திரி பத்து மணிக்குதான் சமையல் ஆரம்பமாகும், காலையில மூனு மனிக்கு பந்தி, தேங்கா போடாமல் வெறும் சின்ன வெங்காயம், ஆட்டுக்கறி, சீற்கம், மல்லி வருத்த மசாலா போட்டு ஒரு புராதன குழம்பும், வாழக்காய், கத்தரிக்காய், குடல் போட்ட ஒரு அவியலும்தான் பிரசாதம். இது போக சாமிக்கு தனியா ஒரு ஸ்பெஸல் குழம்பும் உண்டு லக் இருந்தால் நமக்கு கிடைக்கும். காலையில மூனு மனியோ நாலு மனியோ கதவ தட்டி நமக்கு சாப்பாடு வந்துரும், பாசக்கார மக்கள். இந்த குழம்பின் சுவை வேறு எங்கும் கிடைக்காத ஒரு unique Taste.  இங்கே படைக்கும் பலி ஆடோ, கோழியோ, காய்கறியோ எல்லா பாகத்தயும் பயண்படுத்த வேண்டும், ஒரு வேளை இதுதான் சுவைக்கு காரணமோ.

எங்க ஊரு ருசி 2:
நம்ம ஊர் கல்யாண வீட்டில் குண்டு குண்டா இருக்கும் இட்டிலி, பார்க்க அப்படி இப்படி இருந்தாலும் அதை உடச்சி போட்டு மணக்கும் சாம்மாரை தேங்கா சிரட்டை அகப்பையால ஊத்தி பிசஞ்சி அடிக்கும் மக்களோடு மக்களாய் சாப்பிட்டு பல காலம் ஆச்சி சாமியோ!!!!!!! இதுக்கு சைடுல தேங்கா சட்னி, கேசரி is Must.

எங்க ஊரு ருசி 3:
கருப்பட்டி காப்பிக்குள் முறுக்கு ஒடிச்சிப்போட்டு உற வச்சி குடிச்சா சூப்பர்.

இட்டிலி கட்டியான சட்டினி ருசியான ரெத்த பொறியல் - அடடா என்ன சுவை

எங்க ஊரு ருசி 3:

சவ்வு கறி தெரியுமா : ஆடு / மாடு தோல் வியாபாரம் எங்களது, ஆட்டின் உடலிலிருந்த்து தோலை உரிக்கும்போது தோலுக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய சவ்வை நீக்க வேண்டும், அப்படி நீக்கப்பட்ட சவ்வு வைத்து எங்கள் குடும்பத்தில் கறியாகவோ, பொறித்தோ சாப்பிடுவோம். பலரின் தொப்பைக்கு இதுவும் ஒரு காரணம்.

Saturday, October 18, 2008

Adichanallur Civilization

Adichanallur - a small village located between thirunelvali and srivaikundam.

I
n 2004, a number of skeletons dating from around 3,800 years ago were found buried in earthenware urns.
I live very near to this place and I have no Idea that this small village which I have crossed so many times is a symbol of our Human Heritage.

I visited the excavation site and Thirunelveli Archeological Museum and was filled with proud, later I talked with many of my friends about this but no one knew about this.

Even history books does not talk about this??
I feel this should be treated as good as Harrapa and mohenjadaro.

This civilization on the bank of river tamirabarani have opened a new view on Tamil and Indian history.
Even Tamil writings were found on those Earthen wares.
I have added pictures of some of the artifacts displayed in Thirunelveli Museum.

I feel very proud to live so near to this heritage site which stands as an example of human occupancy on the river Tambirabarani bank during Iron Age and so should be every Tamils.

Looking forward your views and feeling on this.

more details can be found

http://en.wikipedia.org/wiki/Adichanallur

http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111901160300.htm