Monday, April 2, 2012

காவல் கோட்டம் 7 : கலங்க வைக்கும் கடைசி பக்கங்கள்

காவல் கோட்டம் 7 கலங்க வைக்கும் கடைசி பக்கங்கள்
     களவும் காவலும் கூத்தும் ரவுசுமாய் சென்ற கதை கடைசி பக்கங்களில் ரேகை எடுப்பு சட்ட நடவடிக்கையினால் மரணமும் ஒலமுமாய் போனது. போலிசின் அதிரடி நடவடிக்கையால் நிலைகுலைந்துபோன தாதனூர் அடுத்து அடுத்து சரிவை கான்கிறது, பிழைப்புக்கு வழி தெறியாது திகைத்து மிரண்டு போகுது. ஒரு வாசகனாய் இந்த நிகழ்வை கூட வாசித்து தாண்ட முடிந்த போதும், கழுவாயி பெத்த மகன் பொன்னாங்கனன் என்ற டேவில் சாம்ராஜின் டைரி குறிப்புகள் மிகுந்த மன வேதனையும் கன்களில் கலக்கமும் தருவதாய் இருந்தது. அவரது டைரி குறிப்புகளை வாசித்து எளிதில் தாண்டிவிட முடியவில்லை. பல காலத்தையும் நிகழ்வுகளையும் எளிதாய் தாண்டிச்சென்ற புதினம் இந்த ஒரு தனி மனிதனின் டைரி குறிப்பில் நம்மை நிறுத்துகிறது, கேள்வி கேட்கிறது.

    களவுகள் கதைகளாக போனது, ஆங்கனின் அந்த கழு மர வர்னனை  மனிதனின் உள் மனதில் இருக்கும் Angst, Fear, Worry, Anguish இன் மொத்த வெளிப்பாடாக் நான் வாசிக்கிறேன். இந்த நாவலை நான் வாசித்துக்கொண்டுக்கும் போது, எனக்குள் எழுந்த கேள்வி, இந்த தாதணுர் காரர்களில் யாரவது ஒருவனிடமாவது இந்த உணர்வுகள் வெளிவந்திருக்காதா என்பதுதான். வயலு வெலை என எல்லா சனமும் பொழச்சிகடக்கும் போது நாம மட்டும் என் இப்படி காவல் களவ்னு இருக்கனும் என்கிற உணர்வு ஒருதரிடமுமா எற்ப்பட்டிருக்காதா என்கிற கேள்வி, அதை இந்த தருனத்தில் விவரிக்கும் விதம் Herat Touching, சமன மலையில் நடந்த குழுவெற்றத்தை, ரேகை சட்ட நடவடிக்கை மூலம் நடந்த கொடுமையை ஒன்றாய் கற்ப்பனை செய்து எழுதியது ஒரு நாவல் அளவு விவரிக்க கூடி விசியத்தை ஒரே பக்கத்தில் சொல்லியது ஒரு magic. ,

” ஆங்கன் கண் விழித்து பார்த்தான், மலை உச்சியில் கழு மரம் நடப்பட்டிருந்தது, ஆனால் அது வெட்டப்பட்ட பெருவிரல் வடிவத்தில் இருந்தது”

·                     காவல் கோட்டம் 1
·                     காவல் கோட்டம் 2
·                     காவல் கோட்டம் 3
·                     காவல் கோட்டம் 4
·                     காவல் கோட்டம் 5

7 comments:

 1. Mr.Anonymous, thank you for your test, Hope some one will write something about this Novel.

  thank you very much

  ReplyDelete
 2. அன்பிற்குரிய நிர்மல்
  உங்களுடை காவல் கோட்டம் நேரடி ஒலிபரப்பை ரசித்தேன்.உங்களுடமிருந்து உடன்படாத கருத்துக்களை அனைத்தையும் கேட்ட ஆசை.அதை விவாதிக்கவும் விருப்பம்.
  வில்லவன் கோதை

  ReplyDelete
 3. அன்புள்ள பாண்டியஜி
  எனது பதிவை வாசித்து, அதற்க்கு கருத்துரை அளித்தர்க்கு மிகுந்த நன்றீ.


  இந்த நாவலில் எனக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்கள் என ஒன்ற்றும் இல்லை, இது ஒரு Status quo எழுத்து இதில் எந்த விதி மிறலும் இல்லை. மேலும் ஒரு நாவலை இப்படி எழுதிருக்கலாம் அப்படி எழுதிருக்கலாம் என்கிற தீர்ப்பிடும் அளவிற்க்கு நான் தகுதில்லாதவன். ஒரு இலக்கியத்தை வாசித்துவிட்டு சரி/தவ்று என தீர்ப்பிடாமல் அதன் வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வதுதான் சிறந்த முறையாக துவக்கநிலை வாசகனான எனக்கு படுகிறது.

  தாணுரை சார்ந்த எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள், ஒருவன் கூட இருக்கும் நிலையை பற்றி எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை, உண்மையில் அப்படிதான் எல்லோரும் இருந்துருப்பர்களா கண்டிப்பா இருக்க வாய்ப்பில்லை, மேலும் ஒரு சமுதயா பார்வையாகவே இந்த நாவல் பார்க்கிறது நம்மளையும் அப்படிதான் பார்க்கசொல்லுது.

  மேலும் நீங்கள் உங்களின் பதிவில் சொன்னதுதான், ஒரு சரித்திரத்தை சந்தேக பட வைக்கனும் ஒரு புதினம், காவல் கோட்டத்தில் இருக்கும் கறார் நடை ( நக்கல், கிண்டல் இல்லாத) வாசிக்கும் வாசகர்கள் இதை ஒரு புதினமாக என்னாமல, உண்மையான சரித்திரம் எனும் தோற்றத்தை அளித்துவிடுகிறது, இது ஒரு புதினம் என வாசகர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டுருக்கனும், அது இதில் மிஸ்ஸிங்.

  கடைசியில் களவுகள் எல்லாம் கதையாய் மாறுகிறது, களத்தில் வீழ்ந்தவர்கள் பட்ட சாமியாக்கபடுகிறார்கள், நில பிரபுவாத்த கூறுகளின் ஒன்ற்றான் இந்த காவல் முறை இன்று வெறும் கதைதானே. ஆனாலும் மனிதர்கள் தொடர்கிறார்கள் கதையோடு இன்றுவரை.

  இலக்கியத்தில் நான் பார்ப்பது மனிதர்களை, வெவேறு மனிதர்களின் மனங்களும் முகங்களும்.

  மேலும் இந்த நாவலை வாசிக்கும் முன்பு கள்ளர்களை பற்றி எனக்கு அவ்வளவு தொரியாது, அவர்களின் தற்க்கால அரசியல் ஆதிக்கம் எனக்கு தெரியாது அதனாலே என்னால் அதிகம் ரசித்து வாசிக்க முடிந்தது. என்னை பொறுத்தவரை சரித்திரம் என்பதே ஆதிக்க சமுதாயம் தனக்கு தானே எழுதிக்கொள்ளும் ஒரு புதினம்தான் எனவே சரித்திரத்தை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது சரில்லையோ அது போலதான் புதினத்தை அரசியல் பார்வையில் பார்ப்பதும். உண்மையிலே இந்த நாவல் ஒரு அரசியல் பிண்ணனியில் எழுதப்பட்டாதா என்றால் அப்படி எனக்கு தோனவில்லை, மிகவும் கவனமாக யாரும் அரசியல் பன்னிவிடக்கூடாது என மிகுந்த அக்கறையோடு எழுதியாக எனக்கு படுகிறது.


  இந்த நாவலை வாசிக்கும்போது நானும் தாதணுர்காரனாய் மாறியது நிசம். நானும் களவுக்கு போனேன், கஞ்சி குடித்தேன். அந்த உண்ர்வை எனக்கு தந்தது.

  உங்களின் கருத்துகளுக்கு நன்றி.

  Keep Writing

  Cheers
  Nirmal c Bose

  ReplyDelete
 4. ஏறதாழ 1500 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த எழுத்தை முழுமையாக வாசகன் படிக்கமுடிந்ததே இந்த நெடுங்கதைக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகிறேன்.காவலுக்கான தடயங்களாக காலம் விட்டுச் சென்றவை இன்றைய கூர்க்காகளாக கூட இருக்க்க்கூடும் என்று கருதுகிறேன்.இந்த நாவலை ஒரு தொடர்ந்த காலத்தின் ஒரு சிறுகதைகளின் தொகுப்பாகவே பார்க்கிறேன்.மொத்தத்தில் மதுரையை நேசிப்பவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசாக காவல்கோட்டம் இருக்கக்கூடும்.நன்றி.
  வில்லவன்கோதை

  ReplyDelete