Sunday, February 9, 2014

சென்னை குதிரை ரேஸ்

சென்னை குதிரை ரேஸ்


குதிரை ரேஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைத்திருந்தேன். இந்த முறை சென்னை சென்ற பொழுது தற்செயலாக இப்படியான காட்சிகளை காண நேரிட்டது. சாரை சாரையாக ஐம்பது வயதை கடந்த ஆண்கள் சென்னை ரேஸ் க்ளப்பிற்கு முன் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ரேஸ்சில் பணம் கெட்டவதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.
 பணம் கெட்டுடுதவதர்க்கு  முன் ரேஸ் விபரம் அடங்கிய ஒரு சிறு புத்தகத்தை வாங்கிக் கொண்டு மரத்தடியில் வரிசையாக உட்கார்ந்து கொள்கிறார்கள் கையில் பேனாவுடன். புத்தகத்தில் பெங்களூர் கழகத்தா போன்ற  ஊர்களில்  நடக்கும் ரெசின் விபரங்கள் குதிரையின் பெயர், ஜாக்கியின் விபரம், அதன் வெற்றி பெரும் வாய்ப்புகள் போன்ற விபரங்களை வைத்து செமயா கெஸ்    செய்கிறார்கள்.


இதை செய்யும் பொழுது யாரும் இவர்கள் யாரிடமும் பேசுவதில்லை , ஈதோ சூன்யம் வைக்கப்பட்டது போல இருக்கிறார்கள்.  சிரிப்பு சோகம் கவலை என்கிற உணர்வுகளை தாண்டி உறைந்த நிலையில் இருக்கும் இவர்கள் ஒரு வித மாய பிடியிலே இருப்பதாக தோன்றுகிறது.

   லாட்டரி சீட்டு , சீட்டாட்டம் , மது போல இந்த ரேசும். பெரும்பாலோனோர்களின்  ட்ரஸ்சிங்க் லோயர் மிடில் கிளாஸ் அல்லது எழ்மையனவர்களைப் போல இருந்தது.

1 comment: