சுததிர தின டிவி நிகழ்ச்சிகளை முன் வைத்து ஒரு ...................
இந்த சுதந்திர தின நாளில் டிவி நிகழ்ச்சி அருமையாக இருந்தது, பட்டிமன்றம் சொல்லவே வேண்டாம் எப்போதும் அருமையாக இருக்கும் அதுவும் இந்த முறை தலைப்பு உண்மையிலே மிக சிறந்ததாக வைத்திருந்தது பாராட்ட பட வேண்டியது, பட்டிமன்ற பேச்சாளர்கள் பழைய முகங்கள்தான் என்றாலும் சலிப்பே இல்லை, புதியதாக வந்தவர்களும் பழையவர்கள் போன்றே பேசியது மிகுந்த நிம்மதியை தந்தது.. அப்புறம் கலை துறையினரில் பேட்டி எனக்கு பிடிகாவிட்டாலும் அதன் மெருகும் அதிகமாகியுள்ளதை ஒத்து கொள்ள வேண்டும். நடிகை அனுசியா, நடிகை திரிஷா, அமலா பால், ஹாஸ்னிகா போன்ற சமிபத்திய பிரபலங்கள் மட்டுமின்றி கடந்த கால நடிகர் நடிகைகளின் பேட்டியை இந்த சுதந்திர தினத்தில் சேர்த்தது புதியமாக இருந்தது. பேட்டிகளை வீட்டுக்குள் மட்டும் வைக்காமல், அவர்களது கார், தோட்டம், சினிமா செட், பீச் மற்றும் ரோட்டில் வைத்தது புதுமையாக இருந்தது. நடிகர்கள் / நடிகைகளை பொதுஜனங்களோடு சேர்ந்து கொண்டு கொண்டாடிய சுததிர தினம் இந்த நாளின் முத்தாய்ப்பாக இருந்தது. மிக்க நன்றீ.
சுததிர இந்தியாவில் பிரச்ச்னைகளை முன் வைத்து நடத்திய நானா நீனா அம்சமாக இருந்தது, இது இன்றைய தேவையாகவும் பட்டது. இப்படியான நிகழ்ச்சிகள் முன் வந்திருந்தாலும் புதியதாகவே தோன்றியது, பேசியவர்கள் எல்லோரும் அப்படியே நான் பேச வேண்டியதை பேசியதால் இன்னும் ஈர்ப்போடு பார்த்தேன்.
சுந்ததிர இந்தியாவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கிராமத்து கலைகள்தான், அதை வலியுறுத்த ஒலிபரப்பிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் உண்மையிலே சமுகத்தில் அதுவும் இந்த தலைமுறை சமுகத்தினரிடம் இந்த கலையை கொண்டு சேர்க்கும். இந்த முயற்ச்சியை பாரட்ட வார்த்தைகள் இல்லை, எனலாம்.
காமெடி நடிகர், வில்லன் நடிகர், குனசித்திர நடிகர், புதிய நடிகர், பழயை நடிகர், ஹிரோ நடிகர் பேட்டி மட்டுமின்றி புதிய இசை அமைப்பாளர், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களின் பேட்டிக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படியாக நிகழ்ச்சிகளில் டிவி ஒலிபரப்பில் பன்முகத்தனத்தை கொண்டு வந்தது - அந்த நாள் முழுவதுமாக டிவிக்கு முன்னால் உடகார வைத்தது என்றால் அது மிகை ஆகாது.
அதிலும் சின்ன திரை நட்சத்திரங்களின் வெளி நாட்டு கலை நிகழ்ச்சியை இந்த சுததிர தினத்தில் ஒலிப்பரப்பியது எங்களை போன்று தினம் அபிஸ் செல்லுபவர்களுக்கு எவ்வளவு வசதியாக இருந்தது என சொல்ல வேண்டியதில்லை.
இன்னும் நீண்டுகொண்டே செல்வதால், சுதந்திர தினத்தில் ஓலிபரப்பபட்ட திரைபடம் பற்றி சொல்லிவிட்டு முடித்துவிடுகிறேன், மிக சமிபகாலத்தில் வெளிவந்ததாக படங்கள் இருந்ததால், மிகுந்த ரசனையோடு பார்க்க முடிந்தது. இந்த படங்களை தியேட்டருக்கு சென்று பார்திருக்கலாம் என ஒரு நிமிடமும் கூட தோன்றவில்லை. உண்மையிலே மிகுந்த ரசனையான உற்ச்சாகமான சந்தோஷமான சுததிர நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தொலகாட்சிகளுக்கும் வந்தமைக்கு நன்றீ.
இந்த பதிவை சுந்ததிர தினத்திற்க்கு முன் பார்த்திருந்தால் அது கண்டிப்பாக Time Travel என எடுத்து கொள்ளவும். பிற்ப்பாடு பார்க்க நேர்ந்தால் மொக்கையென எடுத்து கொள்ளவும்.
Showing posts with label Post modernism. Show all posts

Tuesday, August 13, 2013
Thursday, February 9, 2012
அரிக்கேன் விளக்கு
அரிக்கேன் விளக்கு:
தெருவில் அரிக்கேன் விளக்கு இருந்தால் அன்னிக்கி வழக்கு இருக்குனு எல்லாத்துக்கும் தெரிச்சிரும், வழக்குனா எதோ கொல வழக்குனு நினைக்ககூடாது, அது கோழி களவு, என்னை கையபிடிச்சி இழுத்தான், ஒரு சான், ஒரு முழம் நிலத்தகராரு, மோள் சந்து பிரச்சனை, சாக்கட பிரச்சனை,தேங்காய் களவு, மாங்கா களவு, ஆட்டு களவு, வைக்க படப்புல தீ, பீ துணி, இப்படி எதாவது இருக்கும். அந்தோணியார் கோவில் குத்து விளக்குக்கு எண்ணெய், வேத கொவிலுக்கு எண்ணெய் அம்மன் கொவிலுக்கு எண்ணெய் என தீர்ப்பு சொலுவாங்க தப்பு பன்னுனவனுக்கு, எவனாவது இளிச்சவாயன் கெடச்சா கட்டி வச்சி உரிப்பாங்க, பெரும்பாலும் வெளி ஊரில் இருந்து பொழக்க வந்தவன், காசு இல்லாதவன், சொந்தக்கார்ங்க அதிகம் இல்லதவங்க தான் அந்த இளிச்சவாய்கள். அது ஒரு நல்ல டைம் பாஸாய் இருக்கும் பாக்க. எதோ வழியில் அங்கு பிரச்சனைகள் தீர்க்கப்படும், மனிதர்களும் அதற்க்கு கட்டுப்பட்டு இருதார்கள்தான் என நினைக்கிறேன். இந்த மாதிரி வழக்குள் வாதாடும் நபரின் சாம்ர்தியமும், அவரின் ஆள், பண பலமும் பெரும்பாலும் வெற்றியை திர்மானிக்கும்,
இந்த முறை எங்கள் ஊரில் இப்போது இல்லை, அதாவது ஊருக்கு போதுவான வழக்கு தீர்க்கும் இடம் இப்போது இல்லை, அம்மன் கோவில்காரர்கள், அந்தோணியார் வேதக்காரங்க, வேதக்காரங்க அவுங்க அவுங்க கோவிலில் திர்த்துக்கொள்கிறார்கள், பலர் பொலிஸ் ஸ்டேசன், நீதி மன்ற்றம் போய் தீர்த்துக்றாங்க.
இதுவரை எங்க ஊரின் சரித்திரத்தில் நடக்காத ஒரு விசியம் நடந்தது ஒரு நாள். வழக்கு இருப்பதை தெரியபடுத்த தெருவில் வைத்த அரிக்கேன் விளக்கை கானவில்லை, எவனோ ஆட்டய போட்டுடான். அன்னிக்கு விளக்கு கானாமல் போனது போல இந்த முறை வழக்கு விசாரிப்பதும் காணாமல் போச்சி.
http://en.wikipedia.org/wiki/Sign_(semiotics)#Postmodern_theory
http://homepage.newschool.edu/~quigleyt/vcs/postmodernism.pdf

Thursday, January 26, 2012
நான் - இந்தியன் - தமிழன் - முறன்
நான் - இந்தியன் - தமிழன் - முறன்:
ஆழமாக யோசித்து பார்த்தால், நான் இத்தியனும் அல்ல தமிழனும் அல்ல அதையும் தாண்டி நான் மனிதன், இப்படி சொன்னா உன்மையில் மொக்கையாய் இருக்குல்ல. நாம் நம்மை பற்றி என்னவாக இருக்க முயன்றாலும் நம்மை மத்தவர்க்ள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக ஆகிவிட்டது. என்னை ஒரு அரபி இந்தியானாய் பார்கிறான், மளயாளி தமிழனாய் பார்க்கிறான். எங்கள் ஊரில் என்னை ஒரு சாதியாய் பார்கிறார்கள், மனைவி, தாய், குழ்ந்தைகள் இவர்கள் எல்லோரும் என்னை வேறு வேறு விதம்மாய் பார்க்கிறார்கள். இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில், இதை பத்தி எழுத தோனுது, நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்பதில் உள்ள அர்தம் என்ன?, அந்த வார்த்தைக்கு நான் என்ன அர்தம் கொடுக்கிறேன் என சிந்திக்க தோனுது. இல்லை இந்த வார்த்தையில் அர்த்தம் எதுவும் இல்லையோ, வெறும் வெற்று கூச்சல்தானோ எனவும் தோனுது. பாகிஸ்தான் வங்கதேசத்தோடு இருந்த இந்தியாவாக இருந்தாலும் “ நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கண்டிப்பா சொல்லிருப்பேன், ஒரு பாகிஸ்தானியும் சொல்லிருப்பான் இல்லியா, ஒரு வங்காளியும் சொல்லிருப்பான். ஆக நாம் வாழும் இந்த நாடின் சிறப்பு எத்தகையாய் இருந்தாலும் நாம் சொல்லிருப்போம், சொல்லுவோம். இதில் நான் கொடுக்கும் அர்தம் என்ன? ஒரு நல்ல இந்தியனாய் வாழுவதும், அந்த பன்முக கலாச்சாரத்தை, பல வித மொழி பேசும் இந்தியாவை விறும்பி நேசித்து வாழ்வதன் மூலம் அதற்க்கு அர்த்தம் கொடுக்கிறேனா? இல்லை இன்று நான் என் சட்டையில் மாட்டியிருக்கும் இந்திய கொடி மூலம் அர்த்த படுத்துகிறேனா? தேச அன்பை ஒரு கொடி வைத்து அர்த்த்படுத்துவதில் என்ன தவறு? வாழ்வின் கொண்ட்டாட்ங்களை திபாவளி அன்று தீபம் ஏத்தி கொண்டாடவில்லையா. இருந்தும் முல்லை பெரியாறு காவிரி தண்ணிர் என தமிழகம் தனித்தும் ஒதுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எனக்கு என்ன இதில் பெருமை, இந்தியனாய். ஒரு வேளை தமிழத்தின் ஆற்று ப்ரிச்சனைக்காக் நான் பெருமைபடவில்லை என்ற்றால் எனது பெயர் என்ன? தேச துரோகியா? இல்லை இதை மறுத்து நான் பெருமைப்பட்டால் தமிழ் இன துரோகியா. புரியல.
இந்தியாவை அதன் பன்முக வாழ்வியலுக்காக் நேசித்து, ஆற்று பிர்ச்சனைக்காக் வெறுத்து வாழ முடியுமா. என்னை இன்னும் இப்படி என்னை வெறுக்க வைப்பதால் என் தேசத்தின் மீது நான் கொண்ட காதலும் பெருமையும் கேள்விகுறியாகிவிடுமா?
நேசம் என்பது ஒத்துபோவது மட்டும்தானா. மறுத்தால் துரோகி, ஒன்னும் சொல்லாமல் இருந்தால் தேசியவாதியா.
இந்தியா என்னும் ஒரு சிந்தனைக்கு அடிபனியாமல் அதை நேசிக்கவும் அதன் பெயரில் பெருமைபடவும் முடியுமா.
<இப்படி முறனாய் சிந்திக்க தோனுது. இந்தியா என்றாலே முறன்தானோ.>
இதை பொறுமையாய் நிங்கள் வாசித்துவிட்டால் முறனை ரசிக்கும் நீங்களும் நானும் இந்தியரகளே, நாம் முறன்களை கொண்ட்டாடுவோம். இந்தியனாய் பெருமை கொள்வோம்.

Monday, December 12, 2011
கொலைவெறி பாடல்
http://musicshaji.blogspot.com/2011/12/blog-post.html
http://www.youtube.com/watch?v=FK_HuclR2k4&feature=related - Santhosh Pandit.
http://www.youtube.com/watch?v=TojTlYNNm9w Wilbur Sargunaraj.
http://www.youtube.com/watch?v=u9MPu8hRUtU : Power Star
எனக்கு எனவோ முன்பு Others என்று புறம்தள்ளியவைகளையும் இன்றைய யூத் ரசிக்கிறார்கள் என படுகிறது. வில்பரை ரசிப்பவர்களிடம் வில்பரிடம் உள்ள இன்னொசென்ஸ் இருப்பதை பார்க்கிறேன். இந்த Others தான் சிறந்தது என்று சொல்லவில்லை அப்படித்தான் என்று அதை படைத்தவர்களும் சொல்லவில்லை, அதை ரசிப்பவர்களும் சொல்லவில்லை. Others என்பதை மறுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்தான் பாவன் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிற மாதிரி இருக்கிறது. This is the Era of others where Wilber, santhosh pandey and Power Star Dr.Srinivasan will rock the scene and break the so called sanctity we have build over Art. பவர் ஸ்டார்க்கு பிறகு வருங்கலத்தில் எந்த ஒரு நடிகரும் தன்னை அந்த ஸ்டார் இந்த ஸ்டார் என கூறிக்கொள்ள தயங்குவான். இதைதான் breaking the sanctity என சொல்கிறேன்.
Tail Piece: கொலைவெறி பாடல் பாடும் யுக்தி கூட வில்பரிடம் தனுஸ் சுட்டதுதான், அந்த ரிதம் நமது பாரம்பரிய பறை, கொலைவெறி என்ற வரி வடிவேல் பிரபலபடுத்தியது, ஆனால் வில்பரிடம் ஒரு கண்ணியம் இருக்கும் ஒரு இன்னொசென்ட் இருக்கும் அது இதில் மிஸ்ஸிங்.

Subscribe to:
Posts (Atom)