Showing posts with label காவல் கோட்டம். Show all posts
Showing posts with label காவல் கோட்டம். Show all posts

Wednesday, April 4, 2012

காவல் கோட்டம் 8 – தாதனூர் ஒரு ஆதி பொதுவுடமை சமுகம்

காவல் கோட்டம் 8 – தாதனூர் ஒரு ஆதி பொதுவுடமை சமுகம்
       தாதனூரை ஆதிக்கிழவி சடச்சியும் கருப்பனும் இனைத்து கெட்டி வைத்துருக்கிறது, அது ஒரு ஆதி பொதுவுடமை சமுகமாகதான எனக்கு தெரிகிறது, தாதனூர்க்காரர்களை கண்களுக்கு தெரியாத எதோ ஒரு சக்தி இனைக்கிறது, நல்லதயும் கெட்டதயும் ஒன்னா சேர்ந்து அனுபவிக்கிறது. ஒருத்தரின் செயல் அனைவருக்கும் தெரிகிற செயலாக இருக்கிறது. ஊருக்காகதான் எந்த ஒரு செயலும் செய்வதாக சொல்லப்படுகிறது, அதுவும் ரேகை சட்டத்தின் பிடியில் இருக்கும்போது ஒவ்வருத்தரும் களவு போவது ஊரில் உள்ள எல்லாருக்காகவும்தானே. என்னாடா களவுக்கு போவது தவறு அல்லவா என அற்சீற்றம் அடைந்தால் அவர்களுக்ககாக ஒரு இரு வரிகள். வேட்டையாடுவது இன்று சட்டப்படி தவறு ஆனால் ஆதி சமுகம் பற்றி ஒரு கதை சொல்ல வேண்டுமென்றால்  வேட்டையாடுவதை பற்றீ எழுதாமல் எப்படி சொல்லமுடியும், அங்கு நமது அறசீற்றம் எப்படி சரியாகும். சரி இந்த அற்ச்சீற்றத்தை முன் வைப்பவர்கள் சாதாரன வாசகர்கள் இல்லை, மார்க்கிசியம் பேசுபவர்கள், தலைவர்கள் என சமுதாய தொண்டு செய்பவர்கள். முடியல!!!!!!!!!!

  மார்க்ஸியம் கணவு கானும் அந்த பொதுவுடமை இதுதானே, இல்லையா? 
நான் வாழும் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் நாம் தொலைத்தது அந்த கண்னுக்கு தெரியாத மனித தொடர்பைத்தானே.


·                     காவல் கோட்டம் 1

·                     காவல் கோட்டம் 2

·                     காவல் கோட்டம் 3

·                     காவல் கோட்டம் 4

·                     காவல் கோட்டம் 5

Monday, April 2, 2012

காவல் கோட்டம் 7 : கலங்க வைக்கும் கடைசி பக்கங்கள்

காவல் கோட்டம் 7 கலங்க வைக்கும் கடைசி பக்கங்கள்
     களவும் காவலும் கூத்தும் ரவுசுமாய் சென்ற கதை கடைசி பக்கங்களில் ரேகை எடுப்பு சட்ட நடவடிக்கையினால் மரணமும் ஒலமுமாய் போனது. போலிசின் அதிரடி நடவடிக்கையால் நிலைகுலைந்துபோன தாதனூர் அடுத்து அடுத்து சரிவை கான்கிறது, பிழைப்புக்கு வழி தெறியாது திகைத்து மிரண்டு போகுது. ஒரு வாசகனாய் இந்த நிகழ்வை கூட வாசித்து தாண்ட முடிந்த போதும், கழுவாயி பெத்த மகன் பொன்னாங்கனன் என்ற டேவில் சாம்ராஜின் டைரி குறிப்புகள் மிகுந்த மன வேதனையும் கன்களில் கலக்கமும் தருவதாய் இருந்தது. அவரது டைரி குறிப்புகளை வாசித்து எளிதில் தாண்டிவிட முடியவில்லை. பல காலத்தையும் நிகழ்வுகளையும் எளிதாய் தாண்டிச்சென்ற புதினம் இந்த ஒரு தனி மனிதனின் டைரி குறிப்பில் நம்மை நிறுத்துகிறது, கேள்வி கேட்கிறது.

    களவுகள் கதைகளாக போனது, ஆங்கனின் அந்த கழு மர வர்னனை  மனிதனின் உள் மனதில் இருக்கும் Angst, Fear, Worry, Anguish இன் மொத்த வெளிப்பாடாக் நான் வாசிக்கிறேன். இந்த நாவலை நான் வாசித்துக்கொண்டுக்கும் போது, எனக்குள் எழுந்த கேள்வி, இந்த தாதணுர் காரர்களில் யாரவது ஒருவனிடமாவது இந்த உணர்வுகள் வெளிவந்திருக்காதா என்பதுதான். வயலு வெலை என எல்லா சனமும் பொழச்சிகடக்கும் போது நாம மட்டும் என் இப்படி காவல் களவ்னு இருக்கனும் என்கிற உணர்வு ஒருதரிடமுமா எற்ப்பட்டிருக்காதா என்கிற கேள்வி, அதை இந்த தருனத்தில் விவரிக்கும் விதம் Herat Touching, சமன மலையில் நடந்த குழுவெற்றத்தை, ரேகை சட்ட நடவடிக்கை மூலம் நடந்த கொடுமையை ஒன்றாய் கற்ப்பனை செய்து எழுதியது ஒரு நாவல் அளவு விவரிக்க கூடி விசியத்தை ஒரே பக்கத்தில் சொல்லியது ஒரு magic. ,

” ஆங்கன் கண் விழித்து பார்த்தான், மலை உச்சியில் கழு மரம் நடப்பட்டிருந்தது, ஆனால் அது வெட்டப்பட்ட பெருவிரல் வடிவத்தில் இருந்தது”

·                     காவல் கோட்டம் 1
·                     காவல் கோட்டம் 2
·                     காவல் கோட்டம் 3
·                     காவல் கோட்டம் 4
·                     காவல் கோட்டம் 5

Saturday, March 31, 2012

சேவ மிதிக்குதப்பா - காவல் கோட்டம் சொல்லும் பெண்ணுரிமை

கல்யானம் ஆகி ஒத்த பிள்ளை பிறக்கல அதுக்குள்ள பஞ்சாயத்தை கூட்டி தீர்த்து விடு என்கிறாள் ஒருத்தி, எதுக்குமா தீர்த்துவிடனம்னு கேட்டா “ சேவ மிதிக்குதப்பா” என்கிறாள். பஞ்சாயத்தில் உள்ள யாருக்கும் அர்த்தம் புரியவில்லை, அப்படினா என்னமா அர்த்தம்ன கேட்க்க, இது கூட அர்த்தம் தெரியாத்விங்கல்லாம் எதுக்கு பஞ்சாயத்து பன்ன விர்ரிங்க என சொந்த ஊருக்கு சென்றால் மனப்பெண். சொந்த ஊர் பஞசாயத்தில் கேட்டதர்க்கும் சேவல் மிதுக்குதப்பா என அந்த பென் சொல்ல அந்த ஊர் பஞ்சாயத்து அவர்களை தீர்த்து விடுகிறது. இந்த சேவல் மிதிக்குதப்பா எனும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? காவல் கோட்ட்த்தில் சொல்லபடுகிறது, அந்த பெண்ணின் கனவன் சேவலை போல ஏறுனதும் ஏற்ங்கிறான்னாம் அதுனால்தான் தீர்த்துவிட கேட்கிறாள் அந்த பெண்.

   உடலுறவில் மகிழ்ச்சி இல்லாத வாழ்வை வாழ அந்த பெண்ணிற்க்கு விருப்பம் இல்லை, அதை அந்த சமுகமும் ஆதரவளிக்கிறது, இது தான் சிறந்த சமுகம். சுப்பர். அருமை.  களவும் , காவலுமாய் இருக்கிற அந்த சமுகத்தில் பெண்ணிற்க்கு இப்படி ஒரு உரிமை. Very Practical Society.

  சபாஸ். காவல் கோட்டம்.!!!!!!!!!!!



  முந்தைய தொடர்புடைய பதிவுகள்:


Friday, March 30, 2012

காவல் கோட்டம் அப்டேட் 5 - இது வரை வாசித்ததில்.....

காவல் கோட்டம் அப்டேட் 5 - இது வரை வாசித்ததில்......

                  660 பக்கங்கள் வாசித்துவிட்டு வாசித்த பக்கங்களை நினைவுப்படுத்தி பார்க்கிறேன், பாண்டிய மண்ணர்களின் முடிவு காலத்தில் ஆரம்பித்து, நாயக்கர்களின் வரவு, முகமதியரின் ஆட்சி, கடைசியில் ஆங்கில கம்பெனி ஆட்சி வரை எத்த்னையோ மாற்றங்களை சொல்கிறது இந்த நாவல். இந்த மாற்றங்கள் மதுரையையும் அதோனோடு தொடர்புடைய பூர்வ குடி மக்களான் கள்ளர்கள்ளும் எப்படி தங்களது வாழ்வை தீர்மானிக்கிறார்கள் என்பதை சில இடங்களில் நுட்ப்பாகவும், சில இடங்களில் மேம்போக்காகவும் சொல்லி இருக்கிறது காவல் கோட்டம்.

                கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, சரித்திர கதையில் எந்த ஒரு கதைத்தலைவனும் இல்லாது இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. மாயாண்டி என்கிற ஒரு பாத்திரம் தவிற வேறு எந்த கதை பாத்திரமும் நமது மனதில் இல்லை, ஒரு கோர்வையான அல்லது கற்ப்பனையான கதையும் இல்லை, அதாவது ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவன் இப்படி இருந்தான் என பழமையான் கதை சொல்முறை இல்லை, கதை என்றால் நாயகர்கள், நாயகிகள், வில்லன், காமடியன், ததுவவாதி என இருக்கனும் என்கிற ஒரு முறை சார்ந்த கதை சொல்லில் இருந்து மாறுப்பட்டு இருப்பது, எழுத்தை சுவாரசியப்படுத்துகிறது, இப்படி எழுதுவதால் கற்ப்பனை திறன் இல்லாத எழுத்து என விமர்சணம் கண்டிப்பாக எழலாம், இரு நூற்றாண்டு வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் போலத்தான் இருக்கிறது.

               வேட்டைக்கு செல்லுதல், களவு, காவல் காத்தல், தாதணுர் ஆண் மக்களுக்கான பயிற்ச்சி முறை, மதுரை கோட்டை இடிப்பு, தாது பஞ்சம்,  என பல விஸய்ங்கள் மிக்ச்சிறந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது. களவு சரியா? தவறா?, கண்டிப்பா தவறுதான் இதில் எந்த மாற்றமும் இல்லைதான் இருந்தும் களவு விவரிப்பு மிக சுவரசியமாக சொல்லப்பட்டதை நான் ரசித்தேன், இந்த கதையின் ஆசிரியரும்  அப்படிதான் ரசித்து எழுதிருப்பார் என நினைக்கிறேன். ஒரு இடந்தில் கூட இந்த ஆசிரியர் களவின் செயலை கண்டித்தோ அதை எதிர்த்தோ அறற்ற்ற்ற்ற்ற்ச்சீற்ற்ற்ற்ற்றம் அடையவில்லை, அதே போல அதை பாராட்டியும் எழுதவில்லை, ஆனால் அந்த களவின் நுட்பத்தை தனது எழுத்தில் சொல்லிருக்கிறார், அது அவரது எழுத்திற்க்கு கிடைத்த வெற்றிதான். அறச்சிற்றம் அரசியல்வாதிக்குதான் படைப்பாளிக்கு தேவை இல்லை. இந்த முறையில் எனக்கு பிடித்த எழுத்தாகுகிறது காவல் கோட்டம்.

               கதையில் அளவுக்கு அதிகமான அவலங்களும் அளவுக்கு அதிகமான கொண்டாடங்களும் இல்லை, அவலங்களை மிக்ச்சாதரனமாக் தாண்டி செல்கிறது, கொள்ளை ஒரு அவலம் அதை செய்யும் கும்பல் பின்னால் செல்கிறது கதை, அதை பறிகொடுத்தவர்க்ளை பற்றி எதுவும் சொல்லாது, இதைதான் அறச்சீற்றம் என சொல்கிறேன், இப்படி அற்ச்சீற்றம் இல்லாது செல்வது சுவாரஸ்சியமாக் இருக்கிறது. இப்படி பட்ட அறச்சீற்றம் ஒரு ஆய்வு கட்டுரையில் கண்டிப்பாக தேவை, அங்கு இரு பக்க ஆராச்சி தேவை, இது ஒரு புதினம் இங்கு இது சாத்தியம் அதை அழகாகவே செய்துருக்கிறார். A Detail study of Strategy and Technique of Kallars in 18th century   என ஆய்வு கட்டுரை கண்டிப்பா சாத்தியமில்லை, இப்படிப்பட்ட மனித செயல்களை ஆராய்வது புதினத்தில் மட்டும்தான் சாத்தியம், இதை புதினத்தில் சொல்வதால் எழுத்தில் எழுதுவதால் அது புகழப்படுவதுமில்லை இகழப்படுவதுமில்லை, மனித மனதின் பல பரினாமங்களையும், விசித்திர செயல்களையும்,  வாழ்வியல் போராட்டங்களையும், அற நெறிக்கான தேவையும், மனித வாழ்வுவின் பொறுப்பும், முகம் தெரியாத மற்ற மனித வாழ்வில் நமக்கு உள்ள  தொடர்பும் நமக்குள் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.



 
            மதுரையை பற்றி கதை சொல்ல ஆரம்பித்து அது கள்ளர்களின் கதையாய் வெளிவந்துருக்கிறது. அதுவும் உணர்ச்சிகளை கூட்டவோ குறைக்கவோ இல்லாது  இருக்கிறது. It is kind of Plastic writing ன்னு கூட சொல்லாம். சப்தம் குறைவாய் மிக முதிர்ச்சியாய் சொல்லப்பட்ட கதை,  ஒரு கூட்டத்தின் செயலை அளவுக்கு அதிகமாக் விமர்சிப்பதும் இல்லை அதை புகழவும் இல்லை, அதை அப்படியே ஒரு பத்திரிகை ரிப்போர்ட் மாதிரி பதிவு செய்திருக்கிறார். இது சரியா, இப்படி எழுதலாமா, இது கற்ப்பனை குறைவான எழுத்துக்களா, இதில் ஃபாண்டசி இல்லையே, மேஜிக் இல்லையே, காதல் இல்லையே, காமம் இல்லையே, ஒரு தனி மனித மன குமறல் இல்லையே, வாசகனை கண் கலங்கவும் மன கலங்கவும் வைக்க வில்லையே வெறும் வறண்ட எழுத்துக்களாய் இருக்கிறதே என பல முறை எனக்குள் தோனியது.

 

      இந்த நாவலின் மிக முக்கியமான ஒரு வரி என்ன என என்னை கேட்டால் நான் இதைதான் சொல்லுவேன், இந்த வரிகள் எனக்குள் என்றும் இருக்கும்.

           “ களவும் காவலும் தாதனூரின் இரட்டை பிள்ளைகள், கஞ்சியை உறுதிப்படுத்த காவலும், காவலை உறுதிப்படுத்த களவும் என்று விதி செய்துகொண்டார்கள்” 

  இந்த வரிகளை வெளிக்கொண்டு வரத்தான் இந்த நாவல்லின் முயற்ச்சியும் அதன் வெற்றியும் இருக்கு. இந்த வரியின் பிரமாண்டம் வடிவம்தான் காவல் கோட்டம்.

  முந்தைய தொடர்புடைய பதிவுகள்:
 

Thursday, March 29, 2012

காவல் கோட்டம் அப்டேட் 4 - மதுரை கோட்டை இடிப்பு

காவல் கோட்டம் அப்டேட் 4 - மதுரை கோட்டை இடிப்பு - அறிவும் - உணர்வும்
      நிறை அமாவாசை அன்று மதுரை கோட்டையை காவல் காக்கும் இருபத்தியோரு  காவல் தெய்வங்களுக்கு இருபத்தியோரு எருமைக்கெடா வெட்டி பலி கொடுத்து, கோட்டை சுவரில் இருக்கும் தெய்வங்களை வெளியேறி வருமாறு கோடாங்கி சாமியாடிகள் பூசாரிகள் ஆடிக்கொண்டுருந்தனர். ஒவ்வரு சாமியும் வெளிவரவதும் அதன் விவரிப்பும் அருமை. கற்களால் ஆன கோட்டையில் மனிதனின் கனவும் நம்பிக்கையும் வாழ்வும் பாதுகாப்பும் இருக்கிறது, மனிதன் அந்த கற்களின் மீது கணவு கான்கிறான், கட்டியெழுப்புகிறான், செதுக்கி வழிபடுகிறான், வரம் பெற விழைகிறான் ஆனால்  அது கல் அது கல்லாகவே இருக்கிறது. பறவையின் எச்சத்தில் முளைவிடும் தாவரத்தின் வேர்கள் மட்டுமே அதை உணருகிற ஆற்றல் பெற்றவை...  இப்படி மனித மனதுக்கும் அறிவிற்க்கும் இடையில் நடக்கும் போராட்டமாக  மதுரை கோட்டை இடிப்பு பற்றி பதிவு செய்துருக்கிறார்.
     இருபத்தியோரு காவல் தெயவங்கள் மதுரையை கல் கோட்டையை கொண்டு காத்து வருகிறார்கள் என்பது மக்களின்  நம்பிக்கை, இந்த கல் கோட்டையையும் மக்களின் மனக்கோட்டையும்  எப்படி உடைக்கபடுகிறது பிரிட்டிஸ் அரசால் என்பதுதான் இந்த பகுதி. ப்ளாக்பர்ன் எனும் ஆங்கில அதிகாரியால் மிக குறைந்த செலவில் அந்த ஊரின் மக்களாலே மிக கூறுகிய காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக தகர்த்து எறியப்படுகிறது மதுரையின் காவல் கோட்டை.

Saturday, March 17, 2012

காவல் கோட்டம் - Update 3

காவல் கோட்டம் - Update  3

 களவை சரி தவறு என சொல்லாது, தீர்ப்பிடாது களவுக்கதை செல்கிறது.  மாயாண்டி ஒரு மிக தேர்ந்த களவுக்காரன், அவனது ஒவ்வரு அவதானிப்பும் மிக நூட்பமான முறையில் சொல்லப்படுவதை மிகவும் ரசித்தேன்.  சின்னான் திறமைசாலி ஆனால் அவனது பதற்றம் அவனை நிபுணத்துவத்திற்க்கு வர விடாது தடுக்கிறது என்கிற அவாதனிப்பு வரை மாயாண்டி நமது மனதில் பதிகிறான்.
  சின்னான் பலியிடும் காட்சி வர்னனை அதில் வரும் சின்னானின் சிறு வயது நியாபகங்கள்,  நல்லய்யாவா? சின்னானா? யார் இவன்? என ஒரு வித identity crisis இருப்பதை உணர்கிறேன். சாவுக்கு பயப்படாத நல்லான் எதற்க்கு ஊரை விட்டு ஒடனும், தனது தாயிற்க்கு வாக்கு கொடுத்ததால் சொல்லமுடியவில்லை என்கிறான் சின்னான். சின்னான் ஊரை விட்டு ஒடிப்போய் தனியாக களவு செய்கிறான். நல்லான் எனும் பெயரை மாற்றி சின்னான என வைத்துக்கொள்கிறான். ஊரும், கொடி வரிசையும், பிறப்பும் மதிப்பை தரும் அந்த சூழலில் தான் யார் என சொல்லமுடியாத ஒரு பதட்டமான சுழலில் சிக்கிதவிக்கும் ஒரு திறமையான திருடன் சின்னான் எனும் நல்லய்யா.
   கண்டிப்பா இந்த உணர்வை இந்த எழுத்துக்கள் எனக்கு கொடுக்கிறது.

Sunday, February 19, 2012

காவல் கோட்டம் அப்டேட் 1:

காவல் கோட்டம் அப்டேட் 1:
                                250 பக்கம் வாசித்து முடிச்சாச்சி. இது நாவலா இல்லை சரித்திர கட்டுரைகளின் தொகுப்பா, சாருவின் நாவல் ஸ்டைலில் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வந்து வந்து செல்கிறார்கள், மீண்டும் மீண்டும் ராஜியத்திற்க்கு இடையில் போர்கள், புதிய ராஜியம், வெள்ளம், பஞ்சம் என சென்று கொண்டுருக்கிறது.
வந்தியதேவனோ, அருள்மொழிவர்மனோ இல்லை,
 பயங்கரமான் உழைப்பு, விபரம் சேகரிப்பதில் செலவிட்டிருக்கனும் ஆசிரியர். பாரட்டுக்கள்.
                        அதிகமான சூழல் வருனனை இல்லை, கதாபாத்திர வருனனை இல்லை, அது பிடித்திருக்கிறது. பெண்னை வருனிப்பதில் கூட ரொம்ப சிக்கனம், அதிகபட்சம் வானத்தில் இருந்து வந்திருப்பாளோ என ஒரு Well Educated / Decent looking / Politically correct வருனனை. - ஒரு அறைக்குள் நடக்கும் ஒரு காட்சியும் இதுவரை இல்லை.

                          சணங்களின் கதையாய் இருக்கும் என நினைதேன், இப்போதிக்கி இது ராஜியங்களின் கதையாகதான் எனக்கு தெரிகிறது.

 அடிகோடு இட்ட இடங்கள்:
            1.   நல்லவேளை முகமதியர்கள், கோவிலை பூட்டியதோடு விட்டார்கள், சமன கோவிலில் சைவர்கள் செய்வதுபோல இல்லை.
              2. கெட்டிக்காரர்கள்தான் இந்த வைதீகர்கள், நிற்க்க இடம் இல்லை விஜயநகரத்தை தவிர..... நம்பிக்கைகளை கதைகளாய் புனைந்து பரப்புவார்கள்.
              3. கங்காவின் உள்மன சிந்தனை வர்னனைகள்.
              4. கனகநுகா மற்றும் அந்த இளைஞசர்களின் நர பலிகள்.
             
 அப்புறம் கதையைஆசிரியர் நமக்குசொல்கிறார், அதன் இடையில் கதாபாத்திரங்களின் உரையாடல் என வருவதால் வாசிக்க சலிப்பு இல்லாது உள்ளதோ?


   சரித்திரத்தை சந்தேகமாக பார்பதுதான் சுவாரஸ்யம், அதுவும் ஒரு புதினம் வழியாக பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக் இருக்கும். புதினதின் முலம் அது சாத்தியம், எனோதெரியவில்லை, காவல் கோட்டத்தை படிக்கும் போது, இதுதான், இப்படிதான் நடந்தது என ஆனித்தரமாக சொல்வது போல, ச்ந்தேகங்களை நிவர்த்தி பன்னும் விதமாய் இருக்கிறது, இதுவரை வாசித்ததில் எனக்கு அப்படி படுகிறது. அது ஆசிரியரின் மொழி நடயா, இல்லை அதுதான் அவரின் நோக்கமா தெரியவில்லை, போக போக புரியும் போல!!!!


 சிரிக்க இதுவரை ஒரு இடமும் இல்லை, சரித்திரத்தில் என்னடா நகைச்சுவை என்பது போல இருக்கு, இருந்தாலும் தொடர்ந்து வாசிக்காமால் விடுவதில்லை.

                                    ஜெய் ஜக்கம்மா.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D